வீட்டில் மினி ஒயின்ஷாப்பே இருக்கு... ரச்சிதா-வுக்கு ரொம்ப புடிச்ச சரக்கு எது தெரியுமா?

Published : Mar 30, 2026, 08:20 AM IST

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பேமஸ் ஆன நடிகை ரச்சிதா மகாலட்சுமி, தன்னுடைய வீட்டில் உள்ள மினி பார் செட்டப்பை முதன்முறையாக காட்டி இருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
15
Mini Bar in Rachitha Mahalakshmi Home

ரச்சிதா மகாலட்சுமி யூடியூப் சேனலுக்காக ஹோம் டூர் சுற்றிக் காட்டி இருக்கிறார். அப்போது வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அறையையும் சுற்றிக் காட்டிய அவர், ஒரு ரூமுக்குள் சென்றபோது மட்டும் மிகவும் குஷியாகிவிட்டார். அந்த ரூமில் உள்ள ஒரு கபோர்டு அருகே சென்ற அவர், இதற்குள் இருப்பது மருந்து, இது அப்பப்போ நம்முடைய வாழ்க்கைக்கு தேவைப்படும் என்பதால் இதனை டானிக் ரூம் என தான் அழைப்பதாக கூறினார். சரி அந்த கபோர்டுக்குள் மருந்து ஏதாச்சும் இருக்கும் போல என பேட்டி எடுக்க வந்த ஆங்கரும் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார். அதன்பின்னர் ரச்சிதா அந்த கபோர்டு கதவை திறந்த பின்னர் தான் ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது.

25
அப்பாவின் நினைவாக பார்

ரச்சிதா மருந்து என சொன்னது வேறெதுவுமில்லை, மது தான். வீட்டுக்குள் ஒரு மினி பார் செட் அப்பையே வைத்திருக்கிறார் மகாலட்சுமி. இந்த பார் செட் அப்பை வீட்டுக்குள் வைத்ததற்கான காரணத்தை கூறினார் ரச்சிதா. அவருடைய தந்தை ஒரு மதுப்பிரியராம். அவர் வீடு கட்டினால் அங்கு சரக்குக்கென தனி இடம் வைக்க வேண்டும் என சொல்லுவாராம். அவர் மறைந்துவிட்டதால், அவரின் நினைவாக இந்த பார் செட் அப்பை வீட்டில் அமைத்திருப்பதாக கூறி உள்ளார் ரச்சிதா. அந்த கபோர்டில் விதவிதமான ஒயின்களை வாங்கி அடுக்கி வைத்திருக்கிறார் ரச்சிதா. அதில் பெரும்பாலானவை வெளிநாட்டு சரக்குகள் தான்.

35
ரச்சிதாவுக்கு பிடித்த சரக்கு

பின்னர் ஆங்கர் ஏதாவது ஒன்றை எடுத்துக் காட்டுமாரு சொல்ல, ஒரு சிகப்பு கலர் மூடியுடன் கூடிய சுலா என்கிற பிராண்டின் ஒயின் பாட்டிலை எடுத்த ரச்சிதா, இது தனக்கு மிகவும் பிடித்த பிராண்ட் என கூறினார். உடனே அந்த ஆங்கர் ரச்சிதா எனக்கு கொடுத்த பரிசு என சொல்ல, சரி ஓகே வச்சிக்கோங்க, நான் நிறைய வாங்கி வந்து வச்சிக்கிறேன் என கூறினார் ரச்சிதா. அவரிடம் ஒயின் ரெகுலரா குடித்தால் ஸ்கின் பளபளனு ஆகும்னு சொல்றாங்களே உண்மையா என அந்த ஆங்கர் கேட்க, அதற்கு அவர், பளபளனு ஆகலாம்; ஆனால் ரெகுலரா குடிச்சா வெயிட்டு போடும் என தெரிவித்துள்ளார்.

45
ரச்சிதா சொல்லும் டிப்ஸ்

வாரத்திற்கு ஒருமுறை குடிக்கலாம். அதுவும் பாட்டில் ஃபுல்லா குடிக்க கூடாது, இரண்டு அல்லது மூன்று கிளாஸ் குடிக்கலாம் என கூறியுள்ளார். பின்னர் ஒரு கிரீன் கலர் பாட்டிலை எடுத்த ரச்சிதா, இது மலேசியாவில் இருந்து எடுத்து வந்தது, இதன் பெயர் சோஜு, அண்மையில் அங்கு சென்றபோது வாங்கி வந்ததாக தெரிவித்தார். தான் வாங்கியதிலேயே விலை உயர்ந்த சரக்கை எடுத்துக் காட்டிய ரச்சிதா, அதன் விலை 25 ஆயிரம் இருக்கும் என தெரிவித்தார். அந்த சரக்கை தான் அமெரிக்கா சென்றிருந்தபோது வாங்கி வந்ததாக கூறிய அவர், இதையெல்லாம் என்னுடைய அண்ணன் தான் யூஸ் பண்ணுவான் என தெரிவித்தார்.

55
ரசிகர்கள் அதிர்ச்சி

ரச்சிதாவின் இந்த ஹோம் டூர் வீடியோ பார்த்த ரசிகர்கள், பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். ரச்சிதா வீட்டுல சத்தியமா இதை எதிர்பார்க்கவில்லை என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். ஒருவரோ, இதில் பெரும்பாலான சரக்கு லேடீஸ் குடிக்குறது தான் என பதிவிட்டு இருக்கிறார். ஒருவரோ, அப்பா நினைவாக வைத்திருப்பதாக கூறி நீங்க ஜாலியா என்ஜாய் பண்றீங்க என கமெண்ட் போட்டுள்ளார். ஒருவர், இந்த ஒயின்ஷாப் எத்தன மணிக்கு தொறக்கும் என காமெடியாக கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர், ரெண்டு பேருக்கு இடையே தான் போட்டியே ஒன்னு டாஸ்மாக் பார் மற்றொன்று ரச்சிதா பார் என கிண்டலடித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories