சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியின் கர்ப்பத்திற்கு காரணமானவரை கண்டுபிடிக்க முனைப்பு காட்டும் அன்பு, ஆனந்திக்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்துகொடுத்த ரகுவை தேடி கண்டுபிடித்தது மட்டுமின்றி அவனை சரமாரியாக தாக்கினார். பின்னர் அன்புவிடம் இருந்து ரகு தப்பித்து ஓடியபோது விபத்தில் சிக்கிவிடுகிறான். இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ரகு, சுயநினைவை இழந்துவிடுகிறான். அதுமட்டுமின்றி அவனுக்கு சுயநினைவு திரும்ப ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டும் என டாக்டர் சொல்கிறார். அதற்காக பணம் சேகரிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் அன்பு. இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
24
துளசியிடம் நகைகளை கேட்கும் அன்பு
ரகுவின் ஆபரேஷனுக்காக துளசியின் உதவியை நாடுகிறார் அன்பு. அவர் கேட்டதும் தன்னிடம் இருக்கும் நகைகளை எல்லாம் எடுத்துக் கொடுக்கிறார் துளசி. அப்போது குறுக்கே வரும் அன்புவின் அம்மா, எதற்காக நகைகளை வாங்கிச் செல்கிறாய். இவ்ளோ நகையை கொண்டு செல்லும் அளவுக்கு உனக்கு என்னடா அவசரம். தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறியா.. இல்ல, உன்னோட கல்யாணத்துக்கு செலவு பண்ணப் போறியா என கேட்கிறார். பின்னர் கோபப்படும் அன்புவிடம், அத்தைக்கிட்ட நான் பேசிக்கிறேன். நீ இத எடுத்துட்டு போய் பிரச்சனையை சரி பண்ணு என சொல்கிறார் துளசி.
34
உண்மையை உடைக்கும் அன்பு
இடையே குறுக்கிடும் துளசியின் அப்பா, இவ்ளோ நகை தேவைப்பட்டால் பிரச்சனையும் அவ்வளவு பெரிதாக தான் இருக்கும். எங்களுக்கெல்லாம் பயம் வருவது நியாயம் தானே என கேட்கிறார். பின்னர் வேறு வழியின்றி உண்மையை உடைக்கிறார் அன்பு. ரகுவின் ஆபரேஷனுக்கு 3 லட்சம் தேவைப்படுவதாகவும் அதனால் தான் இந்த நகையை கேட்டதாகவும் கூறுகிறார் அன்பு. இதைக்கேட்டதும் ஷாக் ஆன அன்புவின் அம்மா... ஓஹோ அதுதான் விஷயமா, அவளுக்கு நியாயத்தை நிலைநாட்ட தான் மகாராஜா இந்த குடும்பத்தில் இருந்து அள்ளி கொடுக்கப் போறீங்களா என சரமாரி கேள்விகளை கேட்கிறார்.
பின்னர் அன்புவின் வழிக்கே வரும் அவரது தாய், நகையை கொடுக்க சம்மதிக்கிறேன். ஆனா ஒரு கண்டிஷன் என சொல்கிறார். அந்த கண்டிஷன் என்னவென்றால், துளசியை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு இந்த நகையெல்லாம் எடுத்துட்டு போ என சொல்கிறார். இதனால் செய்வதறியாது திக்குமுக்காடி நிற்கிறார் அன்பு. தாயிடம் சத்தியம் செய்துவிட்டு துளசியின் நகையை அன்பு வாங்குவாரா? இல்லை அந்த நகையே வேண்டாம் என்று செல்வாரா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் தான் பார்க்க வேண்டும். மறுபுறம் ஆனந்தியும் பணத்தை ரெடி பண்ணும் வேலைகளில் இறங்கி இருக்கிறார்.