வரதட்சணை புகாரில் சிக்கிய பாண்டியன் குடும்பம்: மீனாவை மட்டும் பாக்கியம் விட்டு வைத்தது ஏன்? பின்sனணியில் இருக்கும் 'மாஸ்டர் பிளான்'!

Published : Dec 26, 2025, 10:49 PM IST

Reason Behind Bakkiyam excluded Meena from police complaint : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் வரதட்சணை புகாரில் பாண்டியனின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் சிக்க வைத்த பாக்கியம் ஏன் மீனாவை மட்டும் விட்டு வைத்துள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

PREV
16
Dowry harassment case in Pandian Stores 2

தங்கமயிலை பார்க்க சென்றதால் இப்போது மீனாவின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. செந்திலுக்கு தெரியாமல் மன வேதனையிலிருந்த தங்கமயிலை சந்திக்க மீனா அவரது வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார். மேலும், தனக்கு தெரிந்த நகை விஷயத்தையும் கூட சொல்லமாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்தார். ஆனால் மீனா தங்கமயில் வீட்டிற்கு சென்று வந்த விஷயம் செந்திலுக்கு தெரிந்துவிட்டது.

இப்போது நீங்கள் அமைதியாக இருப்பது நல்லது. மாமா, சும்மா தான் சொல்லியிருப்பார். விவாகரத்து தரமாட்டார். அப்படி இப்படி சொல்லி தங்கமயிலை சமாதானம் செய்தார். அப்போது தங்கமயிலின் அம்மா, அந்த நகை மேட்டரை மட்டும் சொல்லிவிடாதே என்று மீனாவிடம் கெஞ்சி கேட்டார். மீனாவும் பரிதாபமாக நான் சொல்லமாட்டேன் என்றார்.

26
Pandian Stores 2 serial latest promo December 2025

இதைப் பற்றி ஆட்டோ டிரைவர் மூலமாக செந்தில் எப்படியோ தெரிந்து கொண்டார். ஆபிஸ் முடிந்து வீட்டிற்கு வந்த மீனாவிடம் காலையில் கிளம்பும் போது நேராக ஆபிஸூக்கு தான் போனயா? உங்க ஆபிசை சிராவயலுக்கு எப்போது மாத்துனாங்க என்று கேட்டார். எல்லா விஷயமும் எனக்கு தெரிந்துவிட்ட்து. நீ எதுக்கு அவங்க வீட்டுக்கு போன. நீ போனது நம்ம வீட்டுக்கு தெரிந்தால் என்ன நடக்கும்? இவ்வளவு ஏன் காலையில் எப்படியெல்லாம் பேசுனாங்க, மிரட்டுனாங்க. அதையெல்லாம் பார்த்த பிறகும் கூட நீ எப்படி அவங்க வீட்டுக்கு போன?

36
Why Bakkiyam excluded Meena from police complaint?

என்ன அக்கா பாசமா? தங்கச்சி தங்கச்சின்னு ராஜீ மீது பாசம் வச்சிருக்க. அதுக்கு ஒரு அர்த்தம் இருக்கு. அது நம்முடைய சொந்தம். ஆனால், அவங்க மீது உனக்கென்ன பாசம்? அவங்க அண்ணனை ஏமாற்றிவிட்டு போயிருக்காங்க. அண்ணனையும், அவங்களையும் சேர்த்து வைக்கிறேனு வாக்குறுதி கொடுக்க போனீயா? நீ எதுக்கு அங்க போன, ஆபிஸ் கால் என்று சொன்னீயே, அங்க நம்பரை பிளாக்கில் போட வேண்டியதுதான?

46
Pandian Stores 2 Bakkiyam revenge starts

நீ இப்படி அவங்களுக்கு சப்போர்ட் பண்ணவும் தான் குடும்பமாக நம் தலையில் ஏறி ஆடுறாங்க. இவ்வளவு பெரிய துரோகம் செய்தவர்களுக்கு ஆறுதல் ஒரு கேடா? நீ பண்ணது நம்ம வீட்டுக்கு தெரிந்தால் என்ன நடக்கும் தெரியுமா? நீ பண்ணது தப்பு, நீ என்ன அவ்வளவு பெரிய நல்லவளா? நீ பண்ணது தப்பு தப்பு தப்பு…அந்த கும்பலோடு சேர்ந்து நீ ஏதாவது பண்ணா அவ்வளவு தான். நான் சும்மாவே இருக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டார். ஏற்கனவே மீனா மற்றும் ராஜீயிடம் நீங்கள் ஏதும் பொய் சொல்லுறீங்களா என்று கோமதி கேட்டார். அதோடு சரவணன் மற்றும் தங்கமயில் பிரச்சனையின் போது ஏன் உனக்கும், மீனாவும் ஏதும் பிரச்சனையா? சொல்லு, அதுக்கும் ஒரு பஞ்சாயத்து வச்சிருவோம் என்று கோமதி கூறியிருந்தார்.

56
Bakkiyam police complaint against Pandian family

இந்த நிலையில் தான் சரவணன் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து அவர்களை பழிவாங்கும் நோக்கத்தில் போலீஸ் ஸ்டேஷனில் பாண்டியன் குடும்பத்தின் மீது வரதட்சணை புகார் கொடுத்தார். இதில், மாமியார் கோமதி, மாமனார் பாண்டியன், நாத்தனார் குழலி, கணவர் சரவணன், கொழுந்தனார் செந்தில் மற்றும் கதிரவன், ராஜேஸ்வரி, கணவரின் தங்கை அரசி என்று எல்லோரது பெயரையும் எழுதிக் கொள்ளுங்கள் என்றார், ஆனால், அவர் மீனாவின் பெயரை மட்டும் சொல்லவில்லை.

66
Pandian Stores 2 today episode updates

இது செந்திலுக்கு மட்டுமின்றி பாண்டியன் குடும்பத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடும். ஏற்கனவே மீனா, தங்கமயிலின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்படியிருக்கும் போது செந்தில் அதையும் இந்த புகாரையும் ஒன்றாக வைத்து நீ தான் புகார் கொடுக்க சொன்னீயா என்று அவர் மீது குற்றம் சாட்ட வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக செந்தில் மற்றும் மீனா இருவரும் பிரியும் நிலை கூட வரலாம் என்று தெரிகிறது. மேலும், கோமதி மற்றும் குழலி இருவரையும் முதல் குற்றவாளியாக சேர்த்துக் கொள்ளுங்கள் அவர்களுக்கு அட்வைஸ் செய்தார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது. இனி நாளை என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories