தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் கார்த்திகை தீபம். தொடர்ந்து பல அதிரடி திருப்பங்களுடன் நகர்ந்து வரும் இந்தத் தொடரில், ரேவதி மீண்டும் வீடு திரும்பியிருப்பது கதைக்கு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய எபிசோடில் ரேவதி சென்ற விமானம் எதிர்பாராத சூழ்நிலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் ரேவதி சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் இடம்பெறுகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் சந்திப்பதால், அந்த தருணம் உணர்ச்சிகரமாக அமைகிறது.
இதற்கிடையில், சாமுண்டீஸ்வரி மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்து கார்த்திக் ரேவதியிடம் அனைத்தையும் விளக்குகிறார். இதுவரை தனக்குத் தெரியாமல் இருந்த பல விஷயங்களை கேள்விப்படும் ரேவதி, அதிர்ச்சியடைவதுடன் சில உண்மைகளையும் புரிந்துகொள்கிறாள். மறுபுறம், விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தவறான தகவலைக் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய முத்துவேலை போலீசார் கைது செய்கின்றனர். தான் எந்த தவறும் செய்யவில்லை என அவர் வாதிட்டாலும், போலியான வெடிகுண்டு எச்சரிக்கை தொடர்பாக போலீசார் அவரை அழைத்துச் செல்கின்றனர்.
இதன் பின்னர் வீட்டுக்கு வரும் ரேவதியை சாமுண்டீஸ்வரி எதிர்கொள்கிறாள். ரேவதி கனடாவுக்குச் செல்லாமல் மீண்டும் வந்தது குறித்து சாமுண்டீஸ்வரி கேள்வி எழுப்புகிறாள். ஆனால் இந்த முறை அமைதியாக இருக்காமல், ரேவதி நேரடியாக பதிலடி கொடுக்கிறாள். "நான் கனடா செல்ல முடியாததற்கு பின்னால் உங்கள் சதித் திட்டம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். கார்த்திக் தான் என்னுடைய கணவர் என்ற உண்மையை இத்தனை நாட்களாக ஏன் என்னிடம் மறைத்தீர்கள்?" என ரேவதி கேள்வி கேட்க, சாமுண்டீஸ்வரி அதிர்ச்சியில் உறைந்து போகிறாள்.
இதுவரை மறைத்து வைத்திருந்த ரகசியம் ரேவதிக்கு எப்படி தெரிய வந்தது? கார்த்திக்-ரேவதி உறவு குறித்த உண்மையை சாமுண்டீஸ்வரி இனியும் மறைக்க முடியுமா? ரேவதியின் கேள்விகளுக்கு சாமுண்டீஸ்வரி என்ன பதில் சொல்லப் போகிறார்? ரேவதியின் இந்த அதிரடி மோதலால் அடுத்தடுத்த எபிசோடுகளில் இன்னும் பல ரகசியங்கள் வெளிச்சத்துக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இன்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதே முக்கிய திருப்பமாக அமைய உள்ளது. பரபரப்பான திருப்பங்களுடன் ‘கார்த்திகை தீபம்’ இன்று இரவு 9 மணிக்கு ஜீ தமிழில் மிஸ் பண்ணாம பாருங்க.