Meena Very Hungry and Feels Isolated in Pandian Stores 2 Serial : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்தில் மற்றும் மீனா இருவரும் தனிக்குடித்தனம் சென்ற நிலையில் இப்போது அவர் தனிமையில் இருப்பதாக ஃபீல் பண்ணும் நிலை வந்துவிட்டது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனா அரசு வேலை பார்ப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அதன் பிறகு செந்தில் ரூ.10 லட்சம் கொடுத்த சொந்த ஊரிலேயே மாமனாரின் உதவியினால் அரசு வேலை வாங்கினார். ஆனால், அது பாண்டியனுக்கு பிடிக்கவில்லை. படித்து முடித்து அரசு வேலை வாங்க வேண்டும் என்று பாண்டியன் ஆசைப்பட்டார். ஆனால், செந்தில் குறுக்கு வழியில் ரூ,10 லட்சம் கொடுத்து வேலையை வாங்கினார்.
26
செந்தில் அரசு வேலை
இது பாண்டியனுக்கு தெரிய வந்தது. அதுமட்டுமின்றி செந்தில் கொடுத்தது, அரசிக்கு திருமண ஏற்பாடுகளுக்காக வைத்திருந்த பணம் என்பது தெரிந்து குடும்பத்தில் பூகம்பம் வெடித்தது. அதன் பின்னர், அந்த பணத்தை மீனா கொடுக்க, பின்னர் மீனாவின் அப்பாவிற்கு தெரியவர அப்போது ஒரு பூகம்பம் வெடித்தது. இந்த நிலையில் தான் பாண்டியன் தனது நிலத்தை விற்று மீனா மற்றும் கதிருக்கு தலா ரூ.10 லட்சம் கொடுத்தார்.
36
ரூ.10 லட்சம்
மீனா அலுவலகத்தில் வாங்கிய ரூ.10 லட்சம் லோனுக்காக அந்த பணத்தை அவரிடம் கொடுத்தார். இதைத் தொடர்ந்து அரசு வேலை பார்க்கும் செந்தில் முதல் மாசத்தில் தடபுடலாக செலவு செய்தார். அதனால், சம்பளம் முழுவதையும் செலவு செய்த நிலையில் அவரிடம் போதுமான பணம் இல்லை. இதனால் பெட்ரோலுக்கு கூட மீனாவிடம் கடன் வாங்கும் நிலை வந்தது.
46
தனிமையில் மீனா
இதைத் தொடர்ந்து மீனாவிற்கு அரசு விடுதி கொடுக்க, அதனை விடாப்பிடியாக பிடித்துக் கொண்ட செந்தில் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று பிளான் போட்டார். அதனை கச்சிதமாக எக்ஸ்கியூட்டும் செய்தார். மாமனார் மூலமாக மீனாவிற்கு தூதுவும் விட்டார். ஆனால், தனிக்குடித்தனம் செல்வதில் மீனாவிற்கு துளி கூட விருப்பம் இல்லாத நிலையில் செந்தில் அப்பா, அம்மாவிடம் சொல்லி நீண்ட பாசப்போராட்டத்திற்கு பிறகு தனிக்குடித்தனம் சென்றார்.
56
செந்தில் மற்றும் மீனா தனிக்குடித்தனம்
பிறகு வீட்டில் பால் காய்ச்சும் விழாவும் நடந்தது. இதில் செந்தில் வீட்டிலிருந்து எல்லோருமே வந்திருந்தனர். இதே போன்று தான் மீனாவின் வீட்டிலேயும் அவரது அப்பாவும், அம்மாவும் வந்திருந்தனர். இதற்கிடையில் பால் காய்ச்சுவதற்கு ரூ.2500 கூட இல்லாமல் மீனாவிடம் கேட்டார். ஆனால், பால் காய்ச்சிய போது அரசிக்கு ரூ.500 நோட்டை வாரி வழங்கினார். எப்படியும் ரூ.2000 கிட்ட இருக்கும்.
வீட்டிற்கு வந்த அனைவரு பால் காய்ச்சி முடிந்த பிறகு ஒவ்வொருவராக புறப்பட்டுச் சென்றனர். இந்த நிலையில் தான் மீனா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். செந்தில் வெளியில் சென்றிருந்த நிலையில் மீனாவிற்கு பசி வேறு. பசியால் தவித்த மீனா கடைசியில் சரவணன் கொடுத்த மளிகை பொருட்களிலிருந்து பிஸ்கட்டை எடுத்து சாப்பிட்டார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் முடிந்தது. இனி அடுத்த வாரம் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம். ஆட்டம் இப்போதுதான் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. இனி நடப்பதை பொறுத்திருந்து பார்ககலாம்.