மீனாவிடம் சிக்கிய டுபாக்கூர் சாமியார்... விஜயாவிடம் சவால்விட்ட முத்து - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்

Published : Mar 23, 2026, 08:45 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் சீதா கோவிலில் சாமி கும்பிடும் போது அவருடைய செயினை ஒரு பெண் திருடிச் சென்றிருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

PREV
15
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து புதிதாக வேன் ஒன்றை வாங்கியிருந்த நிலையில், அதற்கு பூஜை போடுவதற்காக அனைவரும் கோவிலுக்கு வந்திருந்தனர். அப்போது சீதாவும் அங்கு வந்திருந்தார். வேனுக்கு பூஜை போட்ட பின்னர் சீதா கோவிலில் சாமி தரிசனம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவர் கண் இமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் இருந்த தாலி செயினை திருடிக் கொண்டு ஒரு பெண் வெளியே ஓட, அவர் அவசரத்தில் மீனாவை இடித்துவிட்டு செல்கிறார். முக்காடு போட்டிருந்ததால் மீனா அவரின் முகத்தை கவனிக்கவில்லை. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன ஆச்சு என்பதை பார்க்கலாம்.

25
திருடுபோன சீதாவின் தாலி

மீனா கோவிலுக்கு உள்ளே வந்து பார்க்கையில் சீதா அழுதுகொண்டிருக்க, அவர் என்ன ஆச்சு என கேட்கிறார். அப்போது தாலி காணாமல் போன விஷயத்தை சொல்கிறார். வீட்டில் மறந்து வச்சுட்டு வந்துட்டியா என மீனா கேட்க, தான் கோவிலுக்குள் வரும்போது கூட தாலி கழுத்தில் இருந்ததாக சொல்கிறார் சீதா. அப்போது தான் மீனாவும் தன்னை இடித்துவிட்டு ஓடிய பெண் மீது சந்தேகம் வருகிறது. உடனே எதுவும் சொல்லாமல், வேகமாக கோவிலில் இருந்து வெளியே வரும் மீனா, அந்த முக்காடு போட்டு சென்ற பெண்ணை துரத்தி செல்கிறார். அந்த பெண் மீனாவை பார்த்ததும் பதறி ஓடுகிறார்.

35
சேஸ் பண்ணி பிடித்த மீனா

இறுதியாக ஒரு கடை முன் அந்த முக்காடு போட்ட பெண்ணை சேஸ் பண்ணி பிடிக்கும் மீனா, அவரின் முக்காடை விலக்கிவிட்டு பார்க்கும்போது தான் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்தப் பெண் வேறுயாருமில்லை, விஜயா வீட்டில் பூஜை செய்வதற்கு வந்திருந்த சாமியார். நீ ஒரு திருடியாடி என மீனா கேட்க, அப்போது அங்கிருந்து மீனா கையை உதறிவிட்டு மீண்டும் ஓடிவிடுகிறார் அந்த பெண். பின்னர் கோவிலுக்கு சென்று முத்து, அண்ணாமலை, விஜயா ஆகியோரிடம் சீதா தாலி திருடு போன விஷயத்தை சொல்லும் மீனா, அதை திருடியது நம் வீட்டுக்கு வந்த பெண் சாமியார் தான் என்பதையும் போட்டுடைக்கிறார்.

45
விஜயாவுக்கு சவால்

இதைக்கேட்டு ஷாக் ஆன விஜயா, நீ பொய் சொல்லுற, அவங்க எவ்வளவு சக்தி வாய்ந்தவங்க தெரியுமா, நீ மறுபடியும் வீட்டுக்குள்ள வர்றதுக்காக பொய் சொல்ற என கூறுகிறார். இதைக்கேட்ட முத்து, அந்த பொம்பள ஒரு திருடி தான் என்பதை நிரூபித்துவிட்டால் என்ன செய்வீர்கள் என விஜயாவிடம் கேட்கிறார். அவள் திருடி என்பதை நாங்கள் நிரூபித்துவிட்டால் நீங்களே மீனாவை ஆரத்தி எடுத்து வீட்டுக்கு அழைத்து வர வேண்டும் என சவால்விடுகிறார் முத்து. விஜயாவும் அதை ஏற்கிறார். பின்னர் மீனாவை அழைத்துக் கொண்டு அந்த பெண் பிடிபட்ட இடத்துக்கு செல்கிறார் முத்து.

55
முத்துவுக்கு கிடைத்த ஹிண்ட்

அங்கு ஒரு கடை இருந்ததால், அதன் சிசிடிவியில் செக் பண்ணுகிறார்கள். அதில் முகம் சரியாக தெரியவில்லை. இருப்பினும் அந்த பெண்ணின் பர்ஸ் அந்த இடத்தில் விழுந்ததை கண்டுபிடித்து அதை எடுத்து பார்க்கிறார்கள். அந்த பர்ஸில் ஒரு அட்ரஸ் இருக்கிறது. அந்த இடத்துக்கு சென்றபோது முத்துவின் நண்பர் இருக்கிறார். அவரிடம் அந்த அட்ரஸை காட்டி விசாரிக்க, அவர், அது திருட்டு நகைகளை விற்கும் வில்லங்கமான இடம் என கூறுகிறார். அதுமட்டுமின்றி அங்கு நாம் சாதாரணமாக சென்றுவிட முடியாது என முத்துவின் நண்பர் சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிந்தது. இதையடுத்து என்ன ஆனது? முத்து அந்த பெண் சாமியாரை கண்டுபிடித்தாரா? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories