எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி தொடங்க இருந்த தமிழ் சோறு பிசினஸுக்கு கடைசி நேரத்தில் முட்டுக்கட்டை போட்டிருக்கிறார் விசாலாட்சி. இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
ஜனனி தமிழ் சோறு பிசினஸை தொடங்க இருந்த நிலையில் இவர்கள் புட் ட்ரக் நிறுத்த தேர்வு செய்திருந்த இடத்தின் ஓனர் கடைசி நேரத்தில் அந்த இடத்தை தர முடியாது என மறுத்து விடுகிறார். ஜனனியும் சக்தியும் அவரிடம் எவ்வளவோ கெஞ்சி கேட்டுப் பார்த்தும் அவர் மனம் இறங்கவில்லை. எனக்கு எதுவும் சரியாக படவில்லை, இந்தாங்க உங்க பணம் இடத்தை காலி பண்ணுங்க என கறாராக சொல்லி விடுகிறார் அந்த இடத்தின் ஓனர். அந்த வண்டியை நான் எடுத்துட்டு வருவேன் இந்த இடத்துல கடையை ஆரம்பிப்பேன் என்று சவால் விட்டு அங்கிருந்து செல்கிறார் ஜனனி.
24
முட்டுக்கட்டை போடும் விசாலாட்சி
பின்னர் வீட்டுக்கு சென்று அங்கு நடந்தவற்றை கூறுகிறார் ஜனனி. அந்த குணசேகரனுக்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்காகவே நாம் அந்தக் கடையை இன்று திறந்தே ஆக வேண்டும் என ஒற்றை காலில் நிற்கிறார் ஜனனி. ஆனால் விசாலாட்சி இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். இன்னைக்கு நாம ஆரம்பிக்கப் போகிற விஷயம் தகராறாக மாறி தவறாக போனால், பொம்பளைங்க எல்லாம் சேர்ந்து பண்ணாங்க அதான் உருப்படாமல் போச்சுன்னு இந்த உலகமே பேசும் எனக் கூறுகிறார் விசாலாட்சி. நந்தினியும் அவரின் கருத்துக்கு ஆமோதிக்கிறார். இதனால் கடை திறப்பு விழாவை நடத்தலாமா வேண்டாமா என்கிற குழப்பம் பெண்களிடையே ஏற்படுகிறது.
34
கடவுளிடம் முடிவை விட்ட பெண்கள்
இதையடுத்து அனைவரும் சேர்ந்து ஒரு முடிவு எடுக்கிறார்கள். கடை திறப்பு விழாவை இன்று நடத்தலாமா இல்லை தள்ளி வைக்கலாமா என்பதை ஒரு சீட்டில் எழுதி அதை வீட்டில் உள்ள மீனாட்சி தாயின் போட்டோ முன்பு குலுக்கி போடும் ஜனனி இதுக்கப்புறம் அந்த முடிவு என் கையில் இல்லை எல்லாம் அந்த மீனாட்சியின் கையில் தான் இருக்கிறது என சொல்ல, அருகில் இருக்கும் விசாலாட்சி இனிமேல் இந்த மீனாட்சி தாய் தான் கதி என நான் நம்புகிறேன். அந்தத் தாய் உத்தரவு கொடுத்தால் நீங்க கடை திறப்பு விழாவுக்கு கிளம்புங்க இல்லையென்றால் இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறுகிறார்.
பின்னர் குலுக்கி போட்ட சீட்டிலிருந்து ஒரு சீட்டை ஜனனி எடுக்கிறார். அந்த சீட்டில் என்னை இருந்தது. கடை திறப்பு விழாவை நடத்த மீனாட்சி உத்தரவு கொடுத்தாளா? இல்லையா? ஒருவேளை உத்தரவு கொடுத்திருந்தால் ஆதி குணசேகரன் அனுப்பிய அடியாட்களின் சதியை மீறி ஜனனியால் தமிழ் சோறு பிசினஸை நடத்த முடியுமா? ஆதி குணசேகரன் அனுப்பிய ஆட்கள் ஜனனியை கொல்ல கொலைவெறியோடு காத்திருக்கிறார்கள். அவர்களை ஜனனி எப்படி சமாளிக்க போகிறார்? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கெல்லாம் இனிவரும் எபிசோடுகளில் தான் விடை கிடைக்கும்.