பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில், இந்த வாரம் யாரும் எதிர்பாரா ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆகி இருக்கிறார். அவர் யார் என்பதை பார்க்கலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சி முடிவடைய இன்னும் மூன்று வாரங்களே எஞ்சி உள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சியில் வார வாரம் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்படும். அந்த வகையில் கடந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்த ப்ரீஸ் டாஸ்க் நடத்தப்பட்டது. இந்த ஃப்ரீஸ் டாஸ்கின் போது போட்டியாளர்களின் குடும்பத்தினர் உள்ளே சென்று அவர்களை ஊக்கப்படுத்துவார்கள்.
24
ப்ரீஸ் டாஸ்க்
இந்த ஃப்ரீஸ் டாஸ்கின் போது பிக் பாஸ் வீடு கண்ணீர் கடலில் மிதக்கும். ஏனெனில் இரண்டு மாதங்களுக்கு மேலாக குடும்பத்தினரை பிரிந்து இந்த வீட்டுக்குள் வாழும் ஹவுஸ் மேட்ஸ், நீண்ட இடைவேளைக்கு பின்னர் குடும்பத்தாரை பார்த்ததும் உணர்ச்சி வசப்படுவார்கள். அதுவே இந்த சீசனிலும் நடந்தது. இதில் சற்று புதுமையாக, யாருடைய வீட்டார் வரப்போகிறார்கள் என்பதை காட்டிவிட்டு, அவர்களை பார்க்க வேண்டும் என்றால் தான் கொடுக்கும் டாஸ்கை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார் பிக் பாஸ்.
34
லக்கி சான்ஸ் பெற்ற பார்வதி
இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த முறை ஒரே ஒரு போட்டியாளர் மட்டும் தங்கள் குடும்பத்தாரை ஒரு நாள் முழுக்க தங்களுடன் பிக் பாஸ் வீட்டில் தங்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பை பெற்றார். இந்த வாய்ப்பை ஆதிரைதான் பெற்றிருந்தார். ஆனால் அவர் கடந்த வாரம் எலிமினேட் ஆகி சென்றதால் பார்வதிக்கு அந்த சான்சை வழங்கினார். இதனால் பார்வதியின் அம்மா சரஸ்வதி பிக் பாஸ் வீட்டில் ஒரு நாள் தங்கும் வாய்ப்பு பெற்றார்.
ஒரு வழியாக பிக் பாஸ் பிரீஸ் டாஸ்க் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் இன்று எலிமினேஷன் நடைபெற்றது. இதில் கம்மியான வாக்குகளை பெற்றிருந்த அமித் பார்கவ் எலிமினேட் ஆகி வெளியே சென்றுள்ளார். இந்த பிக் பாஸ் சீசனில் உயிர் கார்ட் போட்டியாளராக உள்ளே வந்திருந்தார் அமித். அந்த முதல் சில வாரம் அனல் பறக்க விளையாடி அமித் அதன் பின்னர் ஆள் அட்ரஸ் தெரியாமல் காணாமல் போனார். இதனால் ரசிகர்களுக்கும் அமித்தின் ஆட்டம் பிடிக்காமல் போனது. இதன் காரணமாக தான் இந்த வாரம் எலிமினேட் ஆகியுள்ளார்.