Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் வீட்டை மீட்பதற்காக தன்னுடைய தலைவி பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்து கடிதம் எழுதி இருக்கிறார் மீனா.
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் அம்மா சந்திரா, விஜயாவை கொடுமைக்கார மாமியார் என தன்னுடைய தோழிகளிடம் சொல்லி இருக்க, அவர்களோ விஜயா வீட்டில் இருக்கும்போதே வந்து அதைப்பற்றி பேசுகிறார்கள். இதையெல்லாம், ரூமில் இருந்தபடி ஒட்டுக்கேட்டுவிடுகிறார் விஜயா. பின்னர் சந்திராவிடம் சண்டைபோடும் அவர், இனி நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என கூறுகிறார். பின்னர் முத்து வந்து அவரை சமாதானப்படுத்தி பார்க்கிறார். அதற்கு விஜயா 2 நாட்களில் வீட்டை மீட்டு என்னை கூட்டிட்டு போ இல்லேனா இங்க இருக்க மாட்டேன் என சொல்லிவிடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
இதையடுத்து மறுநாள் தன்னுடைய கார் ஷெட்டிற்கு செல்லும் முத்து, தன்னுடைய கார் மற்றும் டிராவலர் வேன் ஆகியவற்றை விற்பனை செய்ய உள்ள விஷயத்தை கூறுகிறார். அதற்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என விசாரிக்கையில், மொத்தமாக ஏழரை லட்சம் மட்டுமே கிடைக்கும் என கூறிவிடுகிறார்கள். அதில் ஒரு காருக்கு 4 லட்சம் வரை கிடைக்கும் எனவும், மற்றொரு கார் அதிக கிலோமீட்டர் ஓடி இருப்பதால் அதற்கு இரண்டரை லட்சம் வரை கிடைக்கும் எனவும், வேன் மீது கடன் இருப்பதால் அதற்கு 1 லட்சம் தான் கிடைக்கும் எனவும் கூறிவிடுகிறார்கள்.
35
ஸ்ருதிக்கு ரவி கொடுத்த ஐடியா
மறுபுறம் ஸ்ருதியிடம் முத்து கார் எல்லாவற்றையும் விற்க உள்ள விஷயத்தை சொல்கிறார் ரவி. இதைக்கேட்டு ஷாக் ஆன ஸ்ருதி, பாவம் முத்து, வீட்டை மீட்க ரொம்ப கஷ்டப்படுகிறார். ஆனால் இந்த மனோஜுக்கு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லை. பொறுப்பில்லாமல் இருக்கிறார் என திட்டுகிறார் ஸ்ருதி. அப்போது ரவி, ஸ்ருதியிடம் நம்மளும் நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என கேட்க, அதற்கு ஸ்ருதி என்ன செய்யலாம் என கேட்கிறார். உடனே ரவி, நம்ம ரெஸ்டாரண்ட் பெயரில் லோன் வாங்கலாம் என ஐடியா கொடுக்கிறார். அதற்கு ஸ்ருதியும் ஓகே சொல்கிறார்.
இப்படி முத்து மற்றும் ஸ்ருதி இருவரும் வீட்டை மீட்க பல வழிகளில் முயற்சி செய்துகொண்டிருக்க, மீனா ஒரு முட்டாள்தனமான முடிவை எடுத்திருக்கிறார். அது என்னவென்றால், அவர் சிந்தாமணி சொன்னபடி தன்னுடைய தலைவி பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்திருக்கிறார். தன்னுடைய ராஜினாமா கடிதத்தை எழுதிக் கொண்டு அதை கொடுப்பதற்காக மீனா கிளம்புகிறார். அப்போது முத்து அங்கு வந்துவிடுகிறார். அவர் மீனாவை திட்டி, அவரிடம் இருந்த கடிதத்தை பிடுங்கி, அதை கிழித்துப் போடுகிறார். அதைப்பார்த்த மீனாவின் தோழிகள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
55
வேலைக்கு போக முடிவெடுத்த விஜயா
இறுதியாக விஜயா, தன்னுடைய தோழி பார்வதி வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு சென்று நான் ஒரு வேலைக்கு போகப் போகிறேன் என சொல்கிறார் விஜயா. அதற்கு பார்வதி, வேலைக்கு போறது நல்ல விஷயம் தான், அது நமக்கு நம்பிக்கையை கொடுக்கும். ஆனா நீ என்ன வேலைக்கு போவ என விஜயாவிடம் கேட்க, அதற்கு அவர் பதில் சொல்ல முடியாமல் இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்ன நடந்தது? விஜயா வேலைக்கு போகும் முடிவு என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.