கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் பல்லவியாக ஒரு பெண் கார்த்திக்கிடம் அறிமுகமாக தீபா உண்மையை சொல்லாமல் மறைத்து விட்ட நிலையில் என்ன நடக்க போகிறது என்பதை பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பல்லவியாக ஒரு பெண் கார்த்திக்கிடம் அறிமுகமாக தீபா உண்மையை சொல்லாமல் மறைத்து விட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, தீபா ரூபஸ்ரீயிடம் அடுத்து என்ன செய்வது என பேசி விட்டு வீட்டிற்கு வர கார்த்திக் பல்லவியை கூட்டி கொண்டு வீட்டிற்கு வந்து எல்லாருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறான்.
24
Zee Tamil Karthigai deepam serial
இந்த பொண்ணு ஏற்கனவே நம்ம வீட்டிற்கு வந்து பாடி இருக்கா என்று சொல்ல அபிராமி என்னப்பா சொல்ற, இவங்களை நான் பார்த்ததே இல்லையே என்று கேள்வி எழுப்புகிறாள். உடனே கார்த்திக் ரூபஸ்ரீ உண்மையாக பாடகி கிடையாது, அவங்களுக்காக இவங்க தான் குரல் கொடுத்துட்டு இருந்தாங்க என்று நடந்த விஷயங்கள் அனைத்தும் சொல்ல அபிராமி, அருணாச்சலம் ஆகியோர் அதிர்ச்சி அடைகின்றனர். திரும்பவும் எதுக்கு இவங்களை இங்கே கூட்டிட்டு வந்த என்று கேட்க இவங்க தான் நமக்காக பாட போறாங்க, ரெக்கார்டிங் இருக்கு என்று சொல்ல அபிராமி எப்போ என்று கேட்கிறாள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
கார்த்திக் நீங்களே நல்ல நாளா பார்த்து சொல்லுங்க என்று கேட்க புதன்கிழமை நல்ல நாள் தான் அன்னைக்கே வச்சிக்கலாம் என்று சொல்ல பல்லவி அதுக்கு ரெண்டு நாள் தான் இருக்கு, நான் ஊருக்கு போயிடு திரும்பி வருவது கஷ்டம், அதனால் எனக்கு தங்கிக்க இடம் ஏற்பாடு பண்ணி தாங்க, இந்த வீட்லயே கூட ஓரமாக இருந்துகிறேன் என்று சொல்கிறாள். ஆனால் கார்த்திக் ஹோட்டலில் ரூம் புக் பண்ணுவதாக சொல்ல அபிராமி வேண்டாம் இங்கயே தங்கட்டும் என்று சொல்லி விடுகிறாள்.
44
Karthigai deepam today episode
மேலும் வீட்டில் ஒரு சிறிய பூஜை இருக்கு, அதுக்கு நீங்க தான் பாடணும் என பல்லவியை பாட சொல்கிறாள். அவளும் வேறு வழியின்றி பாட ஒப்பு கொள்கிறாள். பிறகு ஐஸ்வர்யா மற்றும் பல்லவி ரூமுக்குள் சந்திக்க நீ பெரிய ஆளா இருக்க என்று பல்லவியை பாராட்டுகிறாள். மேலும் நீ பாடும் போது கார்த்திக் இருக்க கூடாது அதுக்கு ஏதாவது பிளான் போடணும் என யோசித்து சிதம்பரத்துக்கு தகவல் கொடுக்கின்றனர். தீபாவும் மீனாட்சியும் நடப்பது புரியாமல் நிற்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.