
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 673ஆவது எபிசோடானது செந்தில் மற்றும் மீனாவின் காட்சிகளோடு தொடங்குகிறது. இதில் முதல் நாளில் ஏன் தங்கமயில் வீட்டிற்கு போன என்று மீனாவுடன் செந்தில் சண்டை போட்ட நிலையில் இன்று காலை விடிந்த உடன் ஆபிஸிற்கு கிளம்பி வந்துள்ளார். ஆனால், செந்தில் மட்டும் காலை 10.30 மணி வரையில் தூங்கிய நிலையில் ஏன் தன்னை எழுப்பவில்லை என்று மீனாவிடம் சண்டை போட்டார். அடுத்த காட்சியாக தங்கமயில் குடும்பத்தில் நடக்கும் காட்சிகள் ஒளிபரப்பானது. இதில் தங்கமயில் சாப்பிடாமல் இருக்கிறார். அதோடு நான் என்னுடைய வீட்டிற்கு போக வேண்டும் என்று கூறி அழுகிறார்.
அதற்கு அவரது அம்மாவோ நீ ஏன் உண்ணாவிரதம் இருக்க, உன்னை வாழ வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என்று வாக்குறுதி அளிக்கிறார். அப்போது தான் கோர்ட்டிலிருந்து விவாகரத்து நோட்டீஸ் எடுத்துக் கொண்டு தங்கமயிலை தேடி வந்தார். அவர் வந்தவுடன் மாமா தான் வந்திருக்கிறாரா என்று கேட்டுக் கொண்டே வெளியில் வந்து நோட்டீஸ் வாங்கி பார்க்க, உண்மையிலேயே அவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் அம்மா என்று கூறி மயங்கி விழுந்தார். அதன் பிறகு அந்த நோட்டீஸில் என்னென்ன எழுதபட்டுள்ளது என்று முத்து சுடர் தனது அம்மாவிற்கு படித்துக் காட்டினார். அதில் முதலாவதாக குடும்பமாக சேர்ந்து ஏமாற்றிவிட்டார்கள். இப்படி துரோகம் செய்த ஒருவரோடு தன்னால் வாழ முடியாது என்று எழுதியிருப்பதாக சுடர் சொன்னார்.
அதற்கு கடைசி வரை என்னுடைய மகளை கண்கலங்காமல் பார்த்துக் கொள்வேன் என்று சொன்னவர்கள் தான் நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறார்கள். பொய் சொல்லி அவர்களது குடும்பத்தை கெடுக்கவில்லை. ஏன், அவருக்கு ஒரு மனைவியாக குடும்பத்திற்கு நல்ல மருமகளாகத்தாள் இருந்தாள். இனிமேல் அவர்களது வீட்டிற்கு போக வேண்டும் என்றால் தங்கமயில் உடன் தான் செல்ல வேண்டும். நீ சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் அவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்று தங்கமயிலிடம் சொல்லிவிட்டு ஸ்டேஷனுக்கு சென்றார்.
இதைத் தொடர்ந்து சரவணன் தான் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக தனது அப்பாவிடம் கூறினார். அதைக் கேட்ட பாண்டியன் ஏன் அவசரப்பட வேண்டும் என்று சொல்லவே இல்லை அப்பா நன்கு யோசித்து தான் முடிவு எடுத்தேன். முதல் முறையாக உங்களிடம் சொல்லாமல் இந்த முடிவை நான் எடுத்திருக்கிறேன் என்றார். எனக்கு அவளுடன் வாழ விருப்பம் இல்லை. நீங்கள் அவளை மறுபடியும் கூட்டிக் கொண்டு வீட்டிற்கு வர வேண்டும் என்று யோசிக்காதீங்க. அதற்கு பாண்டியன் இனிமேல் உங்களது முடிவை நீங்கள் எடுப்பதுதான் சரி, நான் எடுக்கும் முடிவு தவறாக முடிகிறது என்று சொல்லி பாண்டியன் ஆதங்கப்பட்டார்.
இந்த நிலையில் தான் பாக்கியம் மற்றும் மாணிக்கம் இருவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர். விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி நமக்கு பயம் காட்டியது போன்று நாமும் பயம் காட்ட வேண்டும் என்று சொல்லிக் கொண்டே ஸ்டேஷனுக்குள் நுழைந்தார். இதில் அய்யோ அய்யோ என்னுடைய மகள் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டாங்க என்று அழுது நீலிக்கண்ணீர் வடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் என்ன நடந்தது என்று கேட்டார். என்னுடைய மகளை நல்ல வாழ்வா என்று சொல்லி தான் கல்யாணம் பண்ணிக்கொடுத்தோம். ஆனால், 2 வருடம் கூட அவள் வாழவில்லை என்று சொல்லி அழுவே டிஜிபி அங்கு வந்தார். என்ன நடந்தது என்று கேட்டுக் கொண்டே தனது அறைக்கு அவர்களை கூட்டிக் கொண்டு சென்றார்.
அங்கு, எங்களை மாதிரி ஆட்களுக்கு கேப்பதற்கு யாரும் இல்லை என்ற தைரியத்தில் என்னுடைய மகளை அடித்து துரத்திவிட்டார்கள். இப்போது விவாகரத்து வேறு அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்று சொல்லி தனது டிராமாவை அரங்கேற்றினார். யாரும் கேட்கவில்லை என்றாலும், போலிஸ் கேட்கும், சட்டம் கேட்கும் நம்பிக்கையில் தான் உங்களிடம் வந்திருக்கிறோம் என்று சொல்லி ஒப்பாரி வைத்தார்.
உங்களது மகளை ஏன் வீட்டை விட்டு வெளியில் அனுப்பினார்கள்? புகுந்த வீட்டில் என்ன பிரச்சனை என்று டிஜிபி அதிகாரி கேட்டார். அதற்கு பாக்கியமோ, வரதட்சணை பிரச்சனைதான். எங்களது சக்திக்கு மீறி 80 சவரன் போட்டு கல்யாணம் செய்து வைத்தோம். மாப்பிள்ளை வீட்டார் அந்த நகை பத்தாது, இன்னும் நகை வாங்கிட்டு வா, பணம் வாங்கிட்டு வா என்று சொல்லி டெய்லி என்னுடைய மகளை சித்திரவதை செய்திருக்கிறார்கள். அதனால், என்னுடைய மகளுக்கு அபார்ஷனும் ஆகிவிட்டது. அப்போது கூட பொறுமையாக இருந்தோம்.
ஆனால் கடைசியாக 2 நாட்களுக்கு முன்பு வரதட்சணை கேட்டு சண்டை போட்டார்கள். கையில் இருப்பதை எல்லாம் கொடுத்துவிட்டோம். இப்போது எங்களிடம் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை. அவர்கள் வீட்டிற்கு வெளியில் அமர்ந்து கூட நியாயம் கேட்டோம். ஆனால், அவர்கள் கழுத்தை பிடித்து தள்ளி வெளியில் துரத்திவிட்டார்கள். என்னுடைய மகளை துரத்திவிட்டதையெல்லாம் நாங்கள் வீடியோ ஆதாரமாக வைத்திருக்கிறோம் என்று சொல்லி வீடியோவை காண்பித்தார்கள்.
அதை பார்த்த பிறகு நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். நீங்கள் முதலில் புகார் கொடுங்கள். வெளியில் ரைட்டர் இருப்பார் என்று சொல்லவே அவர்களும் புகார் கொடுத்தனர். இதில், ஒருத்தரை விடாமல் எல்லோரது பெயரையும் எழுதிக் கொள்ளுங்கள் என்று வரிசையாக மாமியார் கோமதி, மாமனார் பாண்டியன், நாத்தனார் குழலி, கணவர் சரவணன், கொழுந்தனார் செந்தில் மற்றும் கதிரவன், ராஜேஸ்வரி, கணவரின் தங்கை அரசி என்று எல்லோரது பெயரையும் எழுதிக் கொள்ளுங்கள் என்றார், ஆனால், அவர் மீனாவின் பெயரை மட்டும் சொல்லவில்லை.
இது செந்திலுக்கு மட்டுமின்றி பாண்டியன் குடும்பத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடும். ஏற்கனவே மீனா, தங்கமயிலின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்படியிருக்கும் போது செந்தில் அதையும் இந்த புகாரையும் ஒன்றாக வைத்து நீ தான் புகார் கொடுக்க சொன்னீயா என்று அவர் மீது குற்றம் சாட்ட வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக செந்தில் மற்றும் மீனா இருவரும் பிரியும் நிலை கூட வரலாம் என்று தெரிகிறது. மேலும், கோமதி மற்றும் குழலி இருவரையும் முதல் குற்றவாளியாக சேர்த்துக் கொள்ளுங்கள் அவர்களுக்கு அட்வைஸ் செய்தார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது. இனி நாளை என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.