
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு பின்னணி இருக்கிறது. இதில், பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் தங்கமயில் மற்றும் அவரது அப்பா மாணிக்கம் இருவரும் வேலை பார்ப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. இதற்கு முன்னதாக கதிர் மற்றும் செந்திலுக்கு தலா ரூ.10 லட்சம் கொடுத்துவிட்டு சரவணனுக்கு எதுவும் கொடுக்காமல் இருந்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது.
அதோடு, கதிர் தனது டிராவல்ஸிற்கு பாண்டியன் டிராவல்ஸ் என்று தனது பெயர் வைத்ததற்கும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. இதைப் பற்றி முழுமையாக இந்த தொகுப்பில் பார்க்காலம். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. முதல் சீசனுக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இப்போது 2ஆவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இதில் பாண்டியனின் 3 மகன்களுக்கும் திருமணம் நடந்து முடிந்துவிட்டது. அதிலேயும், செந்திலுக்கு மட்டும் காதல் திருமணம். கதிருக்கு அம்மாவின் கட்டாயத்தில் நடந்த திருமணம். மூத்தவன் சரவணனுக்கு வீட்டில் பெற்றோர் பார்த்து வைத்து நடந்த திருமணம். இதுவரையில் மூவரும் வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு செந்தில் தனது மனைவியை அழைத்துக் கொண்டு மீனாவிற்கு கொடுக்கப்பட்ட அரசு விடுதிக்கு தனிக்குடித்தனம் சென்றனர்.
பிக் பாஸ் வீட்டில் தவெக உறுப்பினர்... ‘கப்பு முக்கியம் பிகிலு’னு சப்போர்டுக்கு வந்த TVK தொண்டர்கள்
மாமனார் தயவினால் அரசு வேலை அதுவும் சொந்த ஊரில் அரசு வேலை வாங்கி சொந்த ஊரிலேயே வேலை பார்க்கிறார். ஆனால், அவர் அரசு வேலை பார்க்க முக்கிய காரணம் ரூ.10 லட்சம். அதைக் கொடுத்து தான் அரசு வேலை வாங்கியிருக்கிறார். மீனா ஏற்கனவே அரசு வேலை வாங்கி கண்ணும் கருத்துமாக செய்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க, கதிர் கல்லூரி படிப்பை முடித்த கையோடு சுயமாக டிராவல்ஸ் வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நிலையில் வங்கி லோனுக்கும் பல முறை முயற்சி செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பாண்டியன் தனக்கு சொந்தமான நிலத்தை விற்று கதிர் மற்றும் செந்திலுக்கு தலா ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். அதை வைத்து தான் கதிர் பாண்டியன் பெயரில் பாண்டியன் டிராவல்ஸ் என்று ஆரம்பித்து நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட பாண்டியன் கதிரின் பாண்டியன் டிராவல்ஸிற்கு சென்று ஓனர் அமரும் இடத்தில் அமர்ந்தார்.
இதன் மூலமாக அவர் பாண்டியன் டிராவல்ஸிற்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, இப்போது மாணிக்கம் மற்றும் தங்கமயில் இருவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் வேலை பார்த்து வரும் நிலையில் அந்த கடையை சரவணன் பெயருக்கு மாற்றம் செய்யும் சூழல் வரலாம். அப்படியில்லை என்றால் தங்கமயில் பெயருக்கு மாற்றம் செய்யும் நிலை கூட வரலாம்.
இதற்கு முன்னதாக தங்கமயிலின் அம்மா பாக்கியமும் இதைத் தான் சொல்லியிருக்கிறார். அதாவது, பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை சரவணனுக்கு சொந்தமாகும். ஏனென்றால் கதிருக்கும், செந்திலுக்கும் தலா ரூ.10 லட்சம் கொடுத்த நிலையில் உன்னுடைய புருஷனுக்கு இன்னும் எதுவும் கொடுக்கவில்லை. அதனால் அந்த கடையை உன்னுடைய புருஷன் பெயருக்கு மாற்றி எழுதிக் கொள்ளுங்கள் என்றார்.
செந்தில் மற்றும் கதிருக்கு தலா ரூ.10 லட்சம் கொடுப்பது பற்றி தங்கமயில் பாண்டியனிடமும், சரவணனிடமும் ஏற்கனவே கேட்டுள்ளார். அதற்கு கோபமடைந்த தங்கமயில் யாருக்கு என்ன கொடுக்க வேண்டும், எப்போது கொடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். ஆகையால் நீ மட்டும் உன்னுடைய வேலையை பாரு என்று கோமதி கண்டித்திருக்கிறார். இந்த சூழலில் இப்போது மாணிக்கம் கடையில் வேலை பார்க்கும் நிலையில், அவருக்கு உறுதுணையாக தங்கமயிலும் கடைக்கு வேலைக்கு வந்துவிட்டார்.
அவர், தனது மாமனாரிடம் ஏன் மாமா கடையில் இந்த காய்கறி ஃபேன்ஸி ஐட்டம் என்று எதுவும் விற்கலாம் அல்லவா என்றார். அதற்கு பாண்டியனோ நம்ம கடையில் தான் வியாபாரம் நன்றாக நடக்கும் நிலையில் எதற்கு அதெல்லாம் வாங்க வேண்டும் என்றார். இப்படிப்பட்ட சூழலில் கடையில் ஏதாவது சம்பவம் நடக்கும் சூழலில் மாணிக்கம் மற்றும் தங்கமயில் இருவரும் டிராமா போட்டு கடையை எழுதி வாங்கும் சுழுல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீரியலின் இயக்குநரும் இதே போன்ற ஒரு பிளானில் தான் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.