Siragadikka Aasai Serial 03 August 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகிணி, ஆஸ்பத்திரியில் மனோஜின் பெயரை குழந்தையின் தந்தை என பதிவு செய்துள்ளார்.
விஜய் டிவியின் பிரபல தொடரான சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ரோகிணியின் குழந்தை தொடர்பான உண்மை வெளிவருமா என்ற கேள்வியே தற்போது கதையின் முக்கிய திருப்பமாக மாறியுள்ளது. மனோஜ், பார்வதி மற்றும் சிவன் ஆகியோரின் கண்களில் சிக்காமல் மறைந்து கொண்டிருக்கிறார். அப்போது ஜோதிடரை தொடர்பு கொள்ளும் மனோஜிடம், ஜோதிடர் நேரடியாக அங்கு வந்து, பொது இடத்தில் வீடியோ பதிவு செய்யக் கூடாது என்று எச்சரித்து நிலைமையை சமாளிக்கிறார்.
இதையடுத்து பார்வதியும் சிவனும் அங்கிருந்து கிளம்பிச் செல்கின்றனர். இதனால் மனோஜ் ஒரு பெரிய சிக்கலில் இருந்து தப்பிக்கிறார். இதற்கிடையில், மீனா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அழைத்து வரப்படுகிறார். அவருடன் முத்துவும் மனோஜும் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது முத்து, மருத்துவமனையில் நடந்ததை குடும்பத்தினரிடம் பகிர்கிறார். ரோகிணி மருத்துவ பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு வந்தபோது, குழந்தையின் தந்தை என்ற இடத்தில் 'மனோஜ்' என்ற பெயரையே பதிவு செய்திருப்பதாக முத்து கூறுகிறார்.
குழந்தை பிறந்த பிறகு பிறப்புச் சான்றிதழிலும் அதே பெயர் இடம்பெற்றால், அது சட்டபூர்வ ஆவணமாக மாறிவிடும் என்றும், பின்னர் அதை மாற்றுவது மிகவும் சிக்கலாக இருக்கும் என்றும் அவர் விளக்குகிறார். இந்த தகவலைக் கேட்ட விஜயா கடும் அதிர்ச்சியடைகிறார். மருத்துவமனையில் சொல்லி, மனோஜின் பெயரை அதிலிருந்து மாற்ற முடியுமா என்று கேட்க, அது சட்ட ஆவணம் என்பதால் மாற்ற இயலாது என்று கூறப்படுகிறது. இதையடுத்து விஜயா, வழக்கம்போல ஒரு வித்தியாசமான யோசனையை முன்வைக்கிறார்.
"ஆவணத்தில் உள்ள பெயரை மாற்ற முடியாவிட்டால், மனோஜின் பெயரையே மாற்றிவிடலாமே!" என்று கூற, அங்கிருந்த அனைவரும் சிரிப்பில் மூழ்குகின்றனர். ஏற்கனவே அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் மனோஜின் பெயர் இருப்பதால் அது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதும் தெளிவாகிறது. மற்றொரு பக்கம், மீனாவை சந்திக்க மேஸ்திரி ஒருவர் வீட்டிற்கு வருகிறார். வீட்டின் மாடியில் புதிய அறை கட்டுவது குறித்து அளவீடு செய்து செலவுத் திட்டம் தயாரிக்க அவர் வருகிறார். இந்த ஏற்பாட்டை செய்தது சுவேதா என்பதும் தெரியவருகிறது.
55
காத்திருக்கும் ட்விஸ்ட்
இந்நிலையில், ரோகிணியின் ரகசியம் எப்போது வெளிச்சத்துக்கு வரும்? பிறப்புச் சான்றிதழ் விவகாரம் குடும்பத்தில் புதிய புயலை கிளப்புமா? விஜயாவின் அடுத்த முடிவு என்னவாக இருக்கும்? மனோஜுக்கும் கனகாவுக்கும் இரண்டாவது திருமணம் நடந்த விஷயம் எப்போ வீட்டுக்கு தெரியவரும்? உடல்நலம் சரியில்லாமல் இருந்த அண்ணாமலையின் அம்மா நாச்சியாருக்கு என்ன ஆச்சு? என்ற பல அடுக்கடுக்கான கேள்விகளுடன் சிறகடிக்க ஆசையின் அடுத்த எபிசோடுகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.