தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சக்தி ரங்கநாயகியை மீறி வீட்டுக்குள் வரவும் பூஜா சக்திக்கு எதிராக எதையாவது செய்யும் படி தூண்டி விடுகிறாள். இதனால் ரங்கநாயகியும் யோசிக்கிறாள்.
24
zee tamil meenakshi ponnunga serial
பூஜாவும் புஷ்பாவும் சக்தியை அடக்கி வைக்க, கார்த்திக்கிற்கு இரண்டாவது கல்யாணத்தை செய்தால் தான் சரியாக வரும் என்று திட்டமிடுகிறார்கள். அதே நேரத்தில் சக்தி பூஜாவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப சரண்யா மற்றும் வெற்றியுடன் சேர்ந்து திட்டமிடுகிறாள். கோகிலா ரங்கநாயகியைப் பார்த்து பேச வர, இதனால் சந்தேகமாகும் சக்தி யமுனாவுக்கு ஃபோன் செய்து, கார்த்திக்கிடம். பேசிப் பார் என்று சொல்கிறாள்.
34
meenakshi ponnunga serial Update
கார்த்திக் நடந்து வந்து கொண்டிருக்க, பிரியா என்னும் ஒரு பெண் அவன் மீது தெரியாமல் ஸ்கூட்டியை மோதி விடுகிறாள். வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. கார்த்திக் அவளுக்கு உதவி செய்கிறான். அப்போது யமுனாவிடம் இருந்து போன் வர, பிரியா போனை அட்டெண்ட் செய்து பேசிவிட்டு, கார்த்திக் பிஸியாக இருக்கிறார் என்று சொல்லி கட் செய்து விடுகிறாள்.
44
meenakshi ponnunga serial today episode
கார்த்திக் போனை ஒரு பெண் எடுத்து பேசி கட் பண்ணியதால் யமுனா அப்செட் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.