
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நேற்றைய எபிசோடில் ஜனனியில் தமிழ் சோறு புட் டிரக் பிசினஸ் தொடங்க இருந்த இடத்துக்கான ஓனர், கடைசி நேரத்தில் இடம் தர முடியாது என சொல்ல, ஜனனி டென்ஷன் ஆகி அவரிடம் சென்று கெஞ்சி கேட்கிறார். ஆனால் அவர் இறங்கி வர மறுக்கிறார். ஆதி குணசேகரனின் பேச்சைக் கேட்டு தான் அந்த ஓனர் இப்படியெல்லாம் செய்கிறார் என்று ஜனனிக்கு தெரியவருகிறது. அவரிடம் அக்ரிமெண்ட் போட்டாச்சு என சொல்லியும் அதையெல்லாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார் ஜனனி. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
பின்னர் அந்த ஓனரிடம் நீங்கள் என்ன தடுத்தாலும் இங்க வந்து நாங்க கடையை திறப்போம் என்று சவால்விட்டு செல்கிறார் ஜனனி. அதற்கு அந்த ஓனர், போமா... போ உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ என கூறுகிறார். பின்னர் ஜனனியோடு சக்தியும் வெளியே வரும் போது, அங்கு ஓரமாக நின்றுகொண்டிருந்த ஆதி குணசேகரனின் ஆள் மீது சக்தி இடித்துவிடுகிறார். அப்போது அந்த நபர் கீழே விழ, அவரின் போனில் ஜனனியின் போட்டோ இருக்கிறது. இதை சக்தி கவனிக்கத் தவறிவிடுகிறார். இதையடுத்து சக்தி, ஜனனியுடன் சேர்ந்து வீட்டுக்கு கிளம்பிச் செல்கிறார்.
ஜனனி வீட்டிற்கு வந்ததை பார்த்த முல்லை, என்ன இவ புயல் வேகத்துல போயிட்டு இருக்கா என சொல்ல, அதற்கு அறிவுக்கரசி, போகட்டும்டா, அவ எங்க போனாலும் ஒன்னும் கிழிக்க முடியாது என கூறுகிறார். பின்னர் உள்ளே சென்றதும் அக்கா எல்லாத்தையும் எடுத்துக்கோங்க, உடனே கிளம்பலாம் என கூறுகிறார் ஜனனி. அவரிடம் என்ன நடந்தது என நந்தினி விசாரிக்கிறார். அதற்கு அவர், இப்போ நம்ம எல்லாரும் கிளம்பி தான் ஆக வேண்டும். அங்க போறோம், கடை திறப்பு விழா பண்ணுறோம், அவ்ளோதான். இப்படியே விட்டா ஒவ்வொருத்தரும் தடை பண்ணிகிட்டே தான் இருப்பாங்க என சொல்கிறார்.
சரி அங்க போய் என்ன பண்ணபோறோம், கடை திறக்க போறோமா, அடிதடி நடத்த போறோமா இல்ல தள்ளுமுள்ளு நடத்த போறோமா என கேட்கிறார் நந்தினி. அதற்கு ஜனனி, ஏதோ பண்ணலாம். இன்னைக்கு எப்படியாவது போய் கடையை திறக்குறோம். நீ கொஞ்சம் சொல்லு சக்தி என ஜனனி சொல்ல, அவரும் ஜனனிக்கு ஆதரவாக பேசுகிறார். நான் கூட முதலில் யோசித்தேன், திறப்பு விழாவை தள்ளிவைக்கலாமானு கேட்டேன். ஆனா இப்போ சொல்றேன் நாம இப்போ இந்த தொழிலை தொடங்கித்தான் ஆகணும், அதுவும் இப்பவே.... இப்போ விட்டோம்னா இனி நாம எடுத்து வைக்குற ஒவ்வொரு அடியிலும் அவனுங்க குறுக்க வந்து நிப்பாங்க. அதுக்காக நாம ஓடிக்கிட்டே இருந்தால் சரிவராது. எதிர்த்து நின்னு தான் ஆகனும். இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவை கட்டியே ஆகனும் என சொல்கிறார்.
இதையடுத்து பேசும் விசாலாட்சி, அதெல்லாம் சரிதான் சக்தி, அவங்க வம்பிழுத்துகிட்டே இருந்தால் நாம எப்படி வியாபாரம் பண்ண முடியும் என கேட்கிறார். அத்தை நாம எப்படியாச்சும் பண்ணி தான் ஆகனும் இதை விடக்கூடாது என ஜனனி சொல்கிறார். தொடர்ந்து பேசும் விசாலாட்சி, நான் சொல்ற கேளு, என்ன பிரச்சனை வந்தாலும் கவலைப்படாதீங்க, நீங்க நினைக்குறது நடக்கும். ஆனால் நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுங்க. இன்னைக்கு நாம ஆரம்பிக்கபோற விஷயம், தகராறாக மாறி தவறா போச்சுனா, பொம்பளைங்க எல்லாரும் சேர்ந்து பண்ணாங்க அதான் உருப்படாம போச்சுனு இந்த உலகமே பேசும்.
அப்படி ஒரு ஏச்சுக்கும் பேச்சுக்கும் நீங்க ஆள் ஆகக்கூடாது என விசாலாட்சி சொல்ல, குறுக்கிட்டு பேசும் ஜனனி, அத்தை யார் என்ன வேண்டுமானாலும் பேசிட்டு போகட்டும். நம்மளை எதுவுமே செய்ய விடாம, குடும்ப கெளரவம் என்கிற பெயரில், வெளிய இருந்துகிட்டே, இவ்வளவு தூரம் விரட்டி அடிச்சுகிட்டே பழிவாங்குறாருனா, அந்த குணசேகரனுக்கு ஒரு பாடம் கத்துக் கொடுக்கணும். நம்ம நினைச்சா அது நடக்கும்னு அவருக்கு காட்டணும். நம்ம அந்த கடையை இன்னைக்கு திறந்தே ஆகணும் என தடாலடியாக கூறுகிறார் ஜனனி. இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.