அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி சண்முகத்தை தர்மகத்தா தேர்தலில் நிற்க கூடாது என்று மிரட்டிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி சண்முகத்தை தர்மகத்தா தேர்தலில் நிற்க கூடாது என்று மிரட்ட பரணி அவன் நின்னு ஜெயிப்பான் என்று சவால் விட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, வைகுண்டம் ஷண்முகத்தையும் பரணியையும் எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும், அவர்கள் பிரிந்து விட கூடாது என்பதற்காக மந்திரவாதி ஒருவரை சந்திக்க கிளம்பி செல்கிறார்.
24
Zee Tamil Anna serial
அப்போது அந்த மந்திரவாதி நீ எதுக்காக வந்திருக்கேன்னு தெரியும், உன் பிள்ளையும் மருமகளையும் சேர்த்து வைக்கணும் அதானே என்று கேட்க வைகுண்டம் ஆச்சரியப்பட்டு நிற்கிறார். நீ நினைக்கிறது கண்டிப்பாக நடக்கும் என்று சொல்லி கயிறை கொடுத்து நான்கு நாளைக்குள் இதனை அவங்க ரெண்டு பேர் கையிலையும் கட்டிடு என்று சொல்லி அனுப்புகிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
அதை கொண்டு வந்து மகள்களிடம் கொடுத்து இதை எப்படியாவது பரணி கையில் கட்டிடுங்க, அப்போ தான் உங்க அண்ணனும் அவளும் பிரியாமல் இருப்பாங்க என்று சொல்ல ரத்னா பரணிக்கு இது மேல எல்லாம் நம்பிக்கை கிடையாது, அவ கட்ட மாட்டாள் என்று சொல்ல வைகுண்டம் எப்படியாவது கட்ட வைங்க என்று சொல்ல தங்கைகள் ஓகே சொல்கின்றனர்.
பிறகு பரணியிடம் சாமி கயிறு என்று கட்டி கொள்ள சொல்ல பரணி அதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை, கட்ட மாட்டேன் என்று சொல்ல இங்க பாரு எல்லாரும் கட்டி இருக்கோம் என்று நான்கு தங்கைகளும் கையை காட்ட பரணி சரி இப்போ கட்டிக்கிட்டு நைட் கழட்டி வச்சிடலாம் என்று முடிவெடுத்து கட்டி கொள்ள எல்லாரும் சந்தோசப்படுகின்றனர்.
44
Anna serial today episode
நைட் எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும் போது ஷண்முகம் பரணி கையில் இருக்கும் கயிறை பார்த்து விட்டு உனக்கு இது நல்லாவே இல்ல கழட்டி விடு என்று சொல்ல பரணி நானே நைட் கழட்டி விடலாம் என்று தான் இருந்தேன், நான் நீ இப்படி சொன்ன பிறகு எப்பவும் இந்த கயிறு என் கையில் தான் இருக்கும் என பதில் கொடுக்க வைகுண்டம் சந்தோசப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.