Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷினி கடத்தியது யார் என்பதை கண்டுபிடிக்க போலீஸ் களத்தில் இறங்கி உள்ளது.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி, தர்ஷினி காணாமல் போன விஷயத்தை ஈஸ்வரியிடம் வந்து சொன்ன நிலையில், அவருக்கு ஜனனி மீது மேலும் கோபம் அதிகரிக்கிறது. ஆதி குணசேகரனும் தன் பங்கிற்கு ஈஸ்வரியை ஏத்திவிட, அவர் ஜனனி மற்றும் சக்தியிடம் வன்மத்தை கொட்டுகிறார். அகம்பாவத்தில் ஆடுவதாக ஜனனியை சாடும் ஈஸ்வரி, என்ன பண்ணுவியோ தெரியாது இன்னைக்கு மாலைக்குள் என் பொண்ணு திரும்ப வரணும் என சொல்கிறார். அதற்கு ஜனனியும், தன் வயிற்றில் வளரும் குழந்தை மீது சத்தியம் பண்ணி தர்ஷினியை கண்டுபிடிக்க கிளம்புகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
ஜனனி சென்றபின்னர் வீட்டு வாசலிலேயே உட்கார்ந்து கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருக்கிறார் ஈஸ்வரி. அவரை சமாதானப்படுத்தும் நந்தினி, தர்ஷினி எங்கையும் போயிருக்க மாட்டா அக்கா, வந்துருவா என சொல்லிக் கொண்டிருக்க, அப்போது அருகில் இருந்த அறிவுக்கரசி தன் பங்கிற்கு ஏத்திவிடுகிறார். அந்த ஜனனி தான் எங்கயாச்சும் கொண்டு போய் ஒளிச்சி வச்சிருக்கா, அதுக்கு இவளுங்க ரெண்டு பேரும் சப்பக்கட்டு கட்டிட்டு இருக்கீங்க என கொளுத்திப்போடுகிறார். நீ வாய மூடிட்டு இரு என ரேணுகா அவரை எச்சரிக்கிறார்.
35
மதிவதினியை சந்திக்கும் ஜனனி
தர்ஷினியை தேடிக் கண்டுபிடிப்பதாக சொல்லி வீட்டை விட்டு கிளம்பி வந்த ஜனனி, நேராக மதிவதினியை சந்திக்க செல்கிறார். அங்கு சென்று அவரிடம் தர்ஷினி காணாமல் போன விஷயத்தை சொல்ல, அவர் ஆதி குணசேகரன் கடத்திருப்பாரா என கேள்வி எழுப்ப, அதற்கு சக்தி, அவர் கடத்தியிருக்க வாய்ப்பே இல்லை என அடித்துக் கூறுகிறார். ஆதி குணசேகரனும் இல்லேனா வேற யாரு இந்த வேலையை பார்த்திருப்பா என யோசித்திக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கண்ணீர்விட்டு அழும் ஜனனி, யார் இதெல்லாம் பண்ணுகிறார்கள் என்று எனக்கு ஒன்னுமே புரியவில்லை. ஆனால் தர்ஷினியை நான் எப்படியாச்சும் கூட்டிட்டு வருவேன் என கூறுகிறார்.
ஜனனி, அரசு கிரானைட் கம்பெனியில் இருக்கும்போது, அங்கு போலீஸ் உடன் வருகிறார் கதிர், அவர் போலீஸிடம் இந்த ஜனனி தான் எங்க அண்ணன் பொண்ணை கடத்தி வச்சிருக்கா. எங்க அண்ணனுக்கு எதிரான வழக்கு விரைவில் விசாரணைக்கு வருது. அதுக்காக சாட்சி சொல்ல எங்க அண்ணன் பொண்ணை கடத்திருக்கா என குற்றம் சாட்டுகிறார் கதிர். ஆனால் ஜனனி, அதையெல்லாம் மறுப்பதோடு, தனக்கும் அதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என கூறுவதோடு, விசாரணைக்கு ஒத்துழைப்பதாக கூறுகிறார்.
55
விசாரணையில் நடந்தது என்ன?
இதையடுத்து வீட்டுக்கு செல்லும் கதிர், ஈஸ்வரியிடம், ஜனனி அரசு கம்பெனிக்கு சென்ற விஷயத்தை சொல்வதோடு, அங்கு நாங்க போலீஸோடு போனதும் அவர்கள் பம்மியதாக கூறுகிறார். அந்த நேரம் பார்த்து ஜனனியும் போலீஸ் உடன் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்கிறார். போலீஸ் விசாரணையில் என்ன நடந்தது? தர்ஷினியை கடத்தியது யார் என்பதை ஜனனி கண்டுபிடித்தாரா? இல்லையா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.