கார்த்திக்கை அவமானப்படுத்திய சிதம்பரம்... தற்கொலைக்கு முயலும் தீபா - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

First Published | Jan 9, 2024, 4:21 PM IST

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ரெசார்ட்டில் இருந்து எல்லோரும் கிளம்பி வீட்டுக்கு வந்த நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 

Karthigai deepam Serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியல் நேற்றைய எபிசோட்டில் ரெசார்ட்டில் இருந்து எல்லோரும் கிளம்பி வீட்டுக்கு வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, சினேகா தீபாவை தடுத்து நிறுத்தி என்னை நீங்க சொல்லாம கொள்ளாமல் லீவ் போட்டுட்டீங்க என்று கேள்வி கேட்க நான் பெரிய பாஸ்கிட்ட சொல்லிட்டு தான் லீவு போட்டேன் என்று அவளை ஆப் பண்ணி விட்டு உள்ளே செல்கிறாள். 

Zee tamil Karthigai deepam Serial

கார்த்திக் இளையராஜாவிடம் பல்லவி பாடுவதற்கு தேவையான எல்லாம் ஏற்பாடுகளையும் செய்ய சொல்கிறான். கோவிலுக்கு சென்று வந்ததாக சொல்லி பிரசாதத்துடன் மீனாட்சியும் இங்கு வர பிறகு ஆபீசுக்குள் வரும் சிதம்பரம் கார்த்திக்கிடம் பல்லவி பாடிய பாடலை காட்ட அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறான். சிதம்பரம் தெரியாம இந்த பீல்டுக்குள்ள வந்துட்டீங்களே தம்பி என்று சொல்லி அங்கிருந்து எழுந்து செல்ல கார்த்திக் கடுப்பாகிறான். 

இதையும் படியுங்கள்... இனிமே நோ வில்லன்... ஒன்லி ஹீரோ! அதிரடியாக அறிவித்த விஜய் சேதுபதி - திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

Tap to resize

Karthigai deepam Serial Update

இளையராஜா கார்த்திக்கிடம் பேச போக என்னை கொஞ்சம் தனியா விடுங்க என்று சத்தம் போட எல்லோரும் கிளம்பி வெளியே வந்து விடுகின்றனர். என்னால் தான் கார்த்திக்கு இந்த அவமானம் என்று தவிக்கும் தீபா இங்கிருந்து வெளியே கிளம்ப மீனாட்சி அவளை பின் தொடர்ந்து செல்கிறாள். தீபா முருகன் கோவில் சென்று இனிமேலும் என்னால் பொய் சொல்லி வாழ முடியாது என்று தற்கொலை முயற்சி செய்ய முடிவெடுக்க தடுத்து நிறுத்தும் மீனாட்சி இதற்கான காரணங்களை நிரூபித்து கார்த்தி உடன் நீ வாழ வேண்டும் என தீபாவின் மனதை மாற்றி கூட்டி வருகிறாள். 

Karthigai deepam Serial today episode

அடுத்ததாக கார்த்திக் தீபா வீட்டுக்கு வர அபிராமி இடம் பல்லவி சிதம்பரத்திற்காக பாடிய விஷயத்தை சொல்ல இது பெரிய நம்பிக்கை துரோகம் என்று கோபப்படுகின்றனர். ரூமுக்கு வந்த கார்த்தியும் பல்லவி இப்படி செய்திருக்கக் கூடாது என புலம்ப தீபா அவங்களுக்கு ஏதாவது பிரச்சனையோ என்னவோ என்று சொல்ல எப்படி இருந்தாலும் அதை என்கிட்ட சொல்லி இருக்கலாம். இது பெரிய நம்பிக்கை துரோகம் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... Shakeela Love: தன்னை விட வயதில் குறைவான... அஜித் மச்சினன் ரிஷியுடன் ஷகீலாவுக்கு மலர்ந்த காதல்! இது எப்போ?

Latest Videos

click me!