ஷண்முகம் - பரணி இடையே தொடங்கிய ரொமான்ஸ்... எல்லாம் அதோட மேஜிக் தானாம்! அண்ணா சீரியல் அப்டேட்

First Published | Dec 20, 2023, 12:55 PM IST

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் பரணி கையில் இருந்த மந்திர கயிறை கழட்ட சொல்ல பரணி அது என் கையில் தான் இருக்கும் என பதிலடி கொடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் பரணி கையில் இருந்த மந்திர கயிறை கழட்ட சொல்ல பரணி அது என் கையில் தான் இருக்கும் என பதிலடி கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, பரணி ஷண்முகம் இருவரும் ரூமில் தூங்கி கொண்டிருக்கும் போது திடீரென மந்திர கயிறில் இருந்து ஒரு மாயசக்தி வெளி வர அதன் பிறகு பரணிக்கு தூக்கம் தெளிந்து விட சண்முகம் தூங்குவதை பார்த்த அவளுக்கு தனக்காக ஷண்முகம் செய்த விஷயங்கள் அனைத்தும் நினைவிற்கு வருகிறது. 

zee tamil Anna serial

இதனையடுத்து அவன் போர்வை இல்லாமல் தூங்குவதை கவனித்து போத்தி விட ஷண்முகம் நான் ஒன்னும் பண்ணலையே என்ன எதுக்கு எழுப்பற என்று பதற பரணி நீ போர்வையில்லாமல் தூங்க மாட்டியே அதான் போத்தி விட வந்தேன் என்று சொல்கிறாள். 

ஷண்முகம் இவ  இப்படியெல்லாம் பண்ண மாட்டாளே என்ற குழப்பத்துடன் சரி குடு நானே போதிக்கறேன் என்று போர்வையை கேட்க ஏன் நான் போத்தி விட கூடாதா என்று அவளே போத்தி விட ஷண்முகம் இது கனவா நினவா என்று தெரியாமல் குழம்புகிறான். அதை தொடர்ந்து மறுநாள் காலையில் பரணி கோலம் போட்டு கொண்டிருக்க வைகுண்டம் கையில் தாயத்து இருப்பதை பார்த்து சந்தோசப்படுகிறார். 

Tap to resize

Anna serial update

ஷண்முகம் வெளியே வர வைகுண்டம் போய் என் மருமகளுக்கு குடை பிடி என்று சொல்ல வெயில் தானே காயுது அதுக்கு எதுக்கு குடை பிடிக்கணும் என்று சொல்ல வைகுண்டம் திட்டி அனுப்ப ஷண்முகம் குடை பிடிக்க அதை பார்த்த முப்பிடாதி போலீஸ் புருஷன் பொன்டாட்டினா இப்படி இருக்கனும் என பாராட்டி செல்கிறார். பிறகு பரணி சண்முகத்தின் கன்னத்தில் கலர் கோலமாவை பூசிவிட்டு வருகிறாள்.

Anna serial today episode

அதோடு இல்லாமல் பரணி ரெண்டு புடவையை எடுத்து வந்து ஷண்முகத்திடம் எதை கட்டிக்கட்டும் என்று கேட்க அவன் இன்னும் குழப்பமடைந்து ஒரு புடவையை தேர்வு செய்ய பரணியும் அதை கட்டி வர இதை பார்த்து எல்லாரும் ஆச்சரியப்படுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... ராஷ்மிகாவின் Deep Fake வீடியோ பரப்பியவர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் - சிக்கியது எப்படி?

Latest Videos

click me!