சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி தான் கல்யாணி என்கிற உண்மை மீனாவுக்கு தெரியவரும் நிலையில், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்தடுத்து பிரச்சனைகளில் சிக்கும் ஒரே நபர் ரோகிணி தான். இவர் தான் கிரிஷின் அம்மா என்கிற உண்மையை முத்துவும் மீனாவும் கிட்டத்தட்ட கண்டுபிடித்த நிலையில், ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்துவிட்டார் ரோகிணி. இதையடுத்து மீனா பைக்கை சிந்தாமணியை வைத்து தூக்கியபோதும் ரோகிணிக்கு தோல்வியே மிஞ்சியது. அடுத்ததாக விஜயாவும் ரோகிணியை மட்டம் தட்டி பேசி அவரை டேமேஜ் செய்து வருவதால் கடும் அப்செட்டில் இருக்கும் ரோகிணிக்கு அடுத்த சிக்கல் வந்துள்ளது. அது என்ன என்பதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.
24
ரோகிணிக்கு சிக்கல்
ரோகிணியின் தோழி வித்யாவுக்கு கல்யாணம் நடக்கிறது. இந்த கல்யாணத்திற்கு மீனாவையும் அழைத்திருக்கிறார் வித்யா. ரோகிணி, அவரது அம்மா லெட்சுமி மற்றும் ரோகிணியின் மற்றொரு தோழியான மகேஸ்வரி ஆகியோரும் அந்த கல்யாணத்தில் கலந்துகொள்கிறார்கள். அப்போது அந்த கல்யாணத்தில் கலந்துகொள்ள வந்த பெண் ஒருவர், ரோகிணியை பார்த்து, அந்த பொண்ணு எனக்கு தெரிஞ்ச பொண்ணு தான்... அவங்க பெயர் கல்யாணி என்று சொல்கிறார். இதையடுத்து அவரிடம் பேச அந்த பெண் செல்லும் போது ஓடி ஒளிந்துகொள்கிறார் ரோகிணி.
34
மீனாவுக்கு தெரிய வரும் உண்மை
ஒளிந்துகொண்ட ரோகிணியிடம் யார் அவங்க என மகேஸ்வரி கேட்க, என்னுடைய முதல் கணவர்... அதாவது கிரீஷ் அப்பாவோட சொந்தக்காரங்க தான் அவங்க என சொல்கிறார். இதனிடையே அந்த பெண், மீனாவிடம் சென்று கல்யாணி எங்க இருக்காங்க என கேட்க, கல்யாணியா யார் அது என விசாரிக்கிறார். இதைப்பார்த்து பதறிப்போன ரோகிணி, அய்யய்யோ அந்த பொம்பள வேற மீனா கிட்ட பேசுறாங்களே, நீ போய் சமாளி என தன்னுடைய தோழி மகேஸ்வரியை அனுப்பி வைக்கிறார். அந்த பெண்ணை பார்த்ததும் ரோகிணியின் அம்மாவும் பயந்து ஒருபுறம் மறைந்து கொள்கிறார்.
இதையடுத்து மீனா அங்கிருந்து சென்றதும் ரோகிணி வந்து அந்த பெண்ணிடம் பேசுகிறார். அப்போது அந்தப் பெண் நீ சேகர் பொண்டாட்டி கல்யாணி தான என கேட்கிறார். இதனால் ரோகிணி தான் கல்யாணி என்கிற உண்மை மீனாவுக்கு தெரியவர அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் ரோகிணி பற்றிய அடுக்கடுக்கான உண்மைகள் இனி ஒவ்வொன்றாக வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோகிணி ஏற்கனவே திருமணமானவர் என்கிற உண்மை தெரியவந்தால் வீட்டில் பூகம்பமே வெடிக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. இதனால் இனி வரும் எபிசோடுகள் அனல்பறக்க வாய்ப்புள்ளது.