அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி மாடசாமியிடம் ஷண்முகம் தான் தனக்கு பணம் கொடுக்க வேண்டாம் என்று சொன்னதாக நினைத்து சண்டையிட்ட நிலையில் இன்று என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பரணி மாடசாமியிடம் ஷண்முகம் தான் தனக்கு பணம் கொடுக்க வேண்டாம் என்று சொன்னதாக நினைத்து சண்டையிட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ஷண்முகம் மாடசாமி வீட்டிற்கு வந்து உனக்கு போன் பண்ணி நானா பணம் கொடுக்க வேண்டாம் என்று சொன்னேன் என்று சண்டையிட உன் பொண்டாட்டி கிட்ட நீ தான் பணம் கொடுக்க வேண்டான்னு நான் சொல்லல, இலவச ஹாஸ்பிடல் ஆரம்பித்தா அதுல எப்படி பணம் வரும், எனக்கு எப்படி பணம் கட்ட முடியும் அதனால் தான் கொடுக்கவில்லை என சொல்கிறார்.
24
zee tamil Anna serial
பிறகு மாடசாமி சௌந்தரபாண்டிக்கு போன் செய்து ஷண்முகம் வந்து சண்டை போட்ட விஷயத்தை சொல்ல அவர் நான் சொல்ற மாதிரி செய் என்று ஏதோ சொல்ல மாடசாமி சண்முகத்தை கூப்பிட்டு உன் வீட்டு பாத்திரத்தை வேண்டும்னா எடுத்து வந்து கொடு பணம் தரேன் என்று சொல்ல ஷண்முகம் அவனிடம் கோபப்பட்டு வீட்டிற்கு வருகிறான். வீட்டில் பரணி பணம் கிடைக்கவில்லை என்பதால் சாப்பிடவே இல்லை என ரத்னா மூலமாக ஷண்முகத்திற்கு தெரிய வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
உடனே அவன் வைகுண்டத்தை தனியாக அழைத்து சென்று பரணிக்கு பணத்தை ரெடி பண்ண வீட்டு பத்திரத்தை கேட்கிறான். உனக்கு இருக்கிறது இந்த வீடு ஒன்னு தான் என்று சொல்ல அதையெல்லாம் நான் பணத்தை சரியா கட்டிடுவேன் என்று சொல்ல வைகுண்டம் அந்த மாடசாமி கிட்ட மட்டும் வீட்டை வைக்க வேண்டாம் என்று சொல்கிறான்.
44
Anna serial today episode
ஆனால் ஷண்முகம் இவன் கிட்ட வச்சா மட்டும் தான் பரணிக்கு சந்தேகம் வராது என்று சொல்கிறான். அதோடு பத்திரத்தை வாங்கி வந்து மாடசாமியிடம் கொடுத்து நான் வீட்டு பத்திரத்தை கொடுத்த விஷயம் பரணிக்கு தெரிய வேண்டாம் என்று சொல்லி கிளம்ப மாடசாமி பரணிக்கு பணத்தை கொடுக்க வீட்டிற்கு வருகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.