Siragadikka Aasai : மனோஜின் இரண்டாவது திருமணம் அம்பலமாகுமா? முத்து-மீனா பார்த்த காட்சியால் எதிர்பார்ப்பு

Published : Aug 11, 2026, 11:08 AM IST

Siragadikka Aasai Serial 11 August 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவிடம் கையும் களவுமாக சிக்கப்போகிறார் மனோஜ். அதன்பின் என்ன ஆச்சு என்பதை பார்க்கலாம்.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், மனோஜ் கனகா வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், அவரிடம் கனகாவின் அம்மா, நாளைக்கு உங்களுக்கும் என் பொண்ணுக்கும் ரிஜிஸ்டர் மேரேஜ் நடக்க உள்ளது என கூறுகிறார். கல்யாணத்தை நாலு செவத்துக்குள்ள நடத்தி முடிச்சிட்டோம். ஆனால் ரிஜிஸ்டர் மேரேஜ் முறைப்படி பண்ணியே ஆகணும். ஏனெனில் எங்களுக்கு செக்யூரிட்டி வேண்டுமல்லவா என கனகாவின் அம்மா சொல்ல, மனோஜ் அதை தடுக்க முயற்சி செய்கிறார். ஆனால் கனகாவின் அம்மா, அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் கண்டிப்பா பண்ணியே ஆகணும் என ஒரே போடாக போடுகிறார்.

Karthigai Deepam : கார்த்திக்கின் பிளான் தெரியாமல் சவால்விட்ட சாமுண்டீஸ்வரி... ரேவதி ரிட்டர்ன் ஆனது ஏன்?

24
சத்யாவை லாக் பண்ணும் சிந்தாமணி

இதையடுத்து மனோஜும் வேறுவழியின்றி, நாளைக்கே ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம் என சொல்கிறார். மறுபுறம் சத்யாவும், ரேகாவும் சிந்தாமணியிடமும் அவரது கணவரிடமும் பேசுகிறார்கள். அவர்கள் இருவரும், சத்யாவை வீட்டோட மாப்பிள்ளையா வச்சிருக்க வேண்டும் என்பதற்காக பல பொய்களை சொல்லி இருந்த நிலையில், தற்போது புது ட்விஸ்டாக, தான் சிகிச்சைக்காக கேரளா செல்ல இருப்பதால், என்னோட பிசினஸை நீ தான் பார்த்துக்கணும் என சத்யாவிடம் கூறுகிறார் ரேகாவின் தந்தை. சத்யாவுக்கு அது பிடிக்காவிட்டாலும் வேறுவழியின்றி அதற்கு சம்மதிக்கிறார்.

Siragadikka Aasai : முத்து சொன்ன அடுக்கடுக்கான பொய்கள்... பாட்டியிடம் சிக்கி படாதபாடுபடும் விஜயா..!

34
மனோஜுக்கு ரிஜிஸ்டர் மேரேஜ்

மறுதினம் மனோஜுக்கும், கனகாவுக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் நடக்கிறது. அதற்கு முன்னதாகவே முத்துவும், மீனாவும், ரிஜிஸ்டர் ஆபிஸுக்கு வருகிறார். முத்து தன் வீட்டு மாடியில் ரூம் கட்டுவதால், அதற்காக முறைப்படி பர்மிஷன் வாங்குவதற்காக முத்துவும், மீனாவும் அங்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் ஆபிஸரை பார்த்து அவரிடம் எல்லா டாக்குமெண்டையும் கொடுப்பதற்காக உள்ளே செல்ல, மனோஜ் மறுபுறம் கனகாவுடன் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்வதற்காக உள்ளே செல்கிறார். அவர்களுடன் ஜோதிடர், சந்தோஷும் வந்திருக்கிறார்கள்.

Siragadikka Aasai : சிந்தாமணியின் சதி வலையில் சிக்கும் சத்யா... அருணுக்கு அதிர்ச்சி கொடுத்த சீதா..!

44
சிக்கப்போகிறாரா மனோஜ்?

அந்த ஆபிஸில் ஒருபக்கம் மனோஜுக்கும் கனகாவுக்கும் ரிஜிஸ்டர் மேரேஜ் நடக்க, அங்குள்ள மற்றொரு அறையில் முத்துவும், மீனாவும் ஆபிஸரிடம் பர்மிஷன் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். மனோஜும் கனகாவும் மாலையும் கழுத்துமாக நின்று கொண்டிருக்க, மறுபுறம் முத்துவும், மீனாவும் ஆபிஸரிடம் கையெழுத்து வாங்கிவிட்டு அங்கிருந்து வெளியே வருகிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன்பின் என்ன நடக்கபோகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அநேகமாக முத்துவுக்கும், மீனாவுக்கும் மனோஜ் மீது சந்தேகம் வர வாய்ப்பு உள்ளது. இவர் ரோகிணிக்கு டைவர்ஸ் கொடுக்காமல் கனகாவை கல்யாணம் செய்துகொண்ட விஷயம் அவர்களுக்கு தெரிய வந்தால், மிகப்பெரிய பிரச்சனை வெடிக்க வாய்ப்பு உள்ளது.

Siragadikka Aasai : ரேகாவின் தந்தைக்கு ஹார்ட் அட்டாக்.... சீதாவுக்கு வந்த டவுட்; சிந்தாமணியின் சதி அம்பலமாகுமா?

Read more Photos on
click me!

Recommended Stories