Pandian Stores 2 Serial Next Week Promo Video in Tamil : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியன் வீட்டிற்கு வந்த மாணிக்கம் மகளின் வாழ்க்கை பற்றி கேட்க கோபத்தில் கொந்தளித்த சரவணன் அவரை தாக்கும் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
Pandian Stores 2 Serial Next Week Promo Video in Tamil
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது இப்போது விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டிருக்கிறது. சரவணன் மற்றும் தங்கமயில் இருவருக்குமான விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், சரவணன் தனது கல்லூரி தோழியான ஏற்கனவே காதலித்த அஞ்சலியுடன் மீண்டும் பழக ஆரம்பித்துள்ளார். சரவணன் மற்றும் அஞ்சலி இருவரும் நெருங்கி பழகுவது அவர்களது குடும்பத்திற்கு தெரியாத நிலையில் இப்போது தங்கமயிலின் அப்பா மாணிக்கம் இருவரும் கோயிலில் வைத்து பார்த்துள்ளார்.
மேலும், அஞ்சலியை ஆட்டோர்வில் ஏற்றி விடுவதையும் மறைந்திருந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் தான் மார்ச் 23ஆம் தேதி முதல் 28ஆம் தேதிக்கான இந்த வாரத்திற்கான புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில், மாணிக்கம் மற்றும் பாக்கியம் இருவரும் பாண்டியன் வீட்டிற்கு நியாயம் கேட்க வந்தனர். அவர்களை பார்த்த கோமதி உடனே வீட்டிற்குள் வருவதை தடுத்தார். ஆனால், அவர்கள் அதையும் மீறி வீட்டிற்குள் வந்துவிட்டனர்.
அப்போது பாக்கியம், உங்களது மகன் எவளையோ கூட்டிக்கிட்டு ஊரையெல்லாம் சுற்றிக் கொண்டு இருக்கிறான் என்று பேசிக்கிட்டு இருக்கும் போது சரவணன் வீட்டிற்குள் வந்தார். அப்போது என்னுடைய மகளை கல்யாணம் பண்ணிக்கிட்டு நடுத்தெருவில் விட்டுவிட்டு இப்போது இன்னொருத்தியுடன் சுற்றிக்கிட்டு இருக்கிறீர்களே. என்ன பொறிக்கித்தனம் பண்ணுறீங்களா என்று கேட்டார்.
45
Saravanan and Manickam Fight
மாணிக்கம் மற்றும் பாக்கியம் இருவரும் வீட்டிற்குள் வந்ததை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையிலும், இப்போது இப்படி வந்து சண்டை போடுவதையும் தாங்கிக் கொள்ள முடியாத சரவணன் மாமனார் என்று கூட பார்க்காமல் பளார் பளார் என்று கன்னத்தில் அறைந்தார். அப்போது தங்கமயில் அங்கு வந்தார். இதைத் தொடர்ந்து என்ன நிலைமையில் என்னுடைய மகளை விட்டு விட்டு உங்களது பையன் ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கிறார் தெரியுமா என்று பாக்கியம் ஆரம்பிக்க எதுவும் தெரிய வேண்டாம் என்று சொல்லி மயில் அவர்களை அங்கிருந்து கூட்டிக் கொண்டு சென்றார்.
55
Manickam and Bakkiyam Entry into Pandian House
தனது வீட்டில் வைத்து எதுக்கு அம்மா எனக்கு மேலும் மேலும் சாபத்தை வாங்கி கொடுக்குற என்று கேட்க, உன்னுடைய வயிற்றில் அவருடைய குழந்தை வளர்கிறது என்றார். அம்மா, நான் வேலைக்கு போயி சம்பாதித்து என்னையும், என்னுடைய குழந்தையையும் இந்த வீட்டையும் இனிமேல் நானே பார்த்துக் கொள்கிறேன் அம்மா என்றார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் புரோமோ முடிந்தது. இனி அடுத்த வாரம் முழுவதும் பாண்டியன் குடும்பத்தில் பூகம்பம் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி சரவணன் மற்றும் அஞ்சலியின் காதல் கதைகள் மீண்டும் வெளிச்சத்திறும் வரும் என்று தெரிகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.