Pandian Stores 2 Serial 27 June 2026 Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் குமாரிடம் உனக்கு அரசியை கல்யாணம் பண்ணி வைப்பேன் என கூறி உள்ளார் அப்பத்தா.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் குமார், அரசி கார்த்திகேயனுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கடுப்பாகி, அவருடன் சண்டையிட்டிருந்தார். இதனால் கடுப்பான அரசி, குமாரை திட்டி அனுப்பிவிடுகிறார். இதையடுத்து வீட்டிற்கு வந்த குமார், அப்பத்தாவிடம் தனக்கும், அரசிக்கும் கல்யாணம் பண்ணி வைக்குறேன்னு சொன்னியே என்ன ஆச்சு என கேட்க, அதைக்கேட்ட சக்திவேல் அதெல்லாம் நடக்கவே நடக்காது என கூறிவிடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
இதையடுத்து குமாரிடம் பேசும் அப்பத்தா, அரசியைவிட்டா உனக்கு வேற யாரோடையும் கல்யாணம் நடக்காது. நான் சொன்னபடி அரசியை உனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்குறேன். எப்படியாச்சும் கல்யாணம் பண்ணி வைப்பேன். ஆனால் நீ கல்யாணம் பண்ணிகிட்டு அந்த புள்ளைய கஷ்டப்படுத்தக் கூடாது. நல்லபடியா பாத்துக்கணும். அதை நீ செய்வியா என அப்பத்தா கேட்க, அதற்கு குமாரும் மண்டையாட்டுகிறார். அரசியை கல்யாணம் பண்ணுனா நான் வேற ஒரு ஆளா கண்ணியமா நடந்துப்பேன்னு எனக்கு சத்தியம் பண்ணி கொடு என அப்பத்தா கேட்க, குமாரும் சத்தியம் செய்கிறார்.
35
காந்திமதியை எச்சரிக்கும் பழனி
அதையெல்லாம் அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த பழனி, உன் பொண்ணே உன் பேச்சை கேட்காம கல்யாணம் பண்ணிட்டு போயிடுச்சு, நீ அதோட பொண்ணுக்கு உன் விருப்பப்படி கல்யாணம் பண்ணி வைக்கப்போறியா என பழனி கேட்க, அதற்கு அப்பத்தா, குமார் வருத்தப்படுறத என்னால பார்க்க முடியல டா என சொல்கிறார் அப்பத்தா. அக்காவும், மச்சானும் எப்படி சம்மதிப்பாங்க, கொஞ்சமாவது யோசிச்சியா என பழனி கேட்கிறார். அதற்கு அதெல்லாம் நான் பாத்துக்குறேன் என கூறுகிறார் அப்பத்தா. ஆஹா பிரச்சனைக்கு ஆத்தா ரெடியாகிடுச்சு போலயே என மனசுக்குள்ளேயே சொல்லிக் கொள்கிறார் பழனி.
மறுபுறம் செந்தில் தன்னுடைய மாமனாரை சந்தித்து, லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை வந்த விஷயத்தை சொல்கிறார். அதுமட்டுமின்றி இனிமேல் நான் லஞ்சமே வாங்க மாட்டேன் என்றும் கூறுகிறார் செந்தில். அதற்கு அவர், இந்த மாதிரி நடக்குறதெல்லாம் சாதாரணம் தான் மாப்பிள்ள, நீங்க மாட்டலேல, இனிமேல் கொஞ்சம் உஷாரா இருங்க, இதுவரைக்கு ஆபிஸுக்குள்ள வச்சு வாங்கிட்டு இருந்தீங்க. இனிமே வெளிய வச்சு வாங்குங்க, எந்த பிரச்சனையும் வராது எனக் கூறி அவரை பிரையின் வாஷ் பண்ணுகிறார்.
55
மீனாவுக்கு தெரியவரும் உண்மை
இதையடுத்து வீட்டுக்கு வரும் செந்தில், உன் அப்பாவை போய் பார்க்க போனேன் என சொல்ல, அவர் ஆபிஸில் நடந்ததை எல்லாம் சொன்னீங்களா என கேட்கிறார். அதற்கு ஆமாம் என சொல்லும் செந்திலிடம் நீங்க லஞ்சம் வாங்குன விஷயத்தையும் சொன்னீங்களா என கேட்கிறார். உடனே செந்திலும் அவருக்கு தான் எல்லாமே தெரியுமே என சொல்லிவிட, அப்போ எங்க அப்பா சொல்லி தான் நீங்க லஞ்சம் வாங்கிருக்கீங்க என கேட்க, செந்திலும் ஆமாம் என சொல்லிவிடுகிறார். இதனால் புது பிரச்சனை வெடித்துள்ளது. அதைப்பற்றி இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.