அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி சண்முகத்திடம் ரொமான்டிக்காக நடந்து கொள்ள வீட்டில் உள்ள எல்லோரும் சந்தோஷம் அடைந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி சண்முகத்திடம் ரொமான்டிக்காக நடந்து கொள்ள வீட்டில் உள்ள எல்லோரும் சந்தோஷம் அடைந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, பரணி மற்றும் சண்முகம் இருவரும் வண்டியில் வந்து கொண்டிருக்க பரணி திட்டுவார் என்பதற்காக சண்முகம் பொறுமையாக ஓட்டுகிறான்.
24
zee tamil Anna serial
ஆனால் பரணி ஏண்டா இவ்வளவு பொறுமையாக ஓட்டுற? நீ இப்பொழுது வேகமாக ஓட்டலைனா தான் திட்டுவேன் என்று பேச சண்முகம் வண்டியை வேகமாக ஓட்ட பரணி அவன் தோள் மீது கை போட்டு சந்தோஷமாக செல்கிறார். இப்படி இருவரும் வேகமாக வண்டியை ஓட்டி செல்ல சனியனும் சௌந்தரபாண்டியனும் ஊர் மக்களுடன் நின்று பேசிக் கொண்டிருக்கும்போது ஷண்முகம் அதற்கிடையில் புகுந்து போகும் போது சனியனின் வேட்டி சண்முகம் வண்டியில் மாட்டி கொள்ள வேட்டி இல்லாமல் நிற்கிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
பிறகு சனியன் நீங்க என்னமோ உங்க பொண்ணு திரும்பி வந்துருவானு சொல்லிட்டு இருக்கீங்க ஆனா அவ அவனை லவ் பண்ணி குடும்பம் நடத்த ஆரம்பிச்சிடுவா போல என்று சொல்ல சௌந்தரபாண்டி டென்ஷன் ஆகிறார். அடுத்ததாக சண்முகம் மற்றும் பரணியை வழி மறிக்கும் ஸ்ரீகாந்த் கோவில் நிர்வாகிகள் உன்னை பார்க்கணும்னு சொன்னாங்க என்று சொல்லி அழைத்துச் செல்கிறான்.
சண்முகம் பிரசிடென்ட் ஆகி சொன்னா மாதிரி எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றுகிறான். அதனால அவனே தர்மகத்தாவாகவும் இருக்கட்டும். இதுவரை தர்மகர்த்தாவாக இருந்த சௌந்திரபாண்டி ஊருக்கும் கோவிலுக்கும் எதுவும் செய்யவில்லை என்று பேசுகின்றனர்.
44
Anna serial today episode
உடனே சௌந்தரபாண்டி ஓடிப்போனவன் பையன் எல்லாம் தர்மகத்தா ஆக முடியுமா அவமானப்படுத்தி பேச வைகுண்டம் சௌந்தரபாண்டியின் சட்டையை பிடித்து என் பையன் தேர்தல்ல நின்னு ஜெயிச்சு தர்ம கர்த்தா ஆவான் என்று சவால் விடுகிறார். சண்முகமும் சவாலை ஏற்று அங்கிருந்து நகர்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.