பிக் பாஸ் வீட்டில் தவெக உறுப்பினர்... ‘கப்பு முக்கியம் பிகிலு’னு சப்போர்டுக்கு வந்த TVK தொண்டர்கள்

Published : Oct 15, 2025, 02:59 PM IST

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் கலந்துகொண்டுள்ள போட்டியாளர் ஒருவர் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக இருப்பதால் அவருக்கு தவெக-வினர் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

PREV
14
TVK Supporter in Bigg Boss Tamil Season 9

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் 10 ஆண் போட்டியாளர்கள், ஒரு திருநங்கை, 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 20 பேர் கலந்துகொண்டனர். இதில் முதல் வார இறுதியில் பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டார். அவர் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் கம்மியான வாக்குகளை வாங்கி இருந்ததால் எலிமினேட் ஆனார். அதற்கு முன்பாகவே நந்தினி தன்னுடைய உடல்நலத்தை கருத்தில் கொண்டு பாதியிலேயே வெளியேறினார். இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தவெக உறுப்பினர் ஒருவர் கலந்துகொண்டிருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.

24
மீனவ பெண் சுபி

அவர் வேறுயாருமில்லை சுபிக்‌ஷா தான். இவர் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தை அடுத்துள்ள பெரியதாழை என்கிற மீனவ கிராமத்தை சேர்ந்தவர். கல்லூரி படிப்பை முடித்ததும் யூடியூப்பராகிவிட்டார் சுபிக்‌ஷா. இந்தியாவின் முதல் பெண் கடல் விலாகர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரியாகவும் இருக்கிறார் சுபி. இவர் மீனவ பொண்ணு சுபி என்கிற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதில் தன்னுடைய தந்தையுடன் கடலுக்கு சென்று மீன் பிடிப்பது, கடலிலேயே உணவு சமைத்து சாப்பிடுவது என பல்வேறு வீடியோக்களை போட்டு பேமஸ் ஆனார் சுபிக்‌ஷா.

34
பிசினஸிலும் தூள் கிளப்பும் சுபிக்‌ஷா

இவர் யூடியூபராக இருப்பது மட்டுமின்றி தன்னுடைய 22 வயதிலேயே பிசினஸ் ஒன்றையும் தொடங்கி, அதிலும் நன்கு கல்லாகட்டி வந்துள்ளார். அதன்படி மீன் ஊறுகாய் பிசினஸை செய்து வருகிறார் சுபிக்‌ஷா. மொத்தம் 7 வகையான மீனில் ஊறுகாய் போட்டு விற்பனை செய்து வருகிறார். அதற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படியே சென்று கொண்டிருந்த சுபிக்‌ஷாவின் வாழ்க்கையை அடுத்தகட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் வரலாற்றில் போட்டியாளராக கலந்துகொண்ட முதல் மீனவ பெண் சுபிக்‌ஷா தான்.

44
தவெக-வினர் ஆதரவு

கடைக்கோடியில் எளிய மீனவ குடும்பதிலிருந்து எந்தவித பின்புலமும் இன்றி கடின உழைப்பை மட்டுமே மூலதனமாக்கி வென்று, இன்று பிக்பாஸ் போட்டியாளராக கலக்கி வரும் சுபிக்‌ஷா பலருக்கும் ஒரு ரோல்மாடலாக மாறி இருக்கிறார். சுபிக்‌ஷா பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றதில் இருந்து அவருக்கு தவெக-வினர் போட்டிபோட்டு ஆதரவு திரட்டி வருகிறார்கள். ஏனெனில் சுபிக்‌ஷா தவெக உறுப்பினராக உள்ளார். அவரை வெற்றியடைய செய்ய வேண்டும் என்று விர்சுவல் வாரியர்ஸ் கங்கணம் கட்டிக் கொண்டு சுற்றுகிறார்கள். போகிற போக்கை பார்த்தால் சுபிக்‌ஷாவை டைட்டில் வின்னர் ஆக்கிவிடுவார்கள் போல தெரிகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories