Siragadikka Aasai : விஜயா மீது கோபத்தை கொட்டிய ரோகிணி... புது சிக்கலில் மாட்டிக்கொண்ட முத்து

Published : May 26, 2026, 08:40 AM IST

Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி தன்னை திட்டி அசிங்கப்படுத்திய விஜயாவை அறைய வேண்டும் என தன் அம்மாவிடம் கூறி இருக்கிறார்.

PREV
15
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா வீட்டில் தங்கியிருப்பது பிடிக்காத விஜயா, தன்னுடைய தோழி பார்வதியிடம் சென்று தனக்கு வேலை வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு அவர் தன்னோட ஃபிரெண்டு மூலம் ஒரு டான்ஸ் மாஸ்டர் வேலை வந்ததை சொல்கிறார். உடனே விஜயா, தான் அந்த வேலைக்கு செல்கிறேன், அவர்களுடைய நம்பர் கொடுக்குமாறு கேட்க, பார்வதியும் அந்த நபரின் நம்பரை விஜயாவுக்கு கொடுக்கிறார். தான் அனுபவம் வாய்ந்தவர் என்பதால் தனக்கு அந்த வேலை ஈஸியாக கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார் விஜயா. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu : தர்ஷினியை கடத்தியது இவரா? ஈஸ்வரியிடம் வசமாக சிக்கப்போகும் ஜனனி

25
வேலைக்கு போக உள்ள விஜயா

இதையடுத்து வீட்டுக்கு செல்லும் விஜயா, தன்னுடைய கணவர் அண்ணாமலையிடம் தான் வேலைக்கு போக உள்ள விஷயத்தை கூறுகிறார். அதற்கு அவர் அதெல்லாம் வேண்டாம், இத்தனை நாள் விட்டுட்டு இப்போ எதுக்கு என சொல்கிறார். உடனே அவர் நான் உங்களிடம் பர்மிஷன் கேட்கவில்லை, தகவல் தான் சொல்கிறேன் என கூறுகிறார். அப்போது அங்கிருந்த மீனாவின் அம்மா சந்திரா, இப்போ எதுக்கு சம்மந்தி வேலைக்கு போறீங்க என கேட்க, அதற்கு விஜயா, அவர் மூஞ்சில் அடித்தது போல், நீங்க மட்டும் சம்பாதிக்கலாம் நான் சம்பாதிக்க கூடாதா என கேட்கிறார்.

35
தடுக்கும் முத்து

அந்த நேரத்தில் முத்துவும், மீனாவும் அங்கு வருகிறார்கள். அவர்களிடம் விஜயா வேலைக்கு போக உள்ள விஷயத்தை அண்ணாமலை கூறுகிறார். அதைக்கேட்ட முத்து, நீங்க எதுக்குமா வேலைக்கு போகணும் என கேட்க, அதற்கு விஜயா, மத்தவங்க எல்லாம் வேலைக்கு போய் சம்பாதிக்கணும், நான் போய் சம்பாதிக்க கூடாதா, சொந்தமா சம்பாதிச்சா தான் இங்க மரியாதையே கிடைக்குது. எனக்கே இத்தனை வருஷத்துக்கு அப்புறம் இப்ப தான் இந்த யோசனையே வந்திருக்கு. அதையும் கெடுக்க பாக்காதீங்க. நான் கண்டிப்பா வேலைக்கு போவேன் என சொல்லிவிடுகிறார் விஜயா.

45
ஆத்திரத்தில் ரோகிணி

மறுபுறம் ரோகிணி தன்னுடைய வீட்டில் தன் அம்மாவுடன் சேர்ந்து ஒரு சீரியலை டிவியில் பார்த்துக்கொண்டிருக்கிறார். அந்த சீரியலில் மாமியார் மருமகளை கொடுமைப்படுத்த அதற்கு அந்த மருமகள் மாமியாரை பளார் என அறைகிறார். அதைப்பார்த்ததும் கைதட்டி சிரிக்கிறார் ரோகிணி. அவரிடம் இதெல்லாம் தப்பு ரோகிணி என அவருடைய அம்மா சொல்கிறார். எனக்கு வர்ற கோபத்துக்கு என்னுடைய மாமியார் கையில் கிடைச்சா நானும் இப்படி தான் அறைஞ்சிருப்பேன் என சொல்கிறார். இதையெல்லாம் கிரிஷ் ரூமில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.

55
முத்துவுக்கு புது பிரச்சனை

பின்னர் முத்து சவாரி ஒன்றிற்கு செல்ல, அங்கு ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அவருடைய அம்மா முத்துவின் காரில் அழைத்து செல்கிறார். அப்போது அந்த பெண் கூல்டிரிங்ஸ் கேட்க, அவருடைய அம்மா அதை வாங்கி கொடுப்பதாக சொல்லி காரில் இருந்து இறங்கி செல்கிறார். முத்துவும் போன் பேச வெளியே செல்கிறார். இந்த நேரத்தில் காரில் இருந்த அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண், காரில் இருந்து இறங்கி ஆட்டோவில் ஏறிச் செல்கிறார். அவர் ஆட்டோவில் செல்வதை பார்த்து முத்து துரத்தி செல்கிறார். ஆனால் அவரால் பிடிக்க முடியவில்லை. இதன்மூலம் புது சிக்கலில் மாட்டி உள்ளார் முத்து. அதன்பின் என்ன ஆனது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories