பல்லவி பற்றி தெரிய வந்த உண்மை... அம்பலமான சிதம்பரத்தின் பிளான் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

Published : Jan 12, 2024, 02:43 PM IST

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் சவுண்ட் எஞ்சினியர் உண்மைகளை சொல்ல கார்த்திகை பார்க்க வந்திருந்த நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 

PREV
14
பல்லவி பற்றி தெரிய வந்த உண்மை... அம்பலமான சிதம்பரத்தின் பிளான் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்
Karthigai deepam serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சவுண்ட் எஞ்சினியர் உண்மைகளை சொல்ல கார்த்திகை பார்க்க வந்திருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

24
Zee Tamil Karthigai deepam serial

அதாவது சவுண்ட் எஞ்சினியர் கார்த்திக்கிடம் சிதம்பரம் நீங்க படகு போட்டியில் கலந்து கொண்ட போது உங்களுக்கு பின்னது துப்பாக்கியுடன் ஆட்களை இறக்கி உங்களை கொன்னுடுவேன் என்று பல்லவியை மிரட்டி தான் பாட வைத்தார் என்ற உண்மைகளை உடைக்க கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான். பல்லவி மீது தப்பில்லை என்பதையும் உணர்கிறான். அதனை தொடர்ந்து தீபாவை வைத்து காபி கொடுத்து தன்னுடைய மனைவி என அறிமுகப்படுத்த சவுண்ட் எஞ்சினியர் ஷாக் ஆகிறார். 

இதையும் படியுங்கள்... கணவர் மறைவுக்கு பின்... மொட்டை அடித்துக்கொண்டு ஆளே அடையாளம் தெரியாத அளவு மாறிய விஜய் - அஜித் பட நடிகை

34
Karthigai deepam serial Update

ஆனால் இதில் ஏதோ பிரச்சனை இருக்கு என்பதால் தீபா தான் பல்லவி என்ற விஷத்தை மறைத்து விடுகிறார். கார்த்திக் நீங்க பல்லவியை பார்த்திருக்கீங்களா என்று கேட்க அவர் தீபா மாதிரியே தான் இருப்பாங்க என்று சொல்லி கிளம்ப பின்னாடியே வந்த தீபா நல்ல வேலை நீங்க உண்மையையே சொல்லல என்று  நன்றி சொல்கிறாள். பிறகு கார்த்திக் பல்லவிக்கு போன் செய்து நான் உங்களை தப்பா நினைச்சிட்டேன், நீங்க என் உயிரை காப்பாற்றணும்னு எந்த அவசியமும் இல்ல, ஆனால் என்னை காப்பாத்தி இருக்கீங்க என்று நன்றி சொல்லி போனை வைக்க தீபா சந்தோஷமடைகிறாள். 

44
Karthigai deepam serial Today Episode

பிறகு இந்த விஷயத்தை மீனாட்சியிடம் சொல்லி ஆனந்தம் கொள்கிறாள் தீபா. அடுத்தாக வடநாட்டு கம்பெனி மீட்டிங் தொடங்க சிதம்பரம் அந்த கார்த்திக் எல்லாம் வர வாய்ப்பே இல்லை என்று சொல்லி கொண்டிருக்க மாஸ் என்ட்ரி கொடுக்கிறான் கார்த்திக். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... Kalki 2898 AD Release Date: பிரபாஸ் நடித்துள்ள 'கல்கி 2898 AD' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Read more Photos on
click me!

Recommended Stories