Siragadikka Aasai : பணத்துக்கு ஆசைப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தாலிகட்டும் மனோஜ்... காத்திருக்கும் செம ட்விஸ்ட்

Published : Jun 28, 2026, 12:16 AM IST

Siragadikka Aasai Serial Twist : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் பணத்துக்கு ஆசைப்பட்டு, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணான கனகாவை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

PREV
14
Siragadikka Aasai Serial Twist

சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோ முத்துவின் அண்ணனான மனோஜ், ரோகிணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ரோகிணி தன்னுடைய உண்மையான பெயர் கல்யாணி என்பதை மறைத்ததோடு மட்டுமின்றி, தனக்கு ஏற்கனவே கல்யாணமாகி குழந்தை இருக்கும் விஷயத்தையும் மறைத்து ஏமாற்றி தான் கல்யாணம் செய்தார். மேலும் தான் ஒரு பணக்காரி என்றும் பில்டப் விட்டதால், விஜயா அவரை மனோஜுக்கு கல்யாணம் பண்ணி வைத்தார். ஆனால் போகப்போக தான் ரோகிணியின் உண்மை முகம் தெரியவந்தது. இதனால் அவரை வீட்டை விட்டு துரத்திவிட்டது மட்டுமின்றி அவரை டைவர்ஸ் செய்யும் வேலைகளிலும் இறங்கி இருக்கிறார் மனோஜ்.

Siragadikka Aasai : கிரிஷுக்காக மனம்மாறிய ரோகிணி... ரேகா - சத்யா கல்யாணத்துக்கு நாள் குறித்த முத்து..!

24
மனோஜை தேடி வந்த வரன்

விஜயாவும் தன் மகன் மனோஜுக்கு சீக்கிரம் இரண்டாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிற வேலைகளில் இறங்கி இருக்கிறார். ஆரம்பத்தில் மனோஜுக்கு டைவர்ஸ் கொடுக்கவே மாட்டேன் என ஒற்றைக் காலில் நின்ற ரோகிணி, பின்னர் மனோஜிடம் நீ எனக்கு தர வேண்டிய 5 லட்சத்தை கொடுத்தால் உனக்கு டைவர்ஸ் கொடுத்துவிடுகிறேன் என கூறி இருந்தார். அதனால் குஷியான மனோஜ், அந்த 5 லட்சம் பணத்தை ரெடி பண்ணுவதற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறார். இந்த நேரத்தில் மனோஜுக்கு ஒரு கோடீஸ்வர வீட்டு வரன் வந்துள்ளது.

34
பணத்துக்கு ஆசைப்பட்டு ஓகே சொன்ன மனோஜ்

மனோஜின் கடைக்கு ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண் அடிக்கடி வந்து கடையை சுற்றிப் பார்த்துவிட்டு ஆப்பிள் ஜூஸ் குடித்துவிட்டு செல்வார். அந்த பெண்ணின் அம்மா கேட்டுக் கொண்டதால் அவர் வரும்போதெல்லாம் அவரின் போக்குக்கு விட்டுவிடுவார் மனோஜ். ஒரு நாள் அந்த பெண் கடைக்கு வந்த போது அவருடைய அம்மா, மனோஜிடம் அவளுக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. அவளுக்கு கல்யாணம் நடந்தால் மனநல பிரச்சனை சரியாகிடும்னு டாக்டர் சொல்லிருக்காங்க. அதனால நீங்க என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோங்க. என்கிட்ட கோடிக்கணக்குல சொத்து இருக்கு. அதெல்லாம் உங்களுக்கு தான் என சொன்னதும் மனோஜுக்கு ஆசை வருகிறது.

44
மனோஜுக்கு திருமணம் முடிந்தது

பின்னர் தன்னுடைய ஜோதிடர் ஒருவரிடமும் கருத்துகேட்டார் மனோஜ். அவரும் ஓகே சொல்ல, மனோஜ் அந்த திருமணத்துக்கு தயாராகிவிட்டார். மனோஜுக்கு அந்த பெண்ணுடன் திருமணம், நடைபெற்ற எபிசோடும் படமாக்கப்பட்டு இருக்கிறது. அதில் கனகா கழுத்தில் தாலியோடு திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மனோஜுக்கு ரோகிணி டைவர்ஸ் கொடுத்த பின்னர் மனோஜ் இந்த திருமணத்தை செய்துகொண்டாரா? அல்லது அதற்கு முன்பே அந்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories