எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனிக்கு போன் போட்டு பேசிய மதிவதினி, ஆலிவர் தேவசகாயம் பற்றி அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறி உள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரி கோமாவில் இருந்து மீண்டு வீட்டுக்கு வந்ததை அடுத்து, அவர் ஆதி குணசேகரனிடம் பேசிவிட்டு, பின்னர் மாடிக்கு சென்று தன்னுடைய தங்கைகளிடம் பேசினார். அப்போது ஜனனி தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொன்னதும், மிகுந்த சந்தோஷம் அடைந்த ஈஸ்வரி, உன்னுடைய குழந்தையை நான் தான் வளர்ப்பேன் என கூறி இருந்தார். இதையடுத்து பார்கவியை அழைத்து ஈஸ்வரி பேசும்போது, அவரை தன்னுடைய உறவுக்கார பெண் என சொல்லி அறிமுகப்படுத்தினார் நந்தினி. கல்யாணம் முடிந்து கணவர் துபாய் போனதால் இங்கு இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
24
ஜனனிக்கு போன் போட்ட மதிவதினி
தர்ஷனுக்கும் பார்கவிக்கும் திருமணம் ஆன விஷயம் ஈஸ்வரிக்கு தெரியாமலேயே இருக்கிறது. இதனால் வெளியே சென்று ஃபீல் பண்ணும் தர்ஷன், பார்கவியை நினைத்து கண்ணீர் சிந்துகிறார். பார்கவியை தன் மகள் போல் பார்த்துக் கொள்வேன் என ஈஸ்வரி கூறியதை கேட்டு மனமுடைந்து போனதாக கூறுகிறார். அப்போது அங்கு வரும் ஜனனி, தர்ஷனை சமாதானப்படுத்துகிறார். அந்த நேரம் பார்த்து மதிவதினியிடம் இருந்து போன் வருகிறது. அப்போது ஈஸ்வரி குணமடைந்த விஷயம் பற்றி சொல்கிறார் ஜனனி. அதைக்கேட்ட மதிவதினி சந்தோஷமடைகிறார். பின்னர் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என ஜனனியிடம் கூறுகிறார்.
34
ஆலிவர் பற்றி வெளிவந்த உண்மை
யாரும் இல்லாத இடத்துக்கு வந்துவிட்டு தனக்கு போன் போடுமாறு மதிவதினி சொன்னதும், விறுவிறுவென வீட்டை விட்டு வெளியே செல்லும் ஜனனி, ரோட்டில் நின்று போன் போடுகிறார். அப்போது அவரிடம் ஆலிவர் தேவசகாயம் பற்றி பேசும் அவர், பாண்டியன் நடத்திய விசாரணையில் ஆலிவர் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் சில வெளிவந்துள்ளதாக கூறி இருக்கிறார். ஆலிவர் உடல் உறுப்புகளை திருடி விற்பனை செய்வது மட்டுமின்றி, போதைப் பொருட்களையும் சட்டவிரோதமாக விற்று வருவதாகவும் கூறுகிறார். இதைக்கேட்டு அதிர்ச்சியடையும் ஜனனி, அவனை எப்படியாவது பிடிக்க வேண்டும் மேம் என கூறுகிறார்.
அதுமட்டுமின்றி ஆலிவருக்கு பின்னணியில் ஒரு பெரிய ஆள் இருக்கிறான். அவனையும் கண்டுபிடிக்க வேண்டும் என கூறி உள்ளார் மதிவதினி. இதற்காக கொற்றவையிடமும் சீக்ரெட்டாக விசாரிக்குமாரு சொல்லி இருப்பதாக கூறி உள்ளார் மதிவதினி. அநேகமாக ஆலிவர் இருக்கும் இடம் பற்றிய தகவல்களை ஜனனி, மதிவதினிக்கு சொல்ல வாய்ப்பு இருக்கிறது. அவர் மட்டும் சொன்னால், மதிவதினி அடுத்தக்கட்ட ஆக்ஷனில் இறங்கிவிடுவார். அப்போது ஆலிவர் பிடிபட்ட பின்னர் அவருடைய பாஸ் பற்றிய உண்மையும் வெளிச்சத்துக்கு வரும். அது தன்னுடைய முன்னாள் கணவர் ராணா தான் என்கிற உண்மை தெரிந்தால் மதிவதினியின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.