Karthigai Deepam : பிறந்தநாள் கேக்கால் மாறிய கதை... சாமுண்டீஸ்வரியை சமாளித்த சுவாதி!

Published : Aug 26, 2026, 08:40 PM IST

Karthigai Deepam Serial Twist : கார்த்திகை தீபம் சீரியலில் சாமுண்டீஸ்வரியை பொய் சொல்லி சமாளித்துள்ளார் சுவாதி. இதன்பின் தரமான ட்விஸ்ட் காத்திருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
14
Karthigai Deepam Serial Twist

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் ‘கார்த்திகை தீபம்’. முந்தைய எபிசோடில் ரேவதிக்கு வாழ்த்து தெரிவிக்க குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடிய நிலையில், அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறப்பட்ட தகவல் உண்மையில்லை என்பது தெரியவந்தது. இதனால் கதையில் அடுத்தடுத்து பரபரப்பான திருப்பங்கள் உருவாகியுள்ளன. நெக்ஸ்ட் எபிசோடில், வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது, பாட்டி அங்கு வந்திருப்பவர்களை சாப்பிட்டுவிட்டுச் செல்லுமாறு கூறுகிறார். இதையடுத்து அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது.

karthigai Deepam : கார்த்திக் மீது பொய் வழக்கு... சாமுண்டீஸ்வரியிடம் நேருக்கு நேர் மோதிய ரேவதி!

24
கோபமடையும் சாமுண்டீஸ்வரி

இதற்கிடையே, சாமுண்டீஸ்வரியின் வீட்டில் யாரும் இல்லாததையும், அங்குள்ள அனைத்து குழாய்களும் திறந்து கிடப்பதையும் சந்திரகலா கவனிக்கிறார். இதைப் பற்றி சாமுண்டீஸ்வரியிடம் தெரிவிக்கும் அவர், “எல்லாரும் அங்கேதான் இருப்பார்கள், நாம் அங்கே போகலாம்” என அழைக்கிறார். ஆனால், சாமுண்டீஸ்வரி அதற்கு சம்மதிக்காமல், “நான் ஏன் அங்கே வர வேண்டும்? எல்லாரையும் இங்கே வரச் சொல்லுங்கள்” என கோபமாக கூறுகிறார். மறுபுறம், பாட்டி ஏற்பாடு செய்த விருந்தை குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Karthigai Deepam : போராட்டத்தை ஒடுக்க முயன்று பல்பு வாங்கிய சாமுண்டீஸ்வரி.. மீடியாவிடம் உண்மையை சொன்ன ரேவதி!

34
சுவாதிக்கு சர்ப்ரைஸ்

அந்த நேரத்தில் கேக் ஒன்று வீட்டிற்கு வருகிறது. அது சுவாதியின் பிறந்தநாளை முன்னிட்டு கார்த்திக் மற்றும் ரேவதி ஏற்பாடு செய்த சர்ப்ரைஸ் என்பது தெரிய வருகிறது. சுவாதி கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய பிறகு, அனைவரையும் உடனடியாக வீட்டிற்கு புறப்படுமாறு ராஜராஜன் அறிவுறுத்துகிறார். வீட்டில் யாரும் இல்லாத விஷயம் சாமுண்டீஸ்வரிக்கு தெரியவந்தால் மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும் என அவர் எச்சரிக்கிறார். இதையடுத்து அனைவரும் வீட்டிற்கு திரும்புகின்றனர். அங்கு சாமுண்டீஸ்வரி தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார்.

Karthigai Deepam : ரேவதியின் அதிரடி முடிவால் ஆடிப்போன குடும்பம்... கார்த்திக்காக காத்திருக்கும் புதிய சிக்கல்!

44
வெடிக்கப்போகும் பிரச்சனை

அப்போது சுவாதி, இன்று தனது பிறந்தநாள் என்பதையும், அதை சாமுண்டீஸ்வரி மறந்துவிட்டதால்தான் அனைவரும் ஒன்றாக வெளியே சென்றதாகவும் கூறி நிலைமையை சமாளிக்கிறார். சுவாதியின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளும் சாமுண்டீஸ்வரியும் இறுதியில் அமைதியாகிறார். இதனால் தற்போது ஏற்பட்ட பிரச்சனை தற்காலிகமாக முடிவுக்கு வருகிறது. ஆனால், வீட்டில் நடந்த இந்த விஷயங்கள் சாமுண்டீஸ்வரிக்கு எப்போது தெரியவரும்? அடுத்ததாக என்ன பிரச்சனை வெடிக்கப் போகிறது? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Karthigai Deepam : வீட்டை அடித்து நொறுக்கிய சாமுண்டீஸ்வரி... பரமேஸ்வரி பாட்டி வீட்டில் கார்த்திக் - ரேவதிக்கு நடந்தது என்ன?

Read more Photos on
click me!

Recommended Stories