ரோகிணியின் ஆட்டம் ஆரம்பம்... சொத்தை பிரிக்க சொல்லி சண்டை போடும் மனோஜ் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

Published : Dec 28, 2025, 09:55 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் வாங்கிய கடனுக்காக வீட்டையே அடமானம் வைக்கும் சூழல் வந்துள்ளது. இதனால் வீட்டில் பிரச்சனையும் வெடித்துள்ளது. இதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Siragadikka Aasai Serial Twist

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் தன்னுடைய பிசினஸில் ரோகிணி மூலம் கிடைத்த மிகப்பெரிய ஆர்டரை மலைபோல் நம்பி இருந்தார். அந்த ஆர்டர் முழுமையாக தன் கைக்கு வரும் முன்னரே, கடன் வாங்கி புதிதாக ஆபிஸ் போட்டு அலப்பறை செய்தார். ஆனால் மனோஜுக்கு ஆர்டர் கொடுத்த பில்டர் லேடி திடீரென கோமா ஸ்டேஜுக்கு சென்றதால், தற்போது பொறுப்பில் உள்ள புதிய அதிகாரி, மனோஜுக்கு அந்த ஆர்டரை கொடுக்க மறுத்துவிடுகிறார். இந்த ஆர்டரை நம்பி கடனெல்லாம் வாங்கிய மனோஜ், தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடிப்போய் இருக்கிறார்.

24
வீட்டை அடகு வைத்த அண்ணாமலை

இந்த நிலையில், மனோஜுக்கு பிசினஸ் டெவலப் பண்ணுவதற்காக 30 லட்சம் கடன் கொடுத்த நபர், அவருக்கு ஆர்டர் கேன்சல் ஆன விஷயம் தெரிந்ததும் வீட்டுக்கு வந்து தன்னுடைய பணத்தை கேட்கிறார். கொஞ்ச நாளில் திருப்பி கொடுத்துவிடுகிறேன் என மனோஜ் சொல்லியும் கேட்காத அந்த நபர், இந்த வீடு சொந்த வீடு தான் அதை அடமானத்திற்கு எழுதிக் கொடுக்குமாறு சொல்கிறார். இதற்கு முத்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆனால் அண்ணாமலை அவரை சமாதானப்படுத்தி, அந்த அக்ரிமெண்டில் கையெழுத்து போடுகிறார். இதையடுத்து அந்த கடன் கொடுத்த நபர் கிளம்பிச் செல்கிறார்.

34
சொத்தை பிரிக்க சொன்ன மனோஜ்

இதையடுத்து வீட்டில் பெரிய சண்டையே வெடிக்கிறது. உன்னால தான் டா இந்த நிலைமை என முத்து, மனோஜை அடிக்கப் பாய்கிறார். அவரை விஜயா தடுத்து நிறுத்துகிறார். பின்னர் ஸ்ருதி மற்றும் ரவியும் மனோஜிடம் ஆர்டர் முழுமையாக கைக்கு வரும் முன்னேர் ஏன் நீ கடன் வாங்கி பிசினஸை டெவலப் பண்ணுன என கேட்கிறார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாமல் திணறிப் போய் நிற்கிறார் மனோஜ். அனைவரும் அவரை திட்டியதால் டென்ஷன் ஆன மனோஜ், அதிரடி முடிவு ஒன்றை எடுக்கிறார். தனக்கு சேர வேண்டிய சொத்துக்களை பிரித்து எழுதிக்கொடுத்துவிடுமாறு சொல்கிறார்.

44
அடுத்தடுத்த ட்விஸ்ட் என்ன?

மனோஜ் இப்படி பேசியதைக் கேட்டதும் அனைவரும் அதிர்ந்து போகிறார்கள். ஒருவேளை சொத்தை எழுதி வாங்கினால் மனோஜ், ரோகிணியோடு தனிக்குடித்தனம் போகவும் வாய்ப்பு இருக்கிறது. கூட்டுக் குடும்பமாக இருக்கும்போதே பல்வேறு ஃபிராடு வேலைகளை செய்யும் ரோகிணி, தனியாக சென்றுவிட்டால், என்னென்ன கூத்தெல்லாம் செய்யப்போகிறாரோ என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. மனோஜ் கேட்டபடி அண்ணாமலை சொத்துக்களை பிரித்து அவருக்கு எழுதிக் கொடுப்பாரா? மனோஜ் வாங்கிய கடனை எப்படி திருப்பி கொடுக்கப்போகிறார்? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories