Baakiyalakshmi: முடிவுக்கு வருகிறதா பாக்கியலட்சுமி சீரியல்? சுசீத்ரா ஷெட்டி செயலால் எழுந்த சந்தேகம்!

Published : Feb 20, 2025, 06:08 PM IST

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த பாக்கியலட்சுமி சீரியலானது முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது  

PREV
14
Baakiyalakshmi: முடிவுக்கு வருகிறதா பாக்கியலட்சுமி சீரியல்? சுசீத்ரா ஷெட்டி செயலால் எழுந்த சந்தேகம்!
பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் சுசீத்ரா ஷெட்டி பாக்கியலட்சுமியாக நடிக்கிறார். அவருடன் இணைந்து சதீஷ் குமார் (கோபிநாத்), ரேஸ்மா பசுபுலேட்டி (ராதிகா),  ராஜலட்சுமி (ஈஸ்வரி), நவீன் பிரின்ஸ், அக்‌ஷிதா அசோக் என்று ஏரளமான பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
 

24
3 வருடங்களை கடந்து சக்கை போடு போடும் தொடர்

கிட்டத்தட்ட 1220 எபிசோடுகளை கடந்து 3ஆண்டுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், கூடிய விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. அதற்க்கு ஏற்ற போல் ராதிகாவும் பாக்கியா வாழ்க்கையை விட்டு விலகி விட்டார். பாக்கியா - கோபியின் மகன்கள் இருவருமே நல்லபடியாக செட்டில் ஆகி விட்டனர்.

எதிர்நீச்சல் 2-வில் பட்டாசாய் எண்ட்ரி ஆன பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!
 

34
இனியாவின் லவ் டிராக்:

அதே நேரம், செல்வியின் மகனுக்கும் - இனியாவுக்கும் லவ் ட்ராக் சென்று கொண்டிருந்தாலும் அது எங்கு போய் முடியும் என்பது தெரியவில்லை. ஆனால் பாக்கிய லட்சுமி சீரியலில் இடியாப்ப சிக்கலை இருந்த பல பிரச்சனைகள் தீர்ந்து விட்டதாலும், இந்த சீரியலின் நாயகி வேறு ஒரு சீரியலில் நடித்து வருவதாலும் இந்த சந்தேகம் எழுந்துள்ளது. 
 

44
சுசித்ரா நடிக்க தொடங்கிய புது சீரியல்

ஆம் பாக்கியலட்சுமி சீரியலில், கதையின் நாயகியாக நடித்து வரும் சுசீத்ரா ஷெட்டி, இப்போது புதிய சீரியலில் நடிக்க தொடங்கியுளளார். அது ஒரு கன்னட சீரியலாகும். இந்த தொடருக்கு சிந்து பைரவி என பெயரிடப்பட்டுள்ள நிலையில், இதன் புரோமோ வெளியாகி உள்ளது.  கபடி விளையாட்டு போட்டிகளுடன் புரோமோ வீடியோ தொடங்குகிறது. கன்னட சேனலான உதயாவின் இந்த தொடர் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடித்தக்கது.

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென விலகும் ரேஷ்மா? இதுதான் காரணமா?

Read more Photos on
click me!

Recommended Stories