எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரி வழக்கை விசாரிக்க வந்துள்ளதாக கூறி புலிகேசி என்பவர் ஆதி குணசேகரனின் வீட்டுக்கே வந்து அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டார். குறிப்பாக ஜனனியிடம் விசாரிக்க முனைப்பு காட்டிய அவர், ஜீவானந்தத்தை பற்றி அவரிடம் துருவி துருவி கேள்வி கேட்டார். ஆனால் ஜனனி அவரைப் பற்றி தனக்கு தெரியாது என்றும் அவர் ரொம்ப நல்லவர் என்றும் கூறுகிறார். பின்னர் ஒரு லெட்டரை எடுத்து காட்டி, இது ஜீவானந்தத்தை சுட்டுப்பிடிக்க வந்த உத்தரவு என கூறுகிறார். இதைக்கேட்டு ஜனனி, நந்தினி, ரேணுகா ஆகியோர் ஷாக் ஆகிறார்கள். அதன்பின் இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
24
யார் இந்த புலிகேசி?
ஈஸ்வரி வழக்கை விசாரிக்க வந்துள்ள ஸ்பெஷல் போலீஸ் அதிகாரி என்று வீட்டில் வந்து அனைவர் முன்னிலையிலும் பில்டப் விட்டுச் சென்ற புலிகேசி, உண்மையில் ஒரு போலீஸ் அதிகாரியே கிடையாதாம். அவர் அறிவுக்கரசி செட் அப் பண்ணிய ஆள் தானாம். அந்த டுபாக்கூர் போலீஸ் வீட்டை விட்டு சென்றதும், அவருக்கு போன் போட்டு பேசும் அறிவுக்கரசி, அந்த ஜீவானந்தம் உயிரோடவே நடமாட கூடாது என சொல்கிறார். அதற்கு புலிகேசியும் செஞ்சிருவோம் என சொல்கிறார். அதுமட்டுமின்றி ஜீவானந்தத்தை தேடி தன்னுடைய டீமுடன் கிளம்பி உள்ள புலிகேசி, அவரை கொலை செய்யவும் திட்டமிடுகிறார்.
34
ஜீவானந்தத்திற்கு ஈஸ்வரி அனுப்பிய வாய்ஸ் நோட்
மறுபுறம் ஜீவானந்தம் தன்னுடைய பழைய நம்பரில் இருந்து ஜனனிக்கு போன் போடுகிறார். அப்போது அவரிடம் எங்கு இருக்கிறீர்கள்? பார்கவி திரும்ப வந்ததை என்னிடம் சொல்லி இருக்கலாமே? என கேட்கிறார் ஜனனி. அதற்கு அவர், அதற்கான சூழல் தனக்கு அமையவில்லை என்றும், தற்போது தாங்கள் இருவரும் ஒரு பாதுகாப்பான இடத்தில் தான் இருக்கிறோம் என கூறுகிறார். மேலும் ஈஸ்வரியின் இந்த நிலைமைக்கு யார் காரணம் என நினைக்கிறீர்கள் என கேட்கிறார் ஜீவானந்தம். அதற்கு அவர், நிச்சயமாக குணசேகரன் அல்லது அறிவுக்கரசியாக இருக்கும் என சொல்கிறார். உடனே ஆதி குணசேகரன் தான் ஈஸ்வரியை அடித்து காயப்படுத்தி இருக்கிறார் என்கிற உண்மையை போட்டுடைக்கிறார் ஜீவானந்தம்.
ஈஸ்வரி தன்னுடைய பழைய நம்பருக்கு ஒரு ஆடியோ மெசேஜ் அனுப்பி இருப்பதாகவும், அதில், எனக்கு என்ன ஆனாலும் அதற்கு காரணம் குணசேகரன் மட்டும் தான் என்று கூறி இருக்கிறார் ஈஸ்வரி. இதைக்கேட்டு ஷாக் ஆன ஜனனி, உடனே தனக்கு அந்த ஆதாரங்களை அனுப்பி வைக்குமாறு கேட்கிறார். ஆனால் அந்த ஆடியோவை அனுப்புவதில் பல சிக்கல்கள் இருப்பதாக கூறும் ஜீவானந்தத்திடம், அறிவுக்கரசியிடம் இது சம்பந்தமாக ஏதோ ஒன்று இருப்பதாக கூறுகிறார் ஜனனி. அதை சீக்கிரம் கைப்பற்றுமாறு கூறுகிறார் ஜீவானந்தம். இதனால் இனி வரும் எபிசோடுகள் அனல்பறக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.