சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா தன்னை ஆள் வைத்து அடித்த விஷயத்தை அனைவர் முன்னிலையிலும் போட்டுடைத்துள்ளார் ரோகிணி. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பாக்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், விஜயாவும், மனோஜும் ரோகிணியை கடையில் ஆள் வைத்து அடித்ததால், அவர் மாதர் சங்கத்தில் புகார் கொடுக்க, அங்கிருந்து ஒரு பெண் விஜயா வீட்டுக்கே வருகிறார். அவர் விஜயாவிடம் எதுக்காக ரோகிணியை அடிச்சீங்க என கேட்க, அதற்கு விஜயா நான் அடிக்கவே இல்லை என சமாளிக்கிறார். பின்னர் ரோகிணியை அழைத்து என்ன நடந்தது என்பதை சொல்லச் சொல்கிறார். அதற்கு ரோகிணி, விஜயா தன்னை சாட்டையால் அடித்ததாகவும், வலி தாங்க முடியாமல் தான் கத்தியும் அவர்கள் மாறி மாறி நிறைய அடி அடித்ததாக கூறுகிறார்.
25
உண்மையை உளறிய மனோஜ்
அப்போது குறுக்கிடும் மனோஜ், அதான் அடிச்சிட்டு இருக்கும்போதே மயக்கம் போட்டு விழுந்துட்டியே என தன் வாயாலேயே உண்மையை ஒத்துக்கொள்கிறார். பின்னர் விஜயாவும் நான் அடிக்கவில்லை, ஒருவரை அழைத்து வந்து அடிக்க வைத்ததாகவும் சொல்கிறார். இதைக்கேட்ட அந்தப் மாதர் சங்கப் பெண், உங்க வாயால் உண்மையை வர வைக்க வேண்டும் என்பதற்காக தான் ரோகிணியை இப்படி சொல்ல சொன்னேன் என கூறுகிறார். பின்னர் அண்ணாமலை விஜயாவையும், மனோஜையும் திட்டுகிறார். உங்களுக்கு மனசாட்சியே இல்லையா, ஒரு பொண்ணை இப்படி அடிச்சிருக்கீங்களே என சாடுகிறார்.
35
விஜயாவுக்கு ஆப்பு
அப்போது அந்த பெண், ரோகிணியை நீங்கள் கொடுமைப்படுத்தியதாக நான் கோர்ட்டில் வாதாடப் போகிறேன். உங்களுக்கு டைவர்ஸே கிடைக்காது. இந்த வழக்கில் உங்களுக்கு சிறை தண்டனை கிடைக்கும் என விஜயாவை எச்சரிக்கிறார். பின்னர் ரோகிணி, மனோஜிடம் சென்று ஐ லவ் யூ மனோஜ் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். இந்த விவகாரத்தை முத்துவும், மீனாவும் மனோஜின் டைவர்ஸ் கேஸை நடத்தும் வக்கீல் கிருஷ்ணாவிடம் கூறுகிறார்கள். அவர் அவ்வளவு தான் உங்க அம்மாவுக்கு அறிவே இல்லையா, இப்படி போய் சிக்கிருக்காங்க. இனி டைவர்ஸ் கிடைக்குறது கஷ்டம் என கூறுகிறார்.
மறுபுறம் விஜயா, சிந்தாமணியிடம் பேசுவதற்காக பார்வதி வீட்டுக்கு செல்கிறார். அங்கு சென்று ரோகிணியை அடித்த விஷயத்தை பற்றி சொல்லும் அவர், இதில் இருந்து தப்புவது எப்படி என சிந்தாமணியிடம் கேட்க, அதற்கு சிந்தாமணி, அந்த மாதர்சங்கப் பெண்ணை நைசாக பேசி வரவையுங்க. அவங்களுக்கு பணம் கொடுத்து சமாளிச்சிடலாம் என கூறுகிறார். எவ்வளவு பத்தாயிரமா, 20 ஆயிரமா என விஜயா கேட்க, அதற்கு சிந்தாமணி, இந்த சின்ன தொகையெல்லாம் அவங்க வாங்க மாட்டாங்க அவங்களுக்கு 1 லட்சம் கொடுக்கணும் என சொல்ல, அவ்வளவு பெரிய தொகைக்கு நான் எங்க போவேன் என விஜயா கேட்கிறார்.
55
சிக்கும் விஜயா
பின்னர் பார்வதியிடம் பணம் கேட்கிறார். இதுமாதிரி லஞ்சம் கொடுக்குறதுக்கு நான் உதவமாட்டேன் என சொல்லிவிடுகிறார். உடனே சிந்தாமணி நான் அந்த பணத்தை ரெடி பண்ணித் தருகிறேன் என கூறுகிறார். இதன்பின் பணத்தை ரெடி பண்ணிவிட்டு, ஸ்ருதியின் ரெஸ்டாரண்டுக்கு அந்த மாதர்சங்கப் பெண்ணை வர வைத்து பேசும் விஜயா, அவரிடம் ரோகிணி செய்த ஃபிராடு வேலைகளை சொல்லிப் பார்க்கிறார். அவர் அதற்கு செவி சாய்க்காததால், தன் பையில் இருந்து பணத்தை எடுத்து அந்த மாதர் சங்கப் பெண்ணின் பையில் வைக்கிறார் விஜயா. இதை அவர் விஜயாவுக்கே தெரியாமல் வீடியோ எடுத்துவிடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிந்தது. அநேகமாக லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறி விஜயா கைது செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. அது நடக்குமா என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.