குடி போதையில் எல்லாத்தையும் உலறிய சரவணன்; அதிர்ச்சியடைந்த பழனிவேல்! "பாண்டியன் ஸ்டோர்ஸ்" குடும்பத்தில் அடுத்த வெடி!

Published : Dec 26, 2025, 06:11 PM IST

Saravanan Drunk Scene Palanivel Shocked Truth Revealed : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் குடி போதையில் தான் தங்கமயிலுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதாக அவரது தாய்மாமாவான பழனிவேலுவிடம் கூறியுள்ளார்.

PREV
15
Saravanan Drunk Scene Truth Reveal

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பொய் சொல்லி தன்னையும் தனது குடும்பத்தையும் ஏமாற்றி வந்த தங்கமயிலுக்கு சரவணன் விவாகரத்து கொடுக்கும் நிலைக்கு வந்துவிட்டார். அந்தளவிற்கு மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். என்னதான் பொய் சொல்லி திருமணம் செய்திருந்தாலும் திருமணத்திற்கு பிறகாவது தங்கமயில் தன்னைப் பற்றிய உண்மைகளை சொல்லியிருக்கலாம்.ஆனால், அவர் தனது அம்மாவின் பேச்சைக் கேட்டு பொய் சொன்னதோடு அந்த பொய்க்கு உடந்தையாகவும் இருந்துள்ளார். பற்றாக்குறைக்கு சரவணன் மீதே பழி சுமத்தி வந்துள்ளார்.

25
Pandian Stores 2 Today Episode,

தங்கமயில் பற்றிய எல்லா உண்மைகளும் தெரிந்த பிறகு சரவணன் தனது குடும்பத்தோடு சேர்ந்து தங்கமயிலை வீட்டை விட்டு துரத்திவிட்டனர். ஆனால், அவரது அம்மா இதை சும்மா விடமாட்டேன். என்னுடைய மகளின் வாழ்க்கைக்கு நியாயம் கிடைக்காமல் நான் விடமாட்டேன். இதற்காக எந்த எல்லைக்கும் போவேன். உங்களை நிம்மதியாக இருக்க விடமாட்டேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தான் சரவணன் ஏற்கனவே தங்கமயிலுடன் வாழ முடியாது என்ற முடிவிற்கு வந்துவிட்டார். அதன்படி யாருக்கும் தெரியாமல் சாரி, யாரிடமும் கேட்காமல் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

35
Palanivel Shocked by Thangamayil Lies,

இந்த நிலையில் தான் இதைப் பற்றி முதல் முறையாக தனது தாய்மாமாவான பழனிவேலுவிடம் கூறியுள்ளார். விவாகரத்து அனுப்பியது குடும்பத்தில் உள்ள மற்ற யாருக்கும் தெரியாது. ஆனால், குடும்பத்தை விட்டு வெளியேற்றப்பட்ட பழனிவேலுவிடம் எல்லாவற்றையும் கூறியுள்ளார். இதை கேட்டு பழனிவேல் அதிர்ச்சி அடைந்தார். அதோடு மட்டுமின்றி கதிர் மற்றும் செந்திலுக்கு இடத்தை விற்று அப்பா தலா ரூ.10 லட்சம் கொடுத்த போது உங்களுடைய பங்காக இந்த கடையை எழுதி வாங்குங்க, என்று ஆத்தாளும் மகளும் சேர்ந்து நாடகமாடினார்கள். என்னை தூங்கவே விடவில்லை. நான் திட்டய பிறகு தான் சைலண்டாக இருந்தார்கள் என்றார். மேலும், கடையிலிருந்து மூட்டை மூட்டையாக மளிகைப் பொருட்களையும் எடுத்து சென்றார்கள் என்றார்.

45
Vijay TV Serial Update Tamil 2025

இன்னும் கொஞ்ச நாள் போச்சு என்றால் அவ்வளவு தான் மொத்த கடையையும் ஆட்டைய போட்டுருவாங்க. போதும், அவளுடன் சேர்ந்து வாழ்ந்தது. இனிமேல் அவளுடன் சேர்ந்து வாழ விரும்பம் இல்லை. அதனால் தான் மாமா வக்கீலை பார்த்து விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினேன் என்றார். இன்றைய எபிசோடில் விவாகரத்து நோட்டீசை தங்கமயில் வாங்கி படித்து பார்த்துவிட்டு மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதைத் தொடர்ந்து வழக்கம் போல் தங்கமயிலின் அம்மா பாக்கியம் தனது நாடகத்தை போலீஸ் ஸ்டேஷனில் அரங்கேற்றினார்.

55
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சரவணன் குடி போதை

அதில், வரதட்சனை கொடுமையில் புகார் கொடுத்தார். மேலும் குடும்பத்தோடு சேர்ந்து அடித்து துன்புறுத்தி வீட்டைவிட்டு துரத்திவிட்டார்கள் என்று வீடியோ ஆதாரத்தோடு காண்பிக்கவே, மீனாவை தவிர குடும்பத்தில் உள்ள மற்ற எல்லோர் மீதும் புகார் கொடுத்தார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories