தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மாடசாமி பணத்தை கொடுக்க வீட்டிற்கு வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, வீட்டிற்கு வரும் மாடசாமி பரணியிடம் பணத்தை கொடுக்க யார் சொல்லி பணத்தை தரீங்க என்று கேட்க ஒருவர் சொல்லி தான் பணம் தருவதாக சொல்ல ஷண்முகம் ஷாக் ஆகிறான். ஆனால் அந்த நபர் யார் என்று சொல்லாமல் மாடசாமி மழுப்பி விட ஷண்முகம் நிம்மதி அடைகிறான்.
24
zee tamil Anna serial
அதனை தொடர்ந்து மாடசாமி சண்முகத்தின் வீட்டிற்கு பத்திரத்தை கொண்டு சௌந்தரபாண்டியிடம் கொடுக்க அதை வாங்கி கொள்ளும் அவர் இந்த பத்திரத்தை வச்சி அவனை ஒன்னும் இல்லாதவனாக ஆக்குறேன் என்று பிளான் போடுகிறார். பிறகு வீட்டில் நாளைக்கு ஹாஸ்பிடல் திறப்பு விழா என்பதால் பரணி எல்லாருக்கும் புது டிரஸ் எடுத்து வந்து கொடுக்க தங்கைகள் அண்ணனுக்கு இல்லையா என்று கேட்க அவனுக்கு எதுக்கு நான் எடுத்து கொடுக்கணும் என ஷாக் கொடுக்கிறாள். எல்லாரும் புது டிரஸ் போடும் போது அண்ணனுக்கு மட்டும் இல்லனா எப்படி என்று கேட்க பரணி அவனுக்கு எடுத்த டிரஸ்ஸை கொடுக்க ஷண்முகம் சந்தோஷமடைகிறான்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
பதிலுக்கு அவன் பரணிக்காக எடுத்து வந்த புடவையை கொடுத்து நாளைக்கு நீ இதை தான் கட்டிக்கணும் என்று சொல்ல பரணி அதெல்லாம் முடியாது என மறுத்து விடுகிறாள். பிறகு தங்கைகளிடம் நாளைக்கு பரணி நான் எடுத்து கொடுத்த புடவையை தான் கட்டிக்கணும், அதுக்கு நீங்க தான் பொறுப்பு என்று சொல்ல இசக்கி அதை நாங்க பார்த்துக்கறோம் என்று சொல்கிறாள். இதனை தொடர்ந்து ரூமுக்குள் வெங்காயத்துடன் வரும் ஷண்முகம், இதை நைட்டெல்லாம் அக்களில் வச்சிட்டு தூங்கினா காய்ச்சல் வந்துடும்.
44
Anna serial today episode
உன்னுடைய ஹாஸ்பிடலுக்கு முதல் ஆளாக நான் தான் வருவேன். நீ எனக்கு சிகிச்சை கொடுத்து வேலையை ஆரம்பித்தால் ரொம்ப நல்லா போகும் என சொல்கிறான். உடனே பரணி அந்த பக்கம் வந்த விஷ ஊசி போட்டு கொன்னுடுவேன் என்று மிரட்டுகிறான். ஆனாலும் ஷண்முகம் நான் வருவேன் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.