Karthigai deepam serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சிதம்பரம் பல்லவி பாடிய பாடலை காட்டி அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, கார்த்திக் மற்றும் இளையராஜா என இருவரும் காரில் சென்று கொண்டிருக்கும் போது பல்லவி போனில் இருந்து போன் கால் வர கார்த்திக் போனை எடுக்காமல் அவாய்ட் செய்கிறான், ஆனாலும் தீபா திரும்ப திரும்ப போன் செய்ய கார்த்திக் போனை எடுக்கிறான்.
Zee Tamil Karthigai deepam serial
பல்லவி உங்களிடம் கொஞ்சம் பேசணும் என்று சொல்ல கார்த்திக் இன்னும் பேச என்ன இருக்கு, அதான் போய் பாடி கொடுத்துட்டல அப்புறம் என்ன என்று கேட்க பல்லவி மன்னிப்பு கேட்க கார்த்திக் நான் எதிரியை கூட மன்னிப்பேன், ஆனால் நம்பிக்கை துரோகியை மன்னிக்கவும் மாட்டேன். என் பக்கத்தில் வச்சிக்கவும் மாட்டேன் என்று சொல்லி போனை வைக்க தீபா வருத்தப்படுகிறாள். அடுத்து தீபா வெளியில் செல்லும் போது அவள் எதிரே நடந்து வந்த ஒரு குழந்தை மற்றும் அம்மா மீது கார் மோத வர தீபா இருவரையும் காப்பாற்றுகிறாள்.
இதையும் படியுங்கள்... கடலோரத்தில் ஒரு காஸ்ட்லி பங்களா.. ரூ.100 கோடி செலவில் ஷில்பா ஷெட்டி கட்டிய பிரம்மாண்ட வீட்டில் இத்தனை வசதிகளா?
Karthigai deepam serial Update
இருந்த போதிலும் லேசான காயம் ஏற்பட தீபா அவர்களை ஹாஸ்பிடல்க்கு அழைத்து செல்கிறாள். அந்த பெண்மணி தனது கணவருக்கு போன் செய்து குழந்தைக்கு அடிபட்ட விஷயத்தை சொல்லி ஹாஸ்பிடல் வர சொல்கிறாள். ஹாஸ்பிடல் வந்த அவர் தீபாவை பார்க்க இது பல்லவி தானே என்று குழப்பம் அடைகிறார், காரணம் சிதம்பரம் ஆபிஸில் வேலை செய்யும் சவுண்ட் எஞ்சினியர் இவர் தான். தீபா பாடிய பாடலை ரெகார்ட் செய்ததும் இவர் தான் என்பது தெரிய வருகிறது. ஆனால் தீபாவுக்கு இவரை பற்றி எதுவும் தெரியவில்லை.
Karthigai deepam serial Today Episode
தீபா கிளம்பி வந்ததும் அவரது மனைவி என்னங்க அந்த பொண்ணையே பார்த்திட்டு இருக்கீங்க என்று கேட்க சிதம்பரம் இந்த பொண்ணை வற்புறுத்தி பாட வச்சார், அந்த பொண்ணு பேர் பல்லவி எனவும் சொல்கிறார். இதனை தொடர்ந்து மறுநாள் ஆபிஸ் வரும் சிதம்பரம் பாட்டெல்லாம் கரெக்ட்டா தானே இருக்கு, ஒரிஜினல் மட்டும் இருக்கட்டும், வேற எங்கயும் காபி வச்சிக்க வேண்டாம் என்று சவுண்ட் ரெக்கார்டரிடம் சொல்கிறார். பிறகு அங்கு வரும் ஐஸ்வர்யா சிதம்பரத்தை பாராட்ட அவர் இதெல்லாம் எதுவும் வெளியில் தெரியாமல் பாத்துக்க என்று சொல்லி அனுப்புகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... தம்பி பாலா, அறந்தாங்கி நிஷாவின் செயல் மனிதநேயம் உயிரோடு இருப்பதை காட்டுகிறது - சீமான் புகழாரம்