தீபாவளிக்கு தியேட்டரில் புதுப்படங்கள் ரிலீஸ் ஆவதைப் போல், தொலைக்காட்சி சேனல்களிலும் பல்வேறு புதுப்படங்கள் ஒளிபரப்புவது உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டு சன் டிவி, விஜய் டிவி உள்ளிட்ட தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்களை பற்றி பார்க்கலாம்.
தீபாவளி பண்டிகைக்கு கடந்த சில ஆண்டுகளாக தியேட்டரில் ரிலீஸ் ஆகாத புதுப்படங்களை சன் டிவி ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி ஸ்பெஷலாக அருள்நிதி நடித்த ராம்போ திரைப்படம் அக்டோபர் 20ந் தேதி காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதையடுத்து மாலை 6.30 மணிக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி 500 கோடி வசூலித்த கூலி திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. தீபாவளிக்கு முந்தைய தினம் காலை 9.30 மணிக்கு கண்ணப்பா திரைப்படம் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
24
Diwali Special Movies on Vijay TV
சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவியும் ஏராளமான புதுப்படங்களை தீபாவளிக்கு களமிறக்கி உள்ளது. அந்த வகையில் அக்டோபர் 20ந் தேதி காலை 11 மணிக்கு தனுஷ், ராஷ்மிகா மந்தனா நடித்த குபேரா படம் ஒளிபரப்பாக உள்ளது. இதையடுத்து மதியம் 3 மணிக்கு சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு நடித்த கேங்கர்ஸ் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. பின்னர் மாலை 6 மணிக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மேனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் ஒளிபரப்பப்பட இருக்கிறது. அக்டோபர் 19-ந் தேதி மதியம் 3.30 மணிக்கு ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்த பறந்து போ திரைப்படம் ஒளிபரப்பாகும்.
34
Diwali Special Movies on Zee Tamil
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வருகிற அக்டோபர் 20ந் தேதி தீபாவளி தினத்தன்று மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும், காந்தாரா நாயகி ருக்மிணி வசந்தும் ஜோடியாக நடித்த ஏஸ் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. அன்று காலை 11 மணிக்கு இப்படம் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து மாலை 6 மணிக்கு நடிகர் சூரி, நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி, நடிகர் ராஜ்கிரண், நடிகை சுவாசிகா, பாபா பாஸ்கர் மாஸ்டர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த மாமன் திரைப்படம் ஒளிபரப்பப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
கலைஞர் தொலைக்காட்சியில், புது முயற்சியாக சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சுழல் என்கிற வெப் தொடரை மூன்று பாகங்களாக ஒளிபரப்ப உள்ளனர். அதன்படி அக்டோபர் 18, 19 மற்றும் 20 ஆகிய மூன்று நாட்களும் மதியம் 1.30 மணிக்கு சுழல் வெப் தொடரை தொகுத்து திரைப்படம் போல் ஒளிபரப்ப உள்ளனர்.