Bigg Boss Tamil Season 10 Contestants : செப்டம்பர் 6ந் தேதி தொடங்க உள்ள பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் யார்... யார் என்பது குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதைப் பார்க்கலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ளதால், அதற்கான ஹைப்பை விஜய் டிவி படிப்படியாக ஏற்றி வருகிறது. அந்த வகையில் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் சிலரைப் பற்றி ஹிண்ட் கொடுக்கும் விதமாக ப்ரோமோ ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். அதில் அந்த போட்டியாளர்களின் முகம் காட்டப்படாவிட்டாலும் அதில் உள்ளது யார்... யார் என்பதை நெட்டிசன்கள் டீகோட் செய்து வருகிறார்கள். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 10ல் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் யார்... யார் என்பதை பார்க்கலாம்.
பிக் பாஸ் ப்ரோமோவில் இடம்பெற்ற ஒருவர் லட்சுமி ப்ரியா என கூறப்படுகிறது. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாநதி என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் சீரியலில் நாயகியாக நடித்திருந்தார். அந்த சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பான நிலையில், அதனை இந்த ஆண்டு தான் முடிவுக்கு கொண்டு வந்தனர். அந்த சீரியல் முடிந்த கையோடு லட்சுமி ப்ரியா, பிக் பாஸுக்கு பெட்டி படுக்கையோடு கிளம்பி இருக்கிறார் போல தெரிகிறது. இந்நிகழ்ச்சி மூலம் இவருக்கு ரசிகர் பட்டாளம் பெருகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
35
நவீன்
இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறக்கப்பட உள்ள மற்றொரு விஜய் டிவி ப்ராடக்ட் தான் இந்த நவீன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த சீரியல் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ப்ரமோஷனுக்காக உள்ளே சென்ற நவீன், தற்போது அந்நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக களமிறங்க உள்ள தகவல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. நவீன் உள்ளே சென்றுவிட்டால் சின்ன மருமகள் சீரியல் நிலைமை என்ன ஆகும் என்பது தான் தற்போது கேள்விக்குறியாக உள்ளது.
பிக் பாஸ் சீசன் 10-ல் எண்ட்ரி கொடுக்க உள்ள மற்றொரு விஜய் டிவி பிரபலம் டாலி. இவர் சுனிதாவின் ஜெராக்ஸ் காஃபி என்றே சொல்லலாம். ஏனெனில் சுனிதாவை போல் இவரும் வடமாநிலத்தை சேர்ந்தவர். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இடம்பெற்று வருகிறார். சுனிதாவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் எதிர்ப்பு தான் நிறைய கிடைத்தது. அதனால் டாலி அதையெல்லாம் தவிடுபொடி ஆக்கி மக்கள் மனதை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
55
3 காமன்மேன் போட்டியாளர்கள்
இந்த ஆண்டு புதிய முயற்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொதுமக்களில் இருந்து சிலரை உள்ளே அனுப்ப முடிவு செய்து, அவர்களுக்காக காமன்மேன் என்கிற நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். அதில் இருந்து மூன்று பேர் தேர்வாகி உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் யாரென்றால், கரிஷ்மா, முனியம்மா மற்றும் ஜேசன் தான். இதில் முனியம்மா தான் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டியாளராக இருந்து வருகிறார். அவரின் எண்ட்ரியால் பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.