Pandian Stores 2 This Week Promo Video : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வார எபிசோடுகளில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்ப்பதற்கு முன் கடந்த வாரம் என்ன நடந்தது என்பது பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம். கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறி வந்த தங்கமயில் உண்மையில் கர்ப்பம் இல்லை என்று மருத்துவர கூற ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சி அடைந்தது. கொஞ்சம் கொஞ்சமாக திருந்தி வரும் சுகன்யாவிற்கு இப்போது பழனிவேல் ஆறுதலாக இருந்து வருகிறார். இது தொடர்பான காட்சிகள் கடந்த வாரம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அதில் சுகன்யா தனது முன்னாள் கணவரை கண்டு பயந்து நடுங்கியதை பார்த்து பழனிவேல் அதிர்ச்சி அடைந்தார். அந்தளவிற்கு கொடுமைப்படுத்தியதாக சுகன்யா கூறினார். கதிரின் டிராவல்ஸ் வைப்பதற்கான லோனுக்கு ராஜீ திட்டம் போட்டு வருகிறார். ஒரு கட்டத்தில் சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் பிரியும் நிலை உருவாகிறது. ஜெயிலிருந்து ஜாமீனில் வந்த குமரவேல் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறார்.
23
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இந்த வார புரோமோ வீடியோ
ராஜீ தன்னை கதிர் எப்படியெல்லாம் கவனித்து கொள்கிறார் என்ற உண்மையை குமரவேலுவிற்கு எடுத்து சொல்லி, அவரை அவரது வாழ்க்கையை பற்றி மட்டும் யோசிக்க சொல்கிறார். இப்படியெல்லாம் கடந்த வாரத்தில் நடந்த நிலையில் இனி இந்த வாரம் என்ன நடக்கும் என்பது பற்றி பார்க்கலாம். பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலைப் பொறுத்த வரையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.
33
உச்சகட்ட கோபத்தில் மீனா
அதில் படிக்கட்டில் தண்ணீர் இருப்பது தெரியாமல் வழுக்கி கீழே விழுந்து பாண்டியன் நடக்க முடியாமல் ஆட்டோவில் வீட்டிற்கு வருகிறார். இதைத் தொடர்ந்து மீனாவின் அப்பாவும், அம்மாவும் வீட்டிற்கு வந்து குல தெய்வ கோயிலுக்கு சென்று பொங்கல் வைக்க வேண்டும். அதற்கு மாப்பிள்ளையையும், மீனாவையும் அழைக்கிறார்கள். அப்போது மாப்பிள்ளைக்கு பணம் கொடுத்து உதவியது பாண்டியன் இல்ல, உங்களுடைய மகள் தான் என்று சுகன்யா சொல்லவே கோபத்தில் மீனாவின் அப்பா அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.
தனது அப்பா கோபித்துக் கொண்டு செல்வதைக் கண்ட மீனா, ஆத்திரத்தில் மீனாவுடன் சண்டையிடுகிறார். அதோடு அடுத்த வாரத்திற்கான எபிசோடுகள் முடிந்தது. இனி ஒவ்வொரு நாளும் என்ன நடக்கிறது என்பது பற்றி பொறுமையாக பார்க்கலாம்.