Karthigai Deepam Serial 03 August 2026 Episode : கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடில், சந்திரகலா, கார்த்தி மற்றும் ரேவதிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுகிறார்.
Sஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கார்த்திகை தீபம்' சீரியல், தினமும் எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இன்றைய எபிசோடிலும் குடும்ப உறவுகளை சோதிக்கும் பல முக்கிய சம்பவங்கள் அரங்கேறவுள்ளன. முந்தைய எபிசோடில், ஊர் பஞ்சாயத்தில் சிவனாண்டிக்கும் முத்துவேலுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட்டது. அந்த சம்பவத்தின் தாக்கமே இன்றைய கதையின் மையமாக மாறுகிறது. மயில்வாகனம் அனுப்பிய வீடியோவை எடுத்துக்கொண்டு ரேவதி, சந்திரகலாவை நேரில் சந்திக்கிறாள்.
அதில் சிவனாண்டி தண்டனை அனுபவிக்கும் காட்சிகளை காட்டியவுடன், சந்திரகலா அதிர்ச்சியடைந்து வேதனையில் ஆழ்கிறாள். இப்படி மனிதாபிமானமின்றி தண்டிப்பது சரியல்ல என்று வருத்தம் தெரிவிக்கிறாள். ஆனால் ரேவதி அதில் நிற்காமல், தவறு செய்தவர்களுக்கு தண்டனை தவிர்க்க முடியாது என்றும், சிவனாண்டி இனிமேல் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறி, சந்திரகலாவின் கோபத்தை மேலும் தூண்டிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கிறாள். அந்த வீடியோ மனதில் பதிந்ததால் அமைதியாக இருக்க முடியாத சந்திரகலா, நேராக சிவனாண்டியை சந்திக்கிறாள்.
அவனது காயங்களை பார்த்து மனம் நொந்த அவள், சுடுநீர் ஒத்தடம் கொடுத்து ஆறுதல் கூறுகிறாள். இந்த தருணம் இருவருக்கும் இடையேயான பாசத்தை இன்னும் வலுப்படுத்துகிறது. இதற்கிடையில் ரேவதி கோவிலுக்கு செல்கிறாள். அங்கு தம்பதியினர் இணைந்து சிறப்பு வழிபாடு செய்வதை பார்த்து அதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்கிறாள். பின்னர் கார்த்தியை சந்தித்து, தாங்களும் கணவன்-மனைவியாக அந்த பூஜையில் கலந்து கொள்ள வேண்டும் என்ற தனது ஆசையை பகிர்ந்து கொள்கிறாள். ஆனால் கார்த்தி, இத்தகைய சடங்குகளில் தனக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை என்று கூறி முதலில் தயக்கம் காட்டுகிறான்.
இருந்தாலும் ரேவதி தொடர்ந்து பேசி அவனை சம்மதிக்க வைக்க முயற்சி செய்கிறாள். இந்நேரத்தில், கார்த்தி மற்றும் ரேவதி நெருக்கமாக பேசிக்கொள்வதை கவனிக்கும் சந்திரகலாவின் மனதில் புதிய சதி உருவாகிறது. இருவரின் உறவை சாமுண்டீஸ்வரியின் பார்வையில் தவறாக சித்தரித்து, அவர்களுக்குள் பிளவை ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்கிறாள். இதற்காக சரியான நேரத்தை எதிர்பார்த்து தனது அடுத்த நகர்வை திட்டமிடுகிறாள்.
சந்திரகலாவின் இந்த புதிய சதி வெற்றிபெறுமா? கார்த்தி - ரேவதி உறவில் விரிசல் ஏற்படுமா? சாமுண்டீஸ்வரி உண்மையை புரிந்துகொள்வாரா? என்ற பரபரப்பான கேள்விகளுக்கு பதில் சொல்லும் வகையில் அடுத்தடுத்த எபிசோடுகள் விறுவிறுப்பாக நகரவுள்ளன.