பரணி திறக்கும் புதிய மருத்துவமனைக்கு யார் பெயர் சூட்டப்பட்டது? அண்ணா சீரியலில் நடந்த எதிர்பாரா டுவிஸ்ட்

Published : Dec 14, 2023, 01:39 PM IST

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் தங்கைகளிடம் எப்படியாவது நான் எடுத்துக் கொடுத்த புடவையை கட்ட வச்சிடுங்க என்று சொல்லி இருந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

PREV
14
பரணி திறக்கும் புதிய மருத்துவமனைக்கு யார் பெயர் சூட்டப்பட்டது? அண்ணா சீரியலில் நடந்த எதிர்பாரா டுவிஸ்ட்
Anna serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகம் தங்கைகளிடம் எப்படியாவது நான் எடுத்துக் கொடுத்த புடவையை கட்ட வச்சிடுங்க என்று சொல்லி இருந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, பரணி எடுத்த புடவையில் மஞ்சளை கொட்ட வைத்து பிறகு வேறு வழி இல்லாமல் சண்முகம் எடுத்துக் கொடுத்த புடவையை கட்டிக் கொள்ள வைக்கின்றனர் சண்முகத்தின் தங்கைகள். 

24
zee tamil Anna serial

அதனைத் தொடர்ந்து சண்முகம், வெட்டுக்கிளி, ஸ்ரீகாந்த் ஆகியோர் கோவிலில் அர்ச்சனை செய்ய வர அங்கு வரும் சௌந்தரபாண்டி நீ ஊருக்கு வேணா தலைவரா இருக்கலாம் ஆனா இங்க நான் தான் தர்மகத்தா எனக்குத்தான் முதல் மரியாதை என்று சொல்லி சண்முகத்தை வெறுப்பேற்றி அவருக்கு முதல் மரியாதை நடக்க செய்ய சண்முகம் நீங்க ஹாஸ்பிடல் திறப்பு விழாவுக்கு போகலையா என்று கேட்கிறான். 

பாக்கியம் உங்க மாமா எப்படி விடுவாரு என்று சொல்கிறார். உடனே சண்முகம் நான் சொன்ன மாதிரி என் பொண்டாட்டிய கிளினிக் ஆரம்பிக்க வைத்து எல்லாருக்கும் இலவசமா சிகிச்சை கொடுக்க போறேன் என்று சொல்ல அதை கேட்ட சனியன் சௌந்தரபாண்டியிடம் இப்ப நாம அங்க போலனா சண்முகம் எல்லாம் நல்ல பேரையும் வாங்கிட்டு போயிடுவான் என்று ஏற்றி விட சௌந்தரபாண்டி வாடி நம்ப அங்க போலாம் என்று பாக்கியத்தை அழைத்துக் கொண்டு செல்கிறார். அதனைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் அடுத்த தர்மகத்தா சண்முகம் என்று சத்தம் போட சௌந்தரபாண்டி இந்த பதவியையும் நம்மகிட்ட இருந்து பறித்திடுவானோ என பதற்றத்தோடு கிளம்பி செல்கிறார். 

34
Anna serial update

மறுபக்கம் கிளீனிக்கில் எல்லோரும் கூடியிருக்க பேர் என்ன வெச்சிருப்பாங்க என்ற எதிர்பார்ப்பு ஏற சூடாமணி கிளினிக் என்று பேர் வைத்திருப்பதை பார்த்து வைகுண்டம் ஷாக் ஆகிறார். அவர் கண்கலங்கி பரணியிடம் நன்றி சொல்ல, இந்த ஊர் அத்தை பத்தி என்ன வேணா சொல்லலாம், ஆனா என் அத்தையை பத்தி எனக்கு தெரியும், இனிமே அவங்க பேர ஊர் முழுக்க நல்லவிதமாக தான் சொல்லணும் அதுக்காகத்தான் அவங்க பேர வச்சதா சொல்ல வைகுண்டம் கண் கலங்குகிறார். 

44
Anna serial today episode

கீழ இன்னொரு போர்ட் பரணி சண்முகம் என பெயர் இருப்பதை பார்த்த பரணி இதை யார் பண்ணது வெட்டுக்கிளி வேலையா தான் இருக்கும் என கோபப்பட்டு சண்முகத்தின் பெயரை டேப் போட்டு ஒட்டுகிறாள். வைகுண்டம் ஹாஸ்பிடல் திறப்பு விழாவிற்கு வர இன்னொரு பக்கம் சண்முகம் பேஷண்டுகளை மொத்தமாக அழைத்து வருகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன? ஹாஸ்பிடலை திறந்து வைக்கப் போவது யார் என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... திடீரென அந்தர் பல்டி அடித்த அர்ச்சனா... டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் நடந்த எதிர்பாரா டுவிஸ்ட்!

Read more Photos on
click me!

Recommended Stories