மெயின் வில்லனிடம் சிக்கிய வீடியோ... ஆதி குணசேகரனுக்கு ஆப்படிக்க வரும் அந்த நபர் யார்? எதிர்நீச்சல் தொடர்கிறது

Published : Oct 16, 2025, 08:45 AM IST

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனுக்கு எதிரான வீடியோ ஆதாரத்தை ஜனனியிடம் கொடுக்காமல் புது வில்லனிடம் கொடுத்து ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார் அஸ்வின்.

PREV
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் ஈஸ்வரியை தாக்கியதற்கான வீடியோ ஆதாரத்தை, கெவினின் நண்பன் அஸ்வினிடம் இருந்து வாங்க, ஜனனி மற்றும் சக்தி இருவரும் சென்ற நிலையில், அங்கு ஒரு மணிநேரம் ஆகியும் அஸ்வின் வராததால், ஜனனி பதற்றம் அடைய, அந்த வீடியோ ஆதாரம் அவன் கையில் இருக்கும் வரை அது அவனுக்கு தான் ஆபத்து, அதனால் கண்டிப்பாக வந்துவிடுவான் என சக்தி சொல்கிறார். இதையடுத்து அஸ்வின் அந்த இடத்துக்கு வீடியோ ஆதாரத்துடன் வந்துவிடுகிறான். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
எஸ்கேப் ஆகும் அஸ்வின்

அஸ்வினிடம், உன் உயிரை காப்பாத்திக்கணும்னா அந்த வீடியோவை எங்கிட்ட கொடுத்துரு என ஜனனி மிரட்ட, நான் உங்ககிட்ட அந்த வீடியோவை கொடுத்த பின்னர் அதைவைத்து என்னையே நீங்க மாட்டிவிட்டீங்கனா நான் என்ன பண்ணுவேன் என கேட்கிறார் அஸ்வின். பின்னர் அவனுக்கு ஒரு போன் கால் வருகிறது. அதில் பேசும் நபர், நான் சொல்வதை கவனமாக கேள், அந்த பென்டிரைவை நீ என்னிடம் கொடுத்தால், நீ நினைச்சுகூட பார்க்க முடியாத அளவு பணத்தை நான் உனக்கு தருகிறேன் என சொல்கிறார். இதனால் மனம் மாறிய அஸ்வின், அந்த பென் டிரைவ் உடன் அங்கிருந்து எஸ்கேப் ஆகிறான்.

35
கைமாறும் வீடியோ

பின்னர் அந்த நபரை சந்திக்க செல்கிறார் அஸ்வின். அப்போது கார் டிரைவர் ஒருவர் வீடியோ கொடுக்க தான் வந்தியா என கேட்க, அதற்கு அஸ்வின் ஆமாம் என சொல்கிறார். பின்னர் காரில் இருக்கும் நபரை கைகாட்டி அவரிடம் வீடியோவை கொடுக்க சொல்கிறார். அப்போது அஸ்வின் அந்த பென் டிரைவை கொடுத்ததும், காரில் இருந்தபடியே அவருக்கு கட்டுக்கட்டாக பணத்தை எடுத்து நீட்டுகிறார் அந்த மர்ம நபர். பின்னர் அந்த வீடியோ ஆதாரத்துடன் அங்கிருந்து கிளம்பி செல்கிறார் அந்த நபர். வீடியோ கைமாறியதால் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் ஜனனியும் சக்தியும் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.

45
லெட்டரில் உள்ள ட்விஸ்ட்

இதையடுத்து ஏமாற்றத்துடன் வீட்டுக்கு செல்லும் ஜனனி மற்றும் சக்தி, தங்களிடம் உள்ள லெட்டரை எடுத்து நந்தினியிடம் காட்டுகிறார்கள். அந்த லெட்டரை படித்துப் பார்த்த நந்தினி, குடும்பத்துக்கு துரோகம் பண்ணிட்ட அது... இதுனு இருக்கு என சொல்ல, பின்னர் பேசும் ரேணுகா, ஆதிமுத்து குடும்பம் என்றால் அது நீ மட்டும் தானா என எழுதியிருக்கு, அப்போ வேற யாரு இந்த குடும்பத்துக்குள்ள இருக்காங்க என சந்தேகப்படுகிறார். வீடியோ ஆதாரம் கையைவிட்டு போனதால், இனி இந்த லெட்டரை வைத்து ஆதி குணசேகரனை மடக்க பிளான் போடுகிறார் ஜனனி.

55
மெயின் வில்லன் யார்?

மறுபுறம், வீட்டைவிட்டு காணாமல் போன ஆதி குணசேகரன், கதிருக்கு போன் போட்டு ஒரு உண்மையை சொல்கிறார். அதன்படி அந்த சக்தியும், அவன் பொண்டாட்டியும் நமக்கு எதிரா இருக்க நிறைய விஷயத்தை தோண்டிகிட்டு இருக்காங்க. அதெல்லாம் வெளிய வந்துச்சுனா, ஒட்டுமொத்தமா எல்லாம் கொலைந்துவிடும் என சொல்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு ஒரு புறம் இருக்க, மறுபுறம் வீடியோவை வாங்கிய அந்த மெயின் வில்லன் யார் என்பதும் தெரியவர உள்ளது. அநேகமாக கோலங்கள் ஆதி தான் அந்த மெயின் வில்லனாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இனி வரும் எபிசோடுகள் அனல்பறக்கும் என்பது மட்டும் உறுதி.

Read more Photos on
click me!

Recommended Stories