கூமாப்பட்டி என்று சொன்னால் தெரியாத ஆள் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அந்த கிராமம் உலகமெங்கும் பேமஸ் ஆனதற்கு முக்கிய காரணம் அந்த ஊரைச் சேர்ந்த தங்கப் பாண்டி தான். அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கூமாப்பட்டியில் உள்ள குளத்தில் நீராடியபடி வெளியிட்ட வீடியோ செம வைரல் ஆனது. அதில், ஏங்க... கூமாப்பட்டிக்கு வாங்க என அவர் சொல்வது செம ரீச் ஆனது. அதுமட்டுமின்றி தன்னுடைய ஊரில் தண்ணீர் சர்பத் மாதிரி இருக்கும் என்று சொல்லி, சொல்லி அந்த ஊரையே பேமஸ் ஆகிவிட்டார். இதையடுத்து ஏராளமானோர் கூமாப்பட்டி நோக்கி படையெடுக்க தொடங்கினர்.
24
கூமாப்பட்டி தங்கப்பாண்டி
தனி ஒருவனாக தன்னுடைய ஊரையே புரமோட் செய்து பேமஸ் ஆக்கிய தங்கப்பாண்டிக்கு, அடுத்தடுத்த ஜாக்பாட் அடித்த வண்ணம் உள்ளது. அவரை அண்மையில் ஒரு நகைக்கடை விளம்பரத்திற்காக அழைத்திருந்தார்கள். அங்கும் தன்னுடைய பாணியில் பேசியில், அந்தக் கடைக்கு விளம்பரம் செய்து கொடுத்தார். இதனால் அந்தக் கடையின் வியாபாரமும் அதிகரித்தது. பின்னர் துணிக்கடை விளம்பரத்திலும் தோன்றினார் தங்கப்பாண்டி. இப்படி இன்ஸ்டாகிராம் மூலம் அசுர வளர்ச்சி கண்ட தங்கப்பாண்டி தற்போது அடுத்தகட்டத்துக்கு சென்றிருக்கிறார். அவர் தொலைக்காட்சியிலும் களமிறங்கி இருக்கிறார்.
34
ஜீ தமிழ் நிகழ்ச்சியில் களமிறங்கிய தங்கப் பாண்டி
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அண்மையில், சிங்கிள் பசங்க என்கிற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதில் ஒரு போட்டியாளராக கூமாப்பட்டி தங்கப்பாண்டியும் கலந்துகொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக ஆலியா மானசா, ஸ்ருதிகா மற்றும் பார்த்திபன் உள்ளனர். இந்நிகழ்ச்சியை மணிமேகலை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிகழ்ச்சியிலும் கூமாப்பட்டி தங்கப்பாண்டி கலக்கி வருகிறார்.
சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் கூமாப்பட்டி தங்கப்பாண்டிக்கு ஜோடியாக சீரியல் நடிகை சாந்தினி பிரகாஷ் பங்கேற்று இருக்கிறார். இதில் இந்த வாரம் ரீ-கிரியேஷன் சுற்று நடைபெற்று இருக்கிறது. அதில் சாந்தினியும், தங்கப் பாண்டியும் இணைந்து சூர்ய வம்சம் படத்தில் இடம்பெறும் ‘சலக்கு சலக்கு சரிக சேலை சலக்கு சலக்கு’ பாடலை ரீ கிரியேட் செய்துள்ளனர். அந்தப் பாடலில் சாந்தினி பிரகாஷ் உடன் ஜோடியாக தங்கப்பாண்டி ஆடியுள்ளதை பார்த்த நெட்டிசன்கள் இந்த கூமாபட்டியானுக்கு... எங்கயோ மச்சம் இருக்குடா என கமெண்ட் செய்து வருகின்றனர்.