ஜீ தமிழ் தொலைக்காட்சியில், இன்றைய எபிசோடில் மகேஷ் - மாயா உறவை அம்பலப்படுத்த நினைக்கும் நிலையில் இருவரும், கார்த்தியின் வலையில் சிக்குவார்களா... இருவரின் உறவு அம்பலமாகுமா? என்பது பற்றி பார்க்கலாம்.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலையில், இன்றைய தினம் ஜீ தமிழ் கார்த்திகை தீபம் சீரியல் பற்றிய தகவலை பார்ப்போம்.
26
நெக்லஸை பார்த்து வாய் பிளர்ந்த மாயா:
கார்த்திகை தீபம் தொடரில், நேற்றைய தினம் ரேவதிக்கு... சாமுண்டீஸ்வரியின் தோழி கிப்டாக கொடுத்த வைர நெக்லஸ் செட்டை பார்த்து வாய் பிளர்ந்த மாயா, எப்படியும் அதை அடைய துடிக்க, பின்னர் கார்த்திக் அந்த நகையை மறைத்து வைத்து விட்டு மாயாவை - சாமுண்டீஸ்வரி, மற்றும் ரேவதியிடம் திட்டுவாங்க வைக்கிறார். இந்த நிலையில் இன்றைய தினம் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
திருமணத்தை நடத்தி முடிப்பதில் ஆர்வம் காட்டும் மகேஷ்
அதாவது மகேஷ் மற்றும் மாயா என இருவரும், திருமணத்தை நிறுத்த சதி திட்டங்கள் நடப்பதை மோப்பம் பிடித்து விட்டதால், எப்படியாவது இந்த திருமணத்தை யாருக்கும் எந்த ஒரு சந்தேகமும் வராதபடி நடத்தி முடித்து விட வேண்டும் என பேசி கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தான் கார்த்திக் மற்றும் மயில்வாகனம் இருவரும் எதேர்சையாக வீட்டுக்குள் வருகிறார்கள்.
46
கார்த்தியுடன் கிளம்பி சென்ற மகேஷ்:
திருமணம் நெருங்கி விட்டதால், மகேஷுக்கு கோர்ட் எடுக்க வேண்டும் என சாமுண்டீஸ்வரி அம்மா உங்களை கடைக்கு கூட்டிட்டு போக சொன்னதாக சொல்லி, இருவரும் மகேஷை அழைக்க... இது திருமணம் சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால் மகேஷ் எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் அவர்களுடன் கடைக்கு கிளம்பி செல்கிறார்.
இவர்கள் கடைக்கு வந்து கோர்ட்டை பார்த்துக் கொண்டிருக்கும்போது, கார்த்திக், ராஜராஜனுக்கு போன் செய்து சொன்ன மாதிரி அந்த பிளானை செய்து முடிச்சிடுங்கள் என கூறுகிறான். இதை தொடர்ந்து ராஜராஜன் மாயா வீட்டிற்கு வந்து, சாமுண்டீஸ்வரி உங்கள பாக்கணும்னு சொன்னா.. உங்க போன் ரீச் ஆகவே மாட்டேங்கிறதாம் என கூறி கோவில்ல இருக்காங்க போய் பாத்துட்டு வாங்க என்று அனுப்பி வைக்கிறான்.
66
மாயாவின் செல்போன் பறிபோனது
மாயாவும் இதை நம்பி, ஒரு ஆட்டோவில் கிளம்பி கோயிலுக்கு போக, அந்த ஆட்டோ ரிப்பேர் ஆகி நிற்கிறது. இதற்கிடையில் மின்னல் வேகத்தில் யாரோ ஒருவன் மாயாவின் கவனத்தை திசை திருப்பி, அவளது போனை திருடி செல்கிறான். பின்னர் தான் மாயாவுக்கு இது அனைத்தும் உண்மையை வர வைப்பதற்காக கார்த்திக் போடும் திட்டமா என சந்தேகம் எழுகிறது.
இப்போது கார்த்தியின் வலையில் மாயா மற்றும் மகேஷ் இருவரும் கொத்தாக சிக்கி உள்ள நிலையில், இவர்களை பற்றிய உண்மைகள் அம்பலம் ஆகுமா? தீபா நினைவில் இருந்து வெளியேறி ரேவதி கழுத்தில் கார்த்தி தாலி காட்டுவானா? என்பதை அறிந்து கொள்ள கார்த்திகை தீபம் தொடர்ந்து தொடர்ந்து பாருங்கள்.