கிரீஷால் வந்த வினை... மீனாவிடம் கையும் களவுமாக சிக்கும் ரோகிணி? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

Published : Aug 25, 2025, 09:37 AM IST

விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் கிரீஷ் ரோகிணியை பார்ப்பதற்காக ஸ்கூலில் இருந்து வரும் போது, அவனை மீனா தேடிக் கண்டுபிடிக்கிறார்.

PREV
14
Siragadikka aasai serial Today Episode

விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ், கிரீஷின் ஸ்கூலுக்கு ஸ்பீச் கொடுக்கப் போகும் விஷயம் ரோகிணிக்கு தெரியவருகிறது. அவரை எப்படியாவது தடுக்க வேண்டும் என பிளான் போடும் ரோகிணி, அவர் காரில் செல்லும் போது, தனக்கு மயக்கம் வருவதாக கூறி, மனோஜை அவசர அவசரமாக போன் போட்டு வீட்டுக்கு வருமாறு கூறுகிறார். இதனால் பதறியடித்து வீட்டுக்கு வரும் மனோஜை நாய் கடித்துவிடுகிறது. இதனால் அவரால் ஸ்கூலுக்கு சென்று ஸ்பீச் கொடுக்க முடியாமல் போகிறது. அப்பாடா, மனோஜை ஸ்கூலுக்கு செல்ல விடாமல் தடுத்தாச்சு என நிம்மதியடையும் ரோகிணிக்கு ஒரு போன் கால் வருகிறது.

24
கிரீஷை பார்க்க செல்லும் ரோகிணி

ரோகிணியின் தோழி போன் போட்டு, கிரீஷ், ஸ்கூலில் கலாட்டா பண்ணுவதாகவும், நீ அவனை வந்து பாரு என சொல்கிறார். இதனால் வேறு வழியின்றி கிரீஷை பார்க்க கிளம்புகிறார் ரோகிணி. மறுபுறம் மீனாவுக்கு டெகரேஷன் வேலைக்காக கிரீஷின் பள்ளியில் இருந்து அழைப்பு வருகிறது. அங்கு அவருக்கு போட்டியாக வந்த மற்றொருவர் ரேட்டை மிகவும் கம்மியாக சொன்னதால் அவருக்கு அந்த காண்ட்ராக்ட் செல்கிறது. இதனால் டெகரேஷன் ஆர்டர் கிடைக்காத சோகத்தில் கிரீஷின் ஸ்கூலில் இருந்து கிளம்பி செல்கிறார் மீனா. அப்போது தான் அவர் ரோட்டில் கிரீஷை பார்க்கிறார்.

34
மீனா கண்ணில் சிக்கும் கிரீஷ்

கிரீஷை ஒரு நபர் அழைத்து செல்வதை பார்க்கும் மீனா, உடனடியாக கிரீஷை பிடிக்க ஓடிச் செல்கிறார். அப்போது அங்கிருந்த கார் ஒன்றில் ஏறுகிறான் கிரீஷ். அந்த காரில் ரோகிணி இருக்கிறார். அம்மாவை பார்த்ததும் ஆனந்தத்தில் அவரை கட்டிப்பிடித்து பாச மழை பொழிகிறார் கிரிஷ். தனக்கு இந்த ஸ்கூல் பிடிக்கவில்லை என்றும், தன்னை இங்கிருந்து அழைத்து சென்றுவிடுமாறும் கூறுகிறார் கிரீஷ். இதையடுத்து அவனை சமாதானப்படுத்தும் ரோகிணி, இங்கேயே படி என சொல்கிறார்.

44
கிரீஷை துரத்தி செல்லும் மீனா

கிரீஷ் காரில் ஏறியதை பார்க்கும் மீனா, அந்த காரை துரத்தி வருகிறார். இதையடுத்து என்ன ஆனது? கிரீஷும், ரோகிணியும் கையும் களவுமாக சிக்கினார்களா? ரோகிணி தான் கிரீஷோட அம்மா என்கிற உண்மை மீனாவுக்கு தெரிய வந்ததா? இல்லை இந்த முறையும் ரோகிணி தப்பித்துவிட்டாரா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் தெரியவரும். அதனால் இன்றைய எபிசோடு அனல்பறக்கும் என்பது மட்டும் உறுதி.

Read more Photos on
click me!

Recommended Stories