சரவணன் - அஞ்சலி காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த பாண்டியன் - எதிர்பாரா ட்விஸ்ட் உடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

Published : Mar 30, 2026, 09:58 AM IST

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சரவணன் - அஞ்சலியை விரும்பும் விஷயம் அறிந்த பாண்டியன் அவருக்கு ஒரு கண்டிஷன் உடன் ஓகே சொல்லி உள்ளார். அதைப்பற்றி இங்கே பார்க்கலாம்.

PREV
15
Pandian Stores 2 Serial Today Episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் லஞ்ச பணத்தை வைக்கும் போது மீனாவிடம் சிக்கிக் கொண்ட செந்தில், அது தான் அப்பாவுக்கு கொடுப்பதற்காக பேங்கில் இருந்து எடுத்து வந்தேன் என கூறி இருக்கிறார். மறுநாள் காலையில், செந்திலை, அழைத்துச் செல்லும் மீனா, அந்த பணத்தை உன்னோட அப்பாகிட்ட கொடுத்திடலாம் என சொல்ல, அதற்கு அவர் இப்போ வேண்டாம் என சொல்லிப் பார்க்கிறார். ஆனால் மீனா, உடனே அவரிடம் கொடுத்துவிடு என கூறுகிறார். இதையடுத்து இருவரும் ஜோடியாக பாண்டியன் வீட்டுக்கு செல்கிறார்கள். அங்கு சென்று அவரிடம் பணத்தை கொடுக்கிறார்கள்.

25
பாண்டியனிடம் பணத்தை கொடுத்த செந்தில்

அந்த பணத்தை பாண்டியன் வாங்கிக் கொண்ட நிலையில், அப்போது அங்கு வரும் கோமதி, அவன் பணத்தை கொடுத்தா நீங்க உடனே வாங்கிடுவீங்களா உங்க புள்ள தான அவன் என கேட்கிறார். அதையெல்லாம் பொருட்படுத்தாத பாண்டியன் பணத்தை உள்ளே கொண்டுபோய் வைக்க செல்ல, அவரிடம் சரியா இருக்கானு எண்ணி பார்த்துக்கோங்க என கூறுகிறார் மீனா. உன்மேல நம்பிக்கை இருக்கு என கூறி உள்ளே கொண்டு போய் வைக்க கிளம்புகிறார். பின்னர் சாப்பிட்டுக் கொண்டிருந்த கதிரை திரும்பி பார்த்து, அவன் சொன்னபடி பணத்தை கொடுத்துட்டான். நீ எப்படி என கேட்கிறார். சீக்கிரம் கொடுக்குறேன் என அவர் கூறுகிறார்.

35
சரவணனிடம் ஓப்பனாக கேட்ட பாண்டியன்

இதையடுத்து கடைக்கு செல்கிறார் பாண்டியன், அப்போது அங்கு சரவணன் கஷ்டமருக்கு சரக்கு போட்டுக் கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து அஞ்சலியிடம் இருந்து சரவணனுக்கு போன் வருகிறது. இதை பாண்டியன் பார்த்துவிடுகிறார். பின்னர் தான் டீ குடிச்சுட்டு வர்றேன் என சரவணன் சொல்ல, அவரிடம் உனக்கு அஞ்சலியை புடிச்சிருக்கா என ஓப்பனாக கேட்கிறார் பாண்டியன். ஏற்கனவே அந்த புள்ளைய உனக்கு புடிச்சு நான் வேண்டாம்னு சொன்னதெல்லாம் நியாபகம் இருக்குடா, அவளை கல்யாணம் பண்ணிருந்தா உன்னோட வாழ்க்கை நல்லா இருந்திருக்கும். நான் தான் உன் வாழ்க்கையை கெடுத்துட்டேன்னு நினைக்குறியா என பாண்டியன் கேட்கிறார்.

45
மகனுக்கு பாண்டியன் போட்ட கண்டிஷன்

அதற்கு சரவணன், அப்படியெல்லாம் இல்லப்பா, என்மனசுல காதலிக்கும் என்னமே இல்லப்பா, எதற்சியா பார்த்தோம் பேசுனோம் அவ்வளவுதான்பா என கூறுகிறார். இப்போதைக்கு அந்த புள்ளைக்கு வாக்கு கொடுத்துறாத, கொஞ்ச நாள் பொறு, டைவர்ஸ் கேஸ் முடியட்டும். இந்த விஷயத்தில் அப்பா உன்கூட இருப்பேன். ஆனால் ஒன்னு நீ அவசரப்படக் கூடாது. கோர்ட்ல கேஸ் முடியட்டும் அதுவரைக்கு அந்த புள்ளைய பாக்குறேன்னு கோவிலுக்கு போற வேலையெல்லாம் வேணாம்டா என சொல்கிறார் பாண்டியன். அதற்கு சரவணனும் சரிப்பா என சொல்கிறார்.

55
அரசி - குமாரை கோர்த்துவிட்ட காந்திமதி

மறுபுறம் அரசியை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு செல்லும் காந்திமதி, அங்கு வாசலையே பார்த்துக் கொண்டிருக்கிறார். எதுக்கு அங்கேயே பாக்குற என அரசி கேட்க, ஒரு முக்கியமான ஆளை வரச் சொன்னேன். இதோ வந்துட்டான் என சொல்கிறார். யார் என்று பார்த்தால், குமார். இவர எதுக்கு வரச்சொன்னீங்க என அரசி கேட்க, என் செல்லப் பேரனை பார்க்கணும் போல இருந்துச்சு அதான் வரச் சொன்னேன். சரி நீங்க பேசிக்கிட்டு இருங்க நான் பூசாரியை பார்த்துட்டு வந்திடுறேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்து செல்கிறார் காந்திமதி. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.

Read more Photos on
click me!

Recommended Stories