Karthigai Deepam: சிதம்பரத்துக்கு செக் வைத்த கார்த்தி! தீபாவுக்கு ஷாக் கொடுத்த அபிராமி - கார்த்திகை தீபம் !

First Published | Dec 23, 2023, 5:09 PM IST

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பல்லவியாக முகத்தை மறைத்து கொண்டு தீபா பாடி கொடுத்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 
 

அதாவது, கார்த்திக் பல்லவி பாடிய பாடலை யு ட்யூபில் ரிலீஸ் செய்கிறான், அந்த பாடல் படு வைரலாகி செம ட்ரெண்டிங்காகி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு வழியாக சிதம்பரத்துக்கு சவால் விட்டபடி பாடலை ரிலீஸ் செய்தாகி விட்டது என கார்த்தியும் சந்தோஷப்படுகிறான். 

இதனை தொடர்ந்து அபிராமி வீட்டிலும் பாடல் ஹிட்டாகி விட்ட விஷயத்தை நினைத்து சந்தோசப்படுகின்றனர். பல்லவியின் பாடல் வெளியான விஷயத்தை அறியும் சிதம்பரம் அதிர்ச்சி அடைந்து ஐஸ்வர்யாவுக்கு போன் செய்து ஒண்ணுமே நடக்கலைனு சொன்ன இப்போ என்னாச்சு? எப்படி அந்த பல்லவி வந்து பாடினா? சொன்ன மாதிரியே பாட்டை ரிலீஸ் பண்ணிட்டான். உன்னை போய் நம்புனேன் பாரு என திட்டி தீர்க்க ஐஸ்வர்யா எனக்கும் இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை என்று புலம்புகிறாள். 

Vichithra: விசித்ராவின் திரை வாழ்க்கைக்கு ஆப்பு வைத்ததே சத்யராஜ் தானா? விச்சு போட்ட பழைய பதிவு வைரல்!


Karthigai deepam serial

அடுத்ததாக கார்த்திக் யூ ட்யூபில் வரும் வியூஸ், லைக்ஸ், கமெண்ட் ஆகியவற்றை படித்து பார்த்து சந்தோசப்பட அபிராமி அந்த பல்லவியை வீட்டிற்கு கூட்டிட்டு வா கிப்ட் கொடுக்கணும் என்று சொல்கிறாள். பிறகு தீபா வர கார்த்திக் அவளிடம் பல்லவி பற்றி பெருமையாக பேசி சந்தோசப்படுகிறான். அடுத்ததாக கார்த்திக் மீனாட்சியிடம் வந்து பல்லவி எப்படி வந்தாங்க? அவங்க முகத்தை பார்த்தீங்களா? என்று கேட்க மீனாட்சி பார்க்கல என்று சமாளிக்கிறாள். 
 

Karthigai deepam serial

அதன் பிறகு அம்மா அவங்களுக்கு கிப்ட் கொடுக்கணும்னு சொன்னாங்க நீங்க போன் பண்ணி வர சொல்லுங்க எனவும் சொல்லி செல்ல மீனாட்சி என்ன செய்வது என்று யோசிக்கிறாள். மறுபக்கம் அபிராமி தீபாவை பிடித்து பல்லவியை பெருமையாக பேசி திட்டி அனுப்புகிறாள். இதனை தொடர்ந்து மீனாட்சி தீபாவிடம் அபிராமி கிப்ட் கொடுக்க வேண்டும் என்று சொல்லி பல்லவியை வர சொன்ன விஷயத்தை சொல்ல தீபா நான் போக மாட்டேன் என பயப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

அட்ஜஸ்ட் பண்ண சொல்றாங்க..! இன்ஃபெக்ஷன் ஆகிடுச்சு! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த அவலம்... அம்மு அமிராமி ஆதங்கம்!
 

Latest Videos

click me!