Anna serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாண்டியம்மா படு மாஸாக என்ட்ரி கொடுத்ததை தொடர்ந்து இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, பாண்டியம்மா லாயர் மூன்று பேரை வைத்து கட்டு கட்டாக பணத்தை எடுத்து கொடுத்து நாளைக்கு என் தம்பி வெளியே இருக்கணும் என்று சொல்ல அவர்களும் கண்டிப்பாக வெளியே எடுத்துடுறோம் என்று வாக்கு கொடுத்து விட்டு கிளம்புகின்றனர்.
zee tamil Anna serial
இதனை தொடர்ந்து ஷண்முகம் பரணியை அழைத்து கொண்டு கிளினிக்கு வந்து கொண்டிருக்கும் போது வழியில் கபடி போட்டி பற்றி ஒரு பேனரை பார்க்கின்றனர். அதில் தை பொங்கலுக்கு கபடி போட்டி நடக்க போவதாகவும் முதல் பரிசு 1 லட்சம் இரண்டாவது பரிசு 50 ஆயிரம் மற்றும் மூன்றாவது பரிசு 20 ஆயிரம் எனவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதோடு பரிசு கொடுக்க போவது பிரசிடெண்ட் என இருப்பதை பார்த்து பரணி ஷாக் ஆகிறாள்.
இதையும் படியுங்கள்... இறைவன் படத்தின் படுதோல்வி எதிரொலி... அடுத்த படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்கிறாரா ஜெயம் ரவி?
Anna serial Update
என்னடா இதெல்லாம் உனக்கு 4 தங்கச்சிங்க இருக்காங்க, அதெல்லாம் உனக்கு நியாபகம் இருக்கா இல்லையா என்று கேள்வி கேட்க அந்த கபடி போட்டியில் நம்ம ஊர் சார்பாக ஷண்முகம் விளையாட போறான் என்ற விஷயமும் தெரிய வருகிறது. இதை சனியன் கேட்டு விடுகிறான். இங்கே பாண்டியம்மா சொன்னபடி சௌந்தரபாண்டி வெளியே வர வீட்டிற்கு வெளியே கபடி போட்டி பற்றிய பேனர் இருப்பதை பார்த்து பயங்கர கடுப்பாகிறார். சனியன் ஷண்முகம் விளையாடவும் போறான் என்று சொல்ல பாண்டியம்மா அவன் விளையாட போறானா? அப்போ நாமளும் விளையாடுவோம் என்று சொல்கிறாள்.
Anna serial today episode
பிறகு இவர்கள் ஒரு ரூமுக்குள் கூடி சண்முகத்தை பழி தீர்க்க பிளான் போட பாக்கியம் என்ன விஷயம் என்று தெரிந்து கொள்ள காபி கொண்டு வர அவள் வரும் போது அமைதியாகி விடுகின்றனர். பிறகு ஷண்முகம் வீட்டிற்கு வர பொங்கல் பண்டிகைக்காக சுத்தம் செய்யும் வேலைகள் நடந்து கொண்டிருக்க ஷண்முகம் நான் செய்யறேன் என்று வேலை செய்ய தொடங்க பதறி அடித்து ஓடி வரும் சிவபாலன் பாண்டியம்மா, சௌந்தரபாண்டி ஏதோ பிளான் போடுவதை பற்றி சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... காத்திருந்த எச்.வினோத்... கைவிட்ட கமல்ஹாசன்! மருதநாயகம் போல் டிராப் ஆன KH233 - காரணம் என்ன?